கடுகு 321
ககில் உயரமான பின்பருவ வகை, குட்டை யான முன்பருவ வகை 町 BM இரண்டு வகைகள் உள்ளன. ரண்டாம் வகை மேலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சொரசொரப்பான இலையைக் கொண்டவை, வழுவழுப்பான லையைக் கொண்டவை எனப்படும். இந்தியக் கடுகில் இருவகைகள் உள்ளன. பி. ஜான்சியா வகை க்யுனிஃபோலியா இளம் செடிகள், கறுத்த-நீலநிற ஆப்பு வடிவ இலைகளைத் தரைமட்டத்திலேயே பெற்றிருக்கும். இலைகள் இலைக்கோஸ் (cabbage) இலைகள் போல் இருக்கும். குருத்து இலைகளையும் ளந்தண்டுகளையும் உணவாகக் கொள்வதுண்டு. பி, ஜான்சியா வகை ரூகோஸா. சிறிய தண்டைக் கொண்டது. பூக்கும் சமயத்தில் தண்டு நீண்டு உயரமான செடியாக வளரும். மேற்கு, மத்திய, கிழக்கு இமயமலைப் பகுதிகளில் குளிர்காலப் பயிராகக் குறைந்த அளவில் பயிரிடப்படுகிறது. நேபாளத்தில் இதைக் கறிகாய்ச் செடியாகவே காய வைத்து ஊறுகாய் போடுவதுண்டு. சாகுபடி. பீகார் மாநிலத்தில் பெருமளவில் கடுகு வயல்கள் உள்ளன. மேலும் உத்தரப்பிரதேசத்திலும் வங்காளத்திலும் பயிரிடப்படுகிறது. இவ்வினத்தின் கடுகு 321 சாகுபடி எகிப்து, ஐரோப்பா முதல் சீனா வரை பரவியுள்ளது. கடுகு விதைகளைத் தனியாகவோ பட்டாணி, பார்லியுடன் சேர்த்தோ தெளிப்பதுண்டு. பட்டாணிக் கொடி கடுகுச் செடியைக் கொழு கொம்பாகப் பயன்படுத்திக் கொள்ளும். இம்முறை யில் சாகுபடி செய்தால், கிடைக்கும் பட்டாணிக் காய்களின் அளவு, தனியாகப் பயிரிடுவதைவிட மிகுதியாக இருக்கும். கடுகுச்செடி மானாவாரிப் பயிராகும். ஓர் ஏக் கருக்கு 500 கிலோ கொடுக்க வல்லது. பிற இந்திய எண்ணெய்க் கடுகுகளைவிட. இக்கடுகு மிகு வீரியத் துடனிருப்பதால் பூச்சி, பூஞ்சைநோய்களால் தாக்கப் படுவதில்லை. தனி வழித் தேர்வு மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆர். டி. 11 என்னும் வகை அசுவனிப்பூச்சித் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கக்கூடியது. மேலும் இது ஏக்கருக்கு 540-720 கிலோ வரை விளையும். கடுகு விதையில் காணப்படும் பொருள்கள். ஈரப் பசை 6.2%, கொழுப்பு 35.5%; நைட்ரஜன் பொருள் கள் 24.5%, நைட்ரஜன பகுதி 20.4%; நார் 8% சாம்பல் 5.3%கடுகு எண்ணெய் அளவு 30-38% ஆகும். உத்தரப் பிரதேசத்தில் பயிரிடப்படும் வகை CD