கடைசல் பொறி 323
கடைசல்பொறி 313 கொதிக்க வைத்து இறக்கி வேளைக்கு குவளை வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடக் காய்ச் சல் நீங்கும். கடுகுரோகணியை எலுமிச்சம் பழச் சாறு விட்டு மை போல அரைத்து, படை உள்ள இடத்தைக் கிருமி கொல்லிச் சோப்பைக் கொண்டு தூய்மை செய்துவிட்டு மருந்தைப் போட வேண்டும். ஒவ்வொரு நாளும் இரவில் போட்டுக் காலையில் தூய்மை செய்து மருந்தைப் போட்டு. மாலையில் காற்றாட விட்டு மீண்டும் இரவில் மருந்தைப் போட வேண்டும். இந்த மருந்து மூன்றே நாளில் படை யைப் போக்கும். சே. பிரேமா நூலோதி. எஸ். ஏ. சூசைராஜா, கடைச்சரக்கு சென்னை, முறைவைத்தியம் வீரபத்திரர் அச்சகம், 1981. கடைசல்பொறி ஓர் உலோகத் தண்டை விரும்பிய உருவத்திற்கும், அளவிற்கும் கொண்டு வரும் பொருட்டு, தேவையற்ற உலோகப் பகுதிகளைக் கடைந்து நீக்குவதே கடைசல் பொறியின் (lathe) பயனாகும். உலோகத் தண்டைக் கடைசல்பொறியில் இறுகப் பற்றிச் சுழலச் செய்து வெட்டும் கருவியால் தேவையற்ற உலோகப் பகுதி களைச் சீவல்களாக (chips) நீக்கலாம். இவ்வேலை சீராக நிகழ வெட்டும் கருவி உலோகத் தண்டை விடக் கடினமானதாகவும், வலிமை மிகுந்ததாகவும் இருக்க வேண்டும். உளி அடிப்பகுதி (pedastal), படுகை (bed), தலைப் பகுதி (headstock), வால்பகுதி (tail stock), களுடன் நகரும் பகுதி (carriage), ஊட்டும் அமைப்பு, தலைப்பகுதி உளிதாங்கி பற்றும் கருவி சுழலும் மையம் கோணத்திசை நகர்த்தி உளிகளுடன் நகரும்பகுதி தலைமைத் திருகு தூண் ஊட்டுகோள் படம் 1. கடைசல் பொறி சுழலா மையம் துளைத்தண்டு வால் பகுதி படுகை