கசையிழையுயிரிகள் 15
வதற்காகத் தேக்கி பாராமைலம் எனப்படும். வைக்கும். இத்துணுக்குகள் தாவரக் கசையிழையுயிரிகளில் ஸ்டிக்மா (stigma) என்ற ஒளி உணர்வுப்புள்ளி உண்டு, ஹீமட்டோக் குரோம் என்ற செந்நிறத் துணுக்குகள் இதில் நிரம்பியிருக்கின்றன. கரு இனப்பெருக்கத்தின்போது சாதாரணமாகச் செல் லின் ஒரு பிளவினால் ஓர் உயிரி இரண்டாகிறது. சில வேளைகளில் இரண்டு சாதாரண உயிரிகள் ஒன்றோடொன்று ரண்டறக்கலந்து ஒரே செல்லா கின்றன. இதற்குக் கருவணு என்று பெயர். வணு பின்னர் பல சிறு துணுக்குகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு துணுக்கும் புதிய வலிவூட்டப்பெற்ற கசையிழையுயிரி ஆகிறது. இம்முறைக்கு இனப் பெருக்கச் செல்களின் சேர்க்கை (syngamy) என்று பெயர். தாவரக் கசையிழையுயிரியில் வ்வகை இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகிறது. விலங்குக் கசையிழையுயிரிகளில் நிறமிகள் இருப்ப தில்லை. உணவாகும் துணுக்குகளையும், நுண்ணிய உயிரிகளையும். விலங்குகளைப் போல் தொகுத்துத் தமது உடலில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உட்கொள்ளுகின்றன. பல இனங்கள் ஒட்டுண்ணிகளாகவும், மட்குண்ணிகளாகவும் வாழ் கின்றன. இலை. இரண்டிற்கும் மேற்பட்ட கசை யிழைகளை உடையனவாக ருக்கின்றன. உணவுப் பொருள்களைத் தயது சைட்டோபிளாசத்தில் சேர்த்து வைக்கும் பண்பு இருந்தபோதும் அவ்வாறு இவை சேர்த்த பொருள்கள் மாவுப்பொருளாகவோ அமைலாயிடுகளாகவோ இருப்பதில்லை. இவ்வினங் களில் சின்சுமி முறையில் இனப்பெருக்கம் நடை பெறாது. கிரிப்டோ கோப்ரோ கிரிஸ் அமீபா, சைனுரா, அக்ரோமோனாஸ், யூரோகிளீனா, கைலோமோனாஸ், மோனாஸ், யூக்ளினா, பாரானீமா, மோனாஸ், வால்வாக்ஸ், வேக்யோலேரியா,நாக்டீ லூக்கா, செரேசியம் போன்ற பேரினங்கள் தாவரக் கசையிழையுயிரிகளுக்குச் சிறந்த சான்றுகளாகும். மாஸ்டிக் அமீபா, ஆக்டினோமோனாஸ் புரோட் டிரோஸ்பான்ஜீயா, உரிப்பனோ சோமா, லீஷ் மேனியா. டிரைக்கோமோனாஸ் ஜியாந்திடியா, டிரைக்கோநிம்ஃபா போன்ற பேரினங்கள் விலங்கின் கசையிழையுயிரிகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். கசையிழை. உடல் செல்லின் சைட்டோபிளா சத்திலிருந்து நீண்ட நூல்போல் புறத்தே நீண்டி ருக்கிற, விரைவாக வளைந்து நெளியும் தன்மை யுடைய, மிகவும் மெல்லியதான பகுதிக்குக் கசை யிழை என்று பெயர். நீரில் நீந்தி ஓர் இடம் விட்டு மற்றோர் இடம்பெயரவும், தண்ணீரில் சுழற்சி ஏற்படுத்தி உணவுத் துகள்களைத் தன்னிடத்தே ஈர்க் கசையிழையுயிரிகள் 15 கவும், பற்றுறுப்பாக்கித் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவும், தான் வாழும் நீரின் சுற்றுப்புறச் சூழலை ஆராய ஓர் உணர்விழையாகவும் கசையிழை பயன் படுகிறது. து உருளை போலவோ நீண்ட நாடா போலவோ இருக்கும். இதன் நடுவில் விறைப்பான. வளைந்து நிமிரக்கூடிய, நீட்டுப்போக்கில் அமைந்த ஓர் அச்சு இழை (axoneme) உண்டு. ஒருசைட்டோ பிளாச உறை தனைச் சூழ்ந்து காணப்படும். நீட்டுப் போக்கில் அமைந்த பதினொருசிற்றிழை களின் தொகுதியே அச்சு இழையாகும். இவ்வாறு காணப்படும் சிற்றிழைகளில் இரண்டு இழைகள் மையப்பகுதியிலும், எஞ்சிய ஒன்பதும் அதனைச் சூழ்ந்து ஒரு வளையம் போல் ஒன்றுக்கொன்று சம இடைவெளியிலும் அமைந்திருக்கும். மேலும், கசை யிழையில் காணப்படும் உறையிலும் நுண்ணிழைகள் உண்டு. இவ்விழைகள் மாஸ்டிகோநீம்ஸ் (mastigo- nemes) எனப்படும். ஒருகுறிப்பிட்ட இனக் கசையிழை ழ யுயிரியில் அதற்கே உரிய பாங்கில் மாஸ்டிகோ நீம்கள் அடுக்கப்பட்டுள்ளமையால் இனவேறுபாடுகளைப் கொள்ளலாம். பகுத்தறியும் பண்பாக இதைக் சான்றாக யூக்ளினாவின் கசையிழையில் இவை ரேவரிசையில் நீட்டுப்போக்கில் அமைந்துள்ளன. உயிரியின் முன்பகுதியுடன் கசையிழை இணைந் திருக்கும். இவ்விணைப்பு நேரடியாகவோ முன் புறத்தில் காணப்படும் செல் - தொண்டை (cytoph- arynx) என்னும் குழியுடனோ ஏற்பட்டிருக்கும். எவ்வாறு இருப்பினும் கசையிழையின் அச்சு இழை பிளெஃபரோபிளாஸ்ட் (blepharoplast) என்னும் துணுக்கிலிருந்தே புறப்படுகிறது. இத்துணுக்கு, உயிரியின் நியூக்ளியசோடு ரைசோபிளாஸ்ட் (rhizo- plast) என்னும் நுண்ணிழையினால் ணைக்கப் பட்டிருக்கும். தன்னிச்சையாக வாழும் சுகையிழையுயிரியில் பெரும் அளவு இரண்டு கசையிழைகளே உண்டு. 10 . ஆனால் ஒட்டுண்ணியாக வாழும் ஜியார்டியா போன்றவற்றில் பவ இழைகள் இருப்பதைச் சாதாரணமாகக் காணலாம். இழைகள் அமைந்திருக் கும் இடத்தைப் பொறுத்து இழைகளின் நீட்சி, தொழில் ஆகியவை பலவாறு வேறுபடுகின்றன. இருப்பவையில் ஒன்று முக்கியக் கசையிழையாகவும் மற்றவை சிறிய துணையிழைகளாகவும் செயலாற்று கின்றன. டிரிப்பனோசோமாவில் நீண்ட இழை ஒன்று உடலின் பிளாஸ்மா சவ்வுக்குக் கிடையாகக் காணப் படுகிறது. இவ்விழை அலைபோல் அசையும் தன்மை யுள்ள ஒரு மெல்லிய சவ்வினால் (undulating membrane) பிளாஸ்மா சவ்வோடு இணைந்திருக்கும். இவ்வமைப்பு உயிரி முன்னேறிச் செல்ல உதவுகிறது. யூக்ளீனாவின் கசையிழை சாட்டைபோல் நீரில் பக்கவாட்டில் மிகவும் வேகமாகவும் அதிக விசையுட னும் அடிக்கப்படுகிறது. இதனால் உயிரி முன்னால் நகருகிறது. அதைத் தொடர்ந்து கசையானது.