பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 கண்‌

332 கண் என்னும் இடத்தின் வழியாக மட்டுமே ஒளி உட்புக முடியும். கண்ணின் முன் பகுதியில், புடைத்துக் குமிழ் வடிவத்தில் உள்ள கருவிழிப்படலம் வழியாகத் வெளியே தெரியும். பார்க்கும் தான் கருவிழி பொருள்களிலிருந்து எதிர்பலித்து வரும் ஒளிக் கதிர் கள் முதன் முதலாகக்கருவிழிப் படலத்தில் கோட்ட முறுகின்றன. விழியடிக்கரும்படலம். கண்ணின் பல பகுதிகளுக் கும் ஊட்டமளிக்கும் இரத்தக் குழாய்களால், ஒரு வலையைப்போல பின்னப்பட்டிருக்கும் விழியடிக் கரும்படலம் மிகவும் தடித்தும். சுறுப்பு நிறமாகவும் உள்ளது. இதன் மையத்தில் பாவை (pupil) என்னும் சிறிய துளையும், பாவையைச் சுற்றிலும் விழித்திரை (iris) என்னும் வட்டத்திரையும் உள்ளன. இதில் இரு வகைத் தசை இழைகள் உள்ளன. ஒருவகைத் தசையிழைகள் சுருங்கும்போது பாவையும் சுருங்கும். மற்றவகைத் தசை இழைகள் சுருங்கினால் பாவை விரியும். விழித்திரை பொதுவாகக் கறுப்பாக இருக் கும். சிலருக்கு நீலமாகவோ, புகை நிறமாகவோ இருக்கலாம். மையத்துளை வழியாக மட்டும் ஒளி உட்புகும். பாவை மிகு ஒளியில் சுருங்கும் தன்மை யும், குறை ஒளியில் விரியும் தன்மையுமுடையது.