பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்‌ இமைகள்‌ 333

பார்வைப்படலம். மிக்க நுண்மையும் வெண்மை யுமுடைய இது ஒளித்திரை எனப்படும். இது கண் ணில் மிகு ஆழத்தில் உள்ளது. கண் குழியின் இறுதியில் இருக்கும் துளையின் வழியாகக் கண்ணில் புகுந்து, சிறுசிறு நார்களாகப் பிரிந்து பரவியுள்ள பார்வை நரம்பால் (optic nerve) இது ஆக்கப் பட்டுள்ளது. கருவிழிப்படலத்தின் பின்புறமாக முன் கணீர் (aqueous humour) என்னும் உவர்நீர் உள்ளது. கண்குழியின் இறுதியில் முட்டையின் வெள்ளைக் கருவை ஒத்த நிறமும் தடிப்பும் வாய்ந்த கூழ்நீர் நிறைந்துள்ளது. இது பின் கணீர் (vitreous humor} எனப்படும். கண்ணின் சவ்வுகள் உலராமலிருப்பதற்கு பயன்படுகிறது, இக்கூழ்நீர் முன் கணீருக்கும் பின் கணீருக்கும் இடையே விழித்திரைக்குப் பின் னால் தெளிவான நீர்நிறமும், தடிப்பும், குலிந்த வடிவமும் உடைய படிகவிழிஆடி (crystalline lens) உள்ளது. து கண்ணின் கண்ணாடி எனப்படும். உருவங்கள் இருக்கும் தொலைவிற்கேற்ப விழி யாடியின் வடிவத்தை மாற்றுவது குற்றிழைத்தசை ciliary muscle) என்னும் சிறுதசையாகும். தொலைவி லுள்ள பொருளைப் பார்க்கும்போது குற்றிழைத் தசை தளர்வு நிலையை அடைந்து, வில்லையைச் சுற்றியுள்ள பந்தக உறைவில்லையைத் தட்டை யாக்கி, பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை மிகு கோட்டமடையாமல் உள்ளே செலுத்துகிறது. அண்மைப் பொருளைப் பார்க்கும்போது குற்றிழைத் தசை சுருங்குவதால் பந்தக உறை தளரும். இதனால் வில்லை, தன் குவி வடிவை மீண்டும் அடைவதால் ஒளிக்கதிர்கள் நன்கு கோட்டமடைகின்றன. கருவிழிப்படலம், படிகவில்லை, முன் கணீர், பின் கணீர் ஆகியவற்றின் வழியாக ஊடுருவி வரும் ஒளிக் கதிர்கள் ஒளித்திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றுகூடி விழுகின்றன. கண்ணில் உருத்தோற்றம் உண்டாகும்முறை. இரண்டு கண்களில் ஒளித்திரையில் மாக்குலா (macula) என்னும் இடத்தில் பொருளின் நிழல் தலைகீழாக விழும். மாக்குலாவிலிருந்து ஒளிக்கதிர்கள் மின்னாற்றலாக மாறிக் கண்ணுக்குப் பின்னிருக்கும் நரம்பு வழியாக மூளையை அடைகின்றன.மாக்குலாவில் தலைகீழாகத் தெரியும் பொருள் மூளையை அடையும்போது நேராக நிமிர்த்தப்படுவதால் காணப்படும் பொருளின் வடிவம் அதன் இயல்பான நிலையிலேயே தோன்றும். கண் இமைகள் கண்களின் மேல் அவற்றைப் பாதுகாக்கும் மூடி போன்று இமைகள் அமைந்துள்ளன. அவை மேலிமை, கீழிமை எனப்படும். கண் இமைகள் 333 அமைப்பு முறை. இமைகள் தோல் மடிப்புகளி லிருந்து தோன்றியவையாகும். இவற்றில் மேலிருந்து கீழாகத் தோல்; தசை, இமைத்தட்டு, விழி வெளி இழைமம் ஆகியவை உள்ளன. தசைகள், சுரப்பிகள், இரத்தக் குழாய்கள், நிணநீர்க் குழாய்கள், நரம்புகள் ஆகியவை தளர்வான இணைப்பு இழைமத்தால் ணைக்கப்பட்டுள்ளன. இமைத்தோல். உடலின் பிற பகுதிகளைவிட மைத்தோல் மிகவும் மெல்லியதாகவும் மென்மை யாகவும் உள்ளது. மேலிமைத் தோல் கீழிமைத் தோலைவிட மென்மையானது. இது அடியில் இருக் ம் தசைகளுடன் தளர்வான இழைமத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு இதில் கொழுப்புத்திசு இல்லை. அதனால்தான் கண்ணில் அடிபடும்போதும், முனைப்பான அழற்சி நோய்களி லும் முதலில் இமைகளில் வீக்கம் ஏற்படுகிறது. இமைத்தோலின் மேற்புறம் நுண்ணிய முடிகள் (fine downy hairs) காணப்படுகின்றன. இமைஓர்த்தில் இமை முடிகள் (cilia or eyelashes) உள்ளன. வை உறுதியான, குட்டையான, வளைந்த இரண்டு அல்லது மூன்று வரிசையாக அமைந்தவையாகும். சீஸ் சுரப்பிகள் (zei s glands) எனப்படும் எண்ணெய்ச் சுரப்பிகளும், மால் வியர்வைச் சுரப்பிகளும் (molls sweat glands) இவற்றுடன் காணப்படுகின்றன. இமை முடிகளின் பின்புறம் அமைந்துள்ள மால் வியர்வைச் சுரப்பிகளின் நாளங்கள், சீஸ் சுரப்பிகளின் நாளங் களுக்குள் அல்லது இமை முடியின் தண்டுப் பகுதிக் குள் திறக்கின்றன. உடலின் பிற பகுதிகளில் காணப் படுவனபோல் இமைத்தோலின் மேற்புறத்தில் இவற் றின் திறப்புகள் காணப்படுவதில்லை. மைத்தோல்.