பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 கண்‌ இமைகள்‌

334 கண் இமைகள் இமை விளிம்பு (intermarginal strip). இமை விளிம்பு தோலுக்கும், விழிவெளி இழைமத்துக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இது வெளி நோக்கிய விளிம்பு (anterior border) கண் சார்ந்த விளிம்பு (pnsterior border) என இரு பிரிவுகளாகப் பகுக்கப் பட்டுள்ளது. கண் சார்ந்த விளிம்பு மேடு போலவும். வெளிநோக்கியவிளிம்பு உருண்டையாகவும் உள்ளன. கண் சார்ந்த விளிம்பிற்கு முன்னால் மெய்போமியன் சுரப்பிகளின் நாளங்கள் நுண்ணிய திறப்புகளாக வரிசையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கும், வெளி நோக்கிய விளிம்பிற்கும் இடையில் மெல்லிய சாம்பல் கோடு அமைந்துள்ளது. இது கண் வளையத் தசைக்கும், இமைத்தட்டுக்கும் இடையில் அமைந் துள்ள தளர்வான நார்த்திசுவை அடையாளம் காட்டு வதால் அறுவை மருத்துவத்தில் பெரும் பங்கை வகிக்கிறது. இமைத்தட்டு (tarsal plate). அடர்ந்த நார்த்திசு வால் அமைந்த இமைத்தட்டில் குருத்தெலும்பு இல்லை. இது இரண்டு இமைகளுக்கும் உறுதியை அளிக்கின்றது. நன்கு வளர்ச்சியடைந்த மெய்போமி யன் எண்ணெய்ச் சுரப்பிகள் ஒவ்வோர் இமையிலும் இருபதிலிருந்து முப்பது வரை காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் நீளவாக்கில் அமைந்த நாளங் கள் மூலம் இமை விளிம்பில் திறக்கின்றன. தசைகள் கண் வளையத் தசை (orbicularis palpebrarum). விழிகளை மூடவும், பாதுகாக்கவும் உதவும் கண் வளையத்தசையின் இமை சார்ந்த பகுதி இமைத் தட்டுக்கும், தோலுக்கும் இடையில் உள்ளது. இமை தூக்கித் தசை (levator palpelrae superiois). இத்தசையின் மையப் பகுதி மேலிமைத் தட்டின் மேல் விளிம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்புறப் பகுதி கண் வளையத் தசையின் அடியில் சென்று இமைத் தோலின் மையத்தில் இணைகிறது. பின்புறப் பகுதி கண் வளைவில் (fornix) விழிவெளி இழைமத்துடன் இணைகிறது. கீழ் ரெக்ட்டஸ் (interior muscle) மற்றும் கோளத்தசைகளிலிருந்து (oblique muscles) வரும் நார்த்திசு, கீழிமையிலுள்ள இமைத் தட்டிலும், இமை நாணிலும் ணையும். rectus முல்லர் தசை (muller's muscle). ஒவ்வோர் இமையிலும் வரியற்ற தசைகளான முல்லரின் மேல், கீழ் தசைகள் இமைத்தட்டுத் அமைந்துள்ளன. மேலிமை முல்லர் தசை, இமை தூக்கித் தசை நாரி லிருந்து தொடங்கி அவற்றிற்கு அடியில் சென்று மைத்தட்டின் மேல் விளிம்பில் முடிகிறது: கீழிமை முல்லர் தசை கீழ் ரெக்ட்டஸ் தசையின் கீழ் அமைந்து கீழிமைத் தட்டில் முடிகிறது. விழிவெளி இழைமம் (conjunctiva). இமைகளை மூடும் விழிவெளி இழைமம் இரத்தக் குழாய்கள் . நிறைந்து மெல்லியதாக, இமைத்தட்டுடன் மிகவும் நெருக்கமாக ணைக்கப்பட்டுள்ளது. கண் முளை நாண்கள் மூக்குச் சார்ந்த கண் முனை நாண் (medial canthai tendon). உறுதியான நார்த்திசுவால் ஆன இந்த நாண், கண்ணீர்ப்பை எலும்பு முன் உச்சியின் (anterior lacrimal crest) அருகிலிருக்கும் எலும்பு உறையையும் periostenum) மேல், கீழிமைத் தட்டு களையும் இணைக்கிறது. பொட்டுச் சார்ந்த கண் முனை நாண் (lateral canthal tendon). இது கண்குழி முனையையும் (orbital tubercle) மேல், கீழிமைத் தட்டுகளையும் இணைக் கி கிறது. கண்குமிழ்த் தடுப்பிழைமம் (orbital septum). இது நார்த்திசுவால் ஆன மெல்லிய திரை போன்றது. கண் குழி எலும்பின் விளிம்புகளில் தொடங்கி மேலி மைத் தட்டின் விளிம்பின் மேல், இமை தூக்கித் தசையின் தாள் போன்ற நாண் விரிவுடன் (levator aponeurosis) இணைகிறது. இது கண் குழிக்கும் இமைக்கும் நடுவில் தடுப்புப் போல் உள்ளதால் கண் குழியிலுள்ள கொழுப்புத் திசு. அதில் ஏற்படும் அழற்சி, இரத்தக் கசிவு ஆகியவை இமைக்குள் நுழை வதைத் தடுக்கிறது. . இரத்தக் குழாய்கள். கண் தமனி (ophthalmic artery) முகத்தமனி (facial artery), மேல் மட்டப் பொட்டுப் பகுதித் தமனி superficial temporal artery), கீழ்க் கண்குமிழ்த் தமனி (infra orbital artery) ஆகிய வற்றிலிருந்து இமைகள் இரத்தம் பெறுகின்றன. மேலிமைக்குச் செல்லும் தமனிகள் இரு வளைவு களாக அமைந்துள்ளன. மேல் வளைவு இமைத் தட்டின் மேல் விளிம்பிற்கும், கண் வளையத் தசைக் கும் இடையிலும், கீழ் வளைவு அவ்லாறே இமை முடிகளுக்குச் சற்று மேலும் அமைந்துள்ளன. கீழிமை விளிம்பில் ஒரேயொரு வளைவு உள்ளது. ஒவ்வோர் இமையிலும் இரண்டு சிரை முடிச்சுகள் (vencus plexuses) உள்ளன. இமைத்தட்டின் முன் புறம் அமைந்துள்ள முடிச்சு தோலின் கீழுள்ள சிரை களுக்குள்ளும், இமைத்தட்டின் பின்புறம் அமைந் துள்ளவை கண் சிரையினுள்ளும் (ophthalmic vein) கலக்கின்றன. நிணநீர் நாளங்கள் (lymphatics). இவை காதுக்கு முன்னுள்ள நிணநீர்ச் சுரப்பிகளுக்கு நிணநீரை எடுத்துச் செல்கின், ன்றன. நரம்புகள். உணர்வு நரம்பு (sensory nerve) முத் தலை நரம்பிலிருந்து (trigeminal nerve) பெறப்படு கிறது. இமை தூக்கித் தசை மூன்றாம் மூளை நரம் cranial nerve) பாலும் (third கண் வளையத்