பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 கண்டக்‌ கழலை

326 கண்டக் கழலை பாட்டுப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்படும். அவற்றை முன்பே தயாரிக்கப்பட்ட அட்டவணைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, திட்டமும் அதன் செயல்பாடும் வேறுபடின் அதைச் சீர்படுத்த விளைந்த நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்விரு முக்கியப் பொறுப்பு களையும் திட்டமிட்டபடி அட்டவணை தயாரித்தல். செயல்பாட்டை ஒப்பிட்டுத் தக்க மேல் நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றைச் சிறப்பாகச் செய்வதற்குத் துணை புரியும் கருவி கண்ட் குறிபடம் (Gantt Chart) எனப்படுகிறது. ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு ஹென்றி கண்ட் (Henry Gantt) என்னும் அமெரிக்கப் பொறியியல் வல்லுநர் இத்தகைய குறிபடத்தை அறிமுகப்படுத்தினார். முன்னேற்ற மாறுபட்ட மடைந்துள்ள தற்காலத் தொழில்வளச் சூழ்நிலையில், கண்ட் குறிபடம் பலவித மாற்றங்கள் அடைந்தாலும் அவர் அறிமுகப்படுத்திய நுட்பமே அடிப்படையாக விளங்குகிறது. தற்போதும் கண்ட் குறிபடத்தின் மாதிரி ஒன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. அது கருவிகளைப் பயன்படுத்த திட்டமிடுதலைக் குறிக்கிறது. எவ்வாறு கருவிகளின் நேரம் வீணாகாமல் அவற்றில் செய்ய வேண்டிய பணிகளை ஒன்றன்பின் ஒன்றாக, எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பனவற்றைத் திட்டவட்டமாக அது குறிப்பிடுகிறது. குறிபடத்தின் மேல் நாள் அல்லது நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். பெயர்கள் குறிக்கப் இடப்புறமாகக் கருவிகளின் பட்டுள்ளன. பணிகளின் பெயர், பணியாளர்களின் பெயர் ஆகியவற்றையும் குறிபடத்தின் தேவைக் கேற்பக் குறிப்பிடலாம். உட்பகுதியில் கருவிகளைப் பயன்படுத்தும் திட்டம் குறிக்கப்பட்டுள்ளது. கண்ட் குறிபடங்களில் உற்பத்தியைக் குறிக்கவும், எடுத்துக் கொள்ள வேண்டிய வேலைகளைக் குறிப்பிடவும், கருவிகள் நிறுத்தப்பட வேண்டிய காலக்கட்டத்தைக் குறிக்கவும் பலவகைக் குறியீடுகளைப் (symbols) பயன்படுத்தலாம் அல்லது பலவகை வண்ணங்களைப் பயன்படுத்தலாம். கண்ட் குறிபடங்கள், திட்டமிட்டவற்றை நேரத் தோடு ணைத்துக் காட்டுவதற்கு மட்டுமன்றி. திட்டமிட்ட பணிகள் திட்டமிட்டபடி நடைபெறு கின் றனவா என்பதைக் காட்டுவதற்கும் பயன்படும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் (நாளின் முடிவில் அல்லது வார முடிவில்) பணிகள் எந்த அளவிற்கு முடிக்கப்பட்டுள்ளன என அறிந்து அதைத் திட்ட அட்டவணை குறிக்கப்பட்டுள்ள குறிபடத்திலேயே பிறிதொரு வண்ணத்தில் குறிக்கலாம். இதன்மூலம் குறிபட த்தைப் பார்த்த உடனேயே திட்டமிட்டவாறு பணிகள் நடைபெற்று வருகின்றனவா தாமதப்படு கின்றனவா என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. இதனால், தாமதப்படும் பணிகளை விரை வாக்கத் தக்க நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுத்துத் தாமதத்தைச் சீர்படுத்தித் திட்டமிட்டபடி யே பணிகளை நிறைவேற்ற முடிகிறது. கண்ட் குறிபடங்கள் மாறும் சூழ்நிலைகளுக் கேற்ப அடிக்கடி மாற்றம் செய்யப்பட வேண்டியவை. ஏனெனில், தொழிலகத்தில் பணிகளின் திட்டமும் அவ்வப்போது ஏற்படும் சூழ்நிலைகளுக்கேற்ப மாறிக் கொண்டேயிருக்கும். இந்த நிலையில் கண்ட் குறிபடம் கண்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட படிவத்தி லேயே இருப்பது பயன்தாராது. எனவே தற்போது கண்ட் குறிபடத்தை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்ட உற்பத்திக் கட்டுப்பாட்டுப் பலகை (production control board) கால அட்டவணை graph) வரைபடம் (scheduled ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இவை வரை படத்தில் மாற்றங்கள் எளிமையாகவும், செய்ய கவர்ச்சியாகவும் தெளிவாகவும் உள்ளன. இளங்கோ கண்டக் கழலை (goitre) வீக்கம். து முன் கழுத்துக் கழலை தைராய்டு சுரப்பியின் ஏற்படும் நோயாகும். பொதுவாக அழற்சி, புற்றுநோய் 1 அல்லது போன்றவற்றால் இந்நோயை ஆகியவற்றால் ஏற்படும் கட்டிகளுடன் ஒப்பிட முடியாது. மிகை இயக்கத் தால் தைராய்டு சுரப்பிகள் வீங்குவதை மட்டுமே இது குறிக்கும். குழந்தைகளின் பருவ வளர்ச்சிக்கேற்பத் தைராய்டு சுரப்பியும் சிறிதுசிறிதாக வளரத்தொடங்கு கிறது. இது வளர்ச்சிப் பருவ காலத்தில் குறிப்பாகப் பெண் குழந்தைகளிடத்தில்தான் மிகையாக உள்ளது. இதுபோல இயற்கைத் தேவைக்காக வீங்கும் கண்டக் கழலை தீமை தாராது. அது ஒரு சில நாள்களிலேயே சீராகிவிடும் இயல்பை உடையது. இரத்தத்திலிருந்து அயோடின் என்னும் மூலப் பொருளை எடுத்து அதைத் தைராக்சின், அயடோ தைரோனின் போன்ற ஹார்மோன்களாக மாற்றிச் சேமித்து வைத்துத் தேவையானபோது சுரப்பதே இரத்தத்தில் தைராய்டு சுரப்பியின் முக்கியபணியாகும். அயோடின் நீரிலிருந்தும், தாவரங்களிலிருந்தும், கடல் உப்பிலிருந்தும் கிடைக்கிறது. மலைப் பகுதி நீரிலும், தாவரங்களிலும் இது மிகுதியாக இருப்பதில்லை. மலைவாழ் மக்களுக்குக் கடல் உப்பும் எளிதில் கிடைப்பதில்லை. இந்நிலையில் இருக்கும் சிறிதளவு அயோடினைச் செம்மையாகப் பயன்படுத்த, தைராய்டு சுரப்பி பெரி தாக இயங்கத் தொடங்குகிறது. ஆகவே மலைவாழ் மக்களிடத்தே பெருபான்மையானோருக்குக் கண்டக்