கண்டங்கத்தரி (சித்த மருத்துவம்) 337
கீழலை காணப்படுகிறது; வயதாக ஆக, மேலும் இக்கழிலை பெரிதாகிறது. தொடக்கத்தில் ஒரே சீராக வீங்கும் இச்சுரப்பி, நாளடைவில் கட்டிகள் மிகுந்த கழலையாக மாறுகிறது. இந்நோய் கடுமை யாக இருப்போருக்குச் சுரப்பியின் இயக்கம் குறைந்து காணப்படும். மற்றவர்களுக்கு இந்நிலை ஏற்படுவது இல்லை. இது ஒருசில இடங்களில் மட்டுமே மிகுந்து காணப்படுவதால், இது இடம் சார்ந்து தோன்றும் கண்டக் சுழலை என்றும் குறிப்பிடப்படும். சிலருக்குப் பிறவியிலேயே அயோடினை இரத்தத் திலிருந்து எடுத்து ஹார்மோன்களாக மாற்றும் நொதிகள் குறைந்து இருக்கும். இவர்களின் தைராய்டு சுரப்பிகள், மிகவும் வளர்ந்து விரைவாக இயங்கியே அந்தக் குறையைச் சீர் செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்குச் சில சமயங்களில் இச்சுரப்பி மிகவும் பெரிதாக வளர்ந்து காணப்படும். கண்டக் கழலை ஏற்படுவதன் காரணத்தை விரிவான ஆய்வு மூலம் அறியலாம். கண்டக் கழலை தோன்ற அடிப்படைக் காரணம், தைராய்டு சுரப்பிகள் மிகையாக இயங்கும் படித் தூண்டப்படுவதேயாகும். எனவே கண்டக் கழலைகளுக்கு மருத்துவம் செய்யும்போது தைராய்டு சுரப்பியின் பணியைக் குறைத்தால் போதுமானது. அயோடின் சத்துக் குறைந்த உணவை உண்டு வாழ்பவர்களுக்குக் கண்டக்கழலை வாராமல் தடுக்க அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும். கண்டக் கழலை ஏற்பட்டோருக்கு அயோடின் மட்டும் தரப்பட்டால் கழலை விரைவில் சுருங்குவ தில்லை. ஏனெனில் அயோடினைப் பயன்படுத்தி ஹார்மோன்களைச் சுரக்க மீண்டும் தைராய்டு சுரப்பி இயங்க வேண்டியுள்ளது. எனவே அது முழு ஓய்வு எடுக்கத்தக்க மருந்துகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வகையான நோயாளிகளுக்கு, நேரடி யாகத் தைராக்சின் போன்ற ஹார்யோன்களைப் போதிய அளவு தந்தால். இச்சுரப்பி முழு ஓய்வு பெற்றுச் சுருங்க முடிகிறது. இவ்வாறு ஹார்மோன் களைப் போதிய அளவு தந்தாலும் இச்சுரப்பி சுருங்கிப் பழைய நிலையை அடைய நீண்ட நாள் ஆகக்கூடும். கண்டங்கத்தரி (சித்த மருத்துவம்) . கண்ணன் இதன் சமூலத்தை நீரிட்டு எண்ணெய் கலந்து காய்ச்சிய விழுதைப் பூசிவர, தலைவலி, கீல்வாதம், அக்குள் கெடுநெடி முதலியவை நீங்கும். இலைச் சாற்றோடு ஆளிவிதை நெய் சேர்த்துக் காய்ச்சி, வெடிப்புகளில் பூச அவை மிக விரைவில் ஆறும். கண்டங்கத்தரி இலையைச் சிறிது நெருப்பில் வாட்டி VOL 7 கண்டங்கத்தரி (சித்த மருத்துவம்) 337 இடித்துப் பிழிந்த சாற்றை வேளைக்கு 7.5 கிராம் அல்லது 15 கிராம் தேன் சேர்த்துக் கொடுக்க இருமல், காய்ச்சல், சுவாசகாசம் நீங்கும். கப கபத்தை எளிதில் கரைக்க ரக்கும். இதன் பூவை வாதுமை நெய் சேர்த்துக் காய்ச்சிப்பூச, எருவாய் முளையைப் போக் கும். இதன் காயைக் குழம்பிலிட்டு உண்பதுண்டு. இது பசியை மிகுதியாக்குவதுடன், கபநோயாளிக்கு மிகுந்த நன்மையைத் தரும். கண்டங்கத்தரிப் பழத்தைப் பழகிய ஒரு மண் பாண்டத்திலிட்டு மூழ்கும்படி நீர் விட்டு, நன்றாக வேகவைத்துக் கடைந்து குழம்பாக இருக்கும்போது. நாலில் ஒரு பங்கு நல்லெண்ணெய் கூட்டி, மெழுகு போல் வரும்வரை காய்ச்சி வடித்துத் தடவிவரச் சில நாளில் வெண்குட்டம் மாறும். காது நோய்க்கு ரண்டொரு துளிவிட்டு வர நலமாகும். கண்டங் சுத்தரிப் பழத்தை உமிக்காந்தலில் சுட்டுக் கல்வத்தி லாவது, தட்டை அம்மியிலாவது வைத்து, பாகல் இலைச் சாறுவிட்டு, வெண்ணெய்போல் அரைத்து வழித்து, ஒரு கோப்பையில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்துச் சூரியபுடத்தில் சில நாள் வைத்துப் பல்லில் தடவிவரப் பற்பூச்சி போகும். கண்டங்கத்தரிப்பழம், துளசி, வெற்றிலைச் சாறு கஞ்சா ஆகியவற்றின் கியாழத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்துத் தலையில் தேய்த்து வர இரத்தப் பீனிசம், சிராய்ப்பீனிசம் ஆகியவை தீரும். கண்டங்கத்தரி விதை, அமுக்குரா சமூலம், திப்பிலி ஆகியவற்றைச் சமஎடை எடுத்துக் கியாழம் தயாரித்து அதனுடன் தேன்கலந்து, தாய்ப்பாலில் விட்டுக் கொடுக்க விக்கல், வாந்தி, காய்ச்சல் தீரும். இதன் வேரை முறைப்படிக் கஷாயமிட்டு அதில் திப்பிலிச் சூரணமும், தேனும் சேர்த்துக் கொடுக்க இருமல், நீர்த்தோஷம் நீங்கும். கண்டங்கத்தரி வேர் கண்டு பாரங்கி முத்தக்காசு, சுக்கு, வழுதுணைவேர் முதலியவற்றை ஒரே அளவில் எடுத்து 2,6 லிட்டர் நீர்விட்டு எட்டில் ஒன்றாக வற்றக் காய்ச்சி அருந்த வாத சுரம் தீரும். கண்டங்கத்தரி வேர், ஆடா தொடாப்பாளை வேர், திப்பி, சுக்கு, சிற்றரத்தை, ஓமம் இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து இடித்து, இதனுடன் 2.6 லிட்டர் நீர்விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடித்து, காலை, மாலை கொடுக்கக் கபம் தீரும். கண்டங்கத்தரி சமூலத்தைச் சுட்டுக் கரியாக்கிப் பொடித்து வைத்துக் கொண்டு காலையும், மாலையும் பல் துலக்கி வந்தால் பல்வலி நீங்கும். கண்டங்கத்தரி, சீநதில் தண்டு, தாமரை வளையம் இம்மூன்றையும் கியாழம் வைத்து இதனு டன் சுக்கு, கோரைக்கிழங்குப்பொடி சேர்த்து இரண்டு மூன்று வேளை வேளை கொடுக்கச் சீதஜுரம் நீங்கும். கண்டங்கத்தரிச்சாறு 43.7 கிராம், கருந்துளசிச்சாறு 87.5 கிராம். ஆடாதொடை சாறு 131.1 கிராம் தேன் 264.5 கிராம் இவற்றை ஒன்றாகக் கலந்து, ஒரு பழ ஓகிய வாயகன்ற மண்கலத்தில் விட்டு அடுப்பில்