பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கண்டங்கத்தரி (தாவரம்‌)

338 கண்டங்கத்தரி (தாவரம்) . ஏற்றி இளந்தீயில் எரிக்கவேண்டும். இதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிவற்றல், தான்றிக் காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலம், ஜாதி பத்திரி. சிற்றரத்தை, பேரரத்தை, அதிமதுரம், தாளிசபத்தரி,ஜாதிக்காய் இவற்றை வகைக்கு 3.5 கிராம் எடுத்துப் பொன்போல் வறுத்துப் பொடி நாளில் செய்து போட்டு, விரலால் அழுந்தும்படியான இளகிய பதத்திற்கு வரும்வரை கிளறி வைத்துக்கொண்டு, காலை, மாலை, மதியம் மூன்று வேளையும் விழுதைக் குழந்தைகளின் நாவில் தடவிவர 10-15 கக்குவான் இருமல் நலமடையும். கபம் தொடர்பான இருமல், ஈளை, கடினமூச்சு இவற்றிற்குக் கொடுத்து வரக் கபம் எளிதில் நீங்கும். சே.பிரேமா நூலோதி.சி. கண்ணுசாமி பிள்ளை பதார்த்த குணவிளக்கம் (மூலவர்க்கம்).பி.என். பிரஸ், சென்னை 1939; சிறுமணவூர் முனிசாமி முதலியார், மூலிகை மர்மம், பிராகரிசீவ் பிரிண்டர்ஸ், சென்னை, 1930 க.ச. முருகேச முதலியார், குணபாடகம் (மூலிகை, வகுப்பு), அரசினர் அச்சகம், சென்னை, 1951. கண்டங்கத்தரி (தாவரம்) இதன் தாவரவியல் பெயர் சொலானம் கரடென்ஸ் (solanum surattenes) என்பதாகும். இந்தச் செடியின் பழைய பெயர் சொ. ஸேன் தோகார்பம் (solumm xanthocarpum). இப்பெயர் இன்றும் சில இந்தியத் தாவரவள (flora) நூல்களில் காணப்படுகிறது. கண் டங்கத்திரி சொலனேசி என்னும் இருவித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். கண்டங்கத்திரி கரிசல் மண் நிலங்களில் சிறப்பாக வளர்கிறது. இது இந்தியா முழுதும் தரிசு நிலங்களிலும், பாதை யோரங்களிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. ளைகள் தரை மீது பரவலாகப் படர்ந்திருக்கும். செடி முழுதும் காணப்படும் நேரான, கூரான மஞ்சள் நிற முள்களால் இச்செடியை எளிதில் இனங்காண லாம். சுண்டங்கத்தரி பொருளாதாரச் சிறப்பும் மருத்துவச் சிறப்பும் வாய்ந்தது. கி வளரியல்பு. இச்செடியின் தண்டு உருண்டை யாகப் பரவலாகக் காணப்படும். விண்மீன் வடிவத் தூவிகளைக் கொண்டிருக்கும். ஆணிவேர் ஆழமாக கண்டங்கத்தரி 1. செடி 2. மலர் 3. கனி