342 கண்டங்களிள் தோற்றம்
342 கண்டங்களின் தோற்றம் பெயர்ந்தன என் த இக்கொள்கையாகும். இது கடலடித்தளங்கள் தோற்றத்தையும், கண்டங்களின் இடப்பெயர்ச்சிபையும் விளக்கியபோதும் புவி விரி வடைந்ததற்குக் காரணமான வி சை எது என்பது விளக்கப்படவில்லை. கி. பி. 1960 ஆம் ஆண்டுக்குப் பின்பு பிளேட்டெக்டானிக் கொள்கை வெளியிடப்பட்டது. இது கண்டங்களின் இடப்பெயர்ச்சியையும் மடிப்பு மலைகளின் தோற்றத்தையும் விவரிக்கிறது. புவி விரிவடையும் கருத்தை இது புறக்கணிக்கிறது. புவி மேலோட்டில் ஆறு பெரிய உறுதியான தட்டுகள் இருந்தன. இவை புவியோட்டில் உள்ள வெப்பச்சலன ஓட்டங்களால் (convection current) உந்தப்பட்டு நகர்ந்து கொண்டிருந்தன. நகர்ந்த தட்டுகள் ஒன்றுக் கொன்று மோதி மடிப்பு மலைகளை உண்டாக்கின. கண்டங்களின் இடப்பெயர்ச்சிக்கான காரணமும், நில அதிர்ச்சி, எரிமலை வெடித்தல் ஆகியவை சில இடங்களில் மட்டுமே ஏற்படுவதற்கான காரணமும். ஆழ்கடல் அகழிகளும். அவற்றின் தோரணம் போன்ற அமைப்பும் ஏற்படுவதற்கான காரணமும் க்கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன. ஆகவே தற் போது புவியியலறிஞர்கள் கண்டங்கள் இடம் பெயர் கின்றன என்னும் கருத்தை ஐயம் இல்லாமல் ஏற்றுக் கொள்கின்றனர். கண்டங்கள் பெரும்பாலும் கடட ந்த 200 மில்லியன் ஆண்டுகளாகத்தான் இடம் பெயர்ந்து வருகின்றன. அதற்கு முன்பு அவை எந்நிலையில் இருந்தன என்பது மேலும் ஆராயப்பட வேண்டும். ரா. செல்லச்சாமி கண்டங்களின் தோற்றம் புவியின் மொத்தப் பரப்பில் 71% நீராகவும்,29, நிலமாகவும் உள்ளன. எனவே கண்டங்களும் கடலடித்தளங்களும் புவியின் நிலத்தோற்றத்தில் இன்றியமையாதவையாகக் கருதப்படுகின்றன. புவி யில் இவற்றின் பரவலில் சில குறிப்பிடத்தக்க கூறுகள் காணப்படுகின்றன. வட துருவத்தில் நீர்ப் பரப்பும், தென் துருவத்தில் நிலப்பரப்பும் மிகுதியாக உள்ளன. நில நடுக்கோட்டின் வடபகுதியில் நிலப் பரப்பும் தென் பகுதியில் நீர்ப்பரப்பும் மிகுதி காணப்படுகின்றன. ஆஃப்ரிக்கா. தன் அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் முக்கோண வடிவம் ஓர் இன்றியமையாக் கூறாகக் கருதப் படுகிறது. கண்டங்களில் மிக உயர்ந்த நிலங்கள் இருப்பதுபோலக் கடலடித்தளங்களில் மிகத் தாழ்ந்த நிலங்கள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து மிக உயர்ந்த நிலமாகிய எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8840 மீட்டராகும். கடல் மட்டத்தில் இருந்து மிசுத் தாழ்ந்த நிலமாகிய மரியானா அகழியின் ஆழம் யாகக் 114.55 மீட்டராகும். பழங்காலத்தில் புவியியல் அறிஞர்கள் கண்டங்களும், கடலடித் தளங்களும் அரிப்பால் ஏற்பட்டன என்று கருதினர். மேலும் கடலடித்தளங்களை அவர்கள் ஆழம் குறைந்த மணல், களிமண் படிந்த நீண்ட பள்ளங்களாகவே கருதினர். எனவே கண்டங்களும். கடலடித் தளங் களும் அவற்றின் அமைப்பில் மாறிவருவதாகக் கருதினர். ஆனால் பிற்காலத்தில் கிடைத்த செய்தி களின் படி இவை பாறைகளின் அசைவினால் ஏற் பட்டவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியின் அடிப்படைநிலத்தோற்றங்கள், கண்டங்கள், கடலடித் தளங்கள் எனப்படும். புவியின் தோற்றத்தை விளக் கும் கொள்கைகள் சிலவற்றில் கண்டங்கள், கடலடித் தளங்கள் ஆகியவற்றின் தோற்றம் விளக்கப் பட்டுள்ளது. கெல்வின் என்பார் புவி வளிமநிலையில் இருந்த போது சில இடங்களில் பொருள்கள் அடர்த்தியுடன் இருந்ததாகவும், குளிர்ச்சி அடைந்த பின்னர் அவை மேலோடுகளாக மாறின என்றும் அவையே தற் போதைய கண்டங்களாகக் காட்சி தருகின்றன என்றும் கருதினார். கோள் அணுக்கொள்கை, கண்டங்கள் கோள்களின் படிதலினால் தோன்றி யவை என்று விளக்குகிறது. கோள் அணுக்கள் மிகுதி யாக விழுந்து படிந்த இடங்களில் இன்று கண்டங் களும், கடலடித்தளங்களும் தோன்றுவதற்கு வளி மண்டல அழுத்தம் முக்கியக் காரணமாக இருந்தது என்று ஸோலாஸ் விளக்கியுள்ளார். புவி நீர்ம நிலையில் இருந்தபோது எந்த இடத்தில் வளி மண்டல் அழுத்தம் மிகுதியாக இருந்ததோ அந்த இடத்தில் நீர்மம் அழுந்தியதால் குளிர்ச்சி யடைந்து கடலடித்தளங்களாக மாறின. அது போலவே வளி மண்டல் அழுத்தம் குறைவாக இருந்த இடத்தில் நீர்மம் மேலெழுந்து உறைந்து கண்டங்களாயில் ன. நான்முகக் கோட்பாடு (tetrahedral hypothesis). கண்டங்கள், கடல்கள் ஆகியவற்றின் தோற்றம், அமைப்பு, ரவல் ஆசி சியவை பற்றி 1875 இல் லோதி பன்கிரீன் என்பார் ஒரு புதுமையான சுருத்தை வெளியிட்டார். புவி முதலில் கோள வடிவத்தில் இருந் தது. கோளத்தின் சுன அளவைவிட அதன் பரப் பளவு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் புவி குளிர்ச்சியடைந்து சுருங்கியபின் அதன் கன அளவு குறைந்து பரப்பளவு மிகுதியாகி விட்டது. மிகுதி யான பரப்பளவைத் தாங்குவதற்காகக் கோளவடி வில் இருந்த புலி நான்முக வடிவங்கொண்ட தாத மாறியது. அண்மைக் காலத்தில் திரிகரி என்பார் நான்முகக் கோட்பாட்டைப் புதிய சான்றுகளுடன் மீண்டும் வெளியிட்டார். புலியில் தற்போது நிலநடுக் கோட்டிற்கு வடபகுதியில்தான் நிலப்பரப்பு மிகுதியாக