பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 கண்டம்‌

348 கண்டம் கோடுகளுக்கு இடையே அமைந்துள்ளது. 40° வ-45 தெ.(வ-வடக்கு தெ-தெற்கு) குறுங்கோடுகளுக்கு இடையே திட்டு குறைந்த அளவிலேயே பரவியுள்ளது. உலகில் அட்லாண்டிக் பேரகழியில்தான் திட்டின் பரவல் பகுதி உள்ளது. உலகின் மிகப் பெரிய திட்டு ஆர்க்டிக் பேரகழியில் சோவியத் ஒன்றியக் குடிய ரசை அடுத்து அமைந்துள்ளது. இதன் அகலம் ஏறக் குறைய 1300 கி.மீ. ஆகும். ஆழம் மிக்க கண்டத் திட்டு அண்டார்க்டிக்காவை ஒட்டி உள்ளது. பிரான் சின் பிராவென்ஸல் பகுதியை அடுத்துக் கண்டத் திட்டே அமையவில்லை. கண்டம் ந.சந்திரசேகர் புவியின் மேலோட்டில் புடைப்பாக உள்ள பெரும் பகுதி பவ மில்லியன் சதுர கிலோமீட்டரைக் கொண்டும், பக்கவாட்டுத் தாழ் பள்ளப்பகுதிகளுடன் கடல் மட்டத்தையும்விடச் சற்று உயர்ந்தும் காணப்படுகிறது. இது ஆறு கண்டங்களாகப் (contin- ents) பிரிக்கப்பட்டுள்ளது. அவை, யுரேனியா (இது ஐரோப்பா, சீனா. இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது), ஆஃப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்ட்டிகா எனப் படும். கடற்பகுதி நீங்கலாக எங்கும் பரவியிருக்கும் புவியின் நிலப்பகுதியே கண்டம் என்று வரையறுக்கப் படும். நில வரைபடங்களில், கண்டப்பகுதியின் எல்லையும், கடற்கரைப்பகுதியும் வரையறுக்கப்படு கின்றன. புவியமைப்பியலுக்கேற்பக் கண்டப்பகுதியின் எல்லைகள் கடற்கரைப் பகுதியிலேயே முடிகின் றன. கடற்கரைப் பகுதி சில இடங்களில் மிக மென்மை யான சாய்தளப் பகுதியாகவும், சில டங்களில் செங்குத்தாகவும் காணப்படும். ஒரே நிலத் அவற்றிலுள்ள கண்டங்களும் அனைத்துக் தோற்றத்தைப் பெற்றிருந்தாலும், மண்ணும், பாறை அமைப்பும் வேறுபடுகின்றன. அனைத்துக் கண்டங்களிலுமே அடிமட்டப் பாறைப் பகுதி நிலையான நிலப்பகுதியுடன் கூடிய உருமாறிய பாறையாகவே காணப்படுகிறது. இப்பாறை படிவுப் பாறைகளிலிருந்தோ, நெருப்புப் பாறைகளிலிருந்தோ உருமாறியதாகும். முன் - கேம்பிரியன் pre - cambrian) கால அளவைக் கொண்டதாகும். தொடக்கத்தில் கண்டப்பகுதியுடன் தோன்றிய தரைப் பரப்பு, பல அடி உயரம் வரை குறைவாகவே இருந்தது. பின்னர் ஏற்பட்ட நில அரிப்பாலும், படிவுப்பாறைகளாலும், தொல்லுயிர் (paleozoic), மீசோசோயிக், செனோசோயிக் காலங்களில் இது உண்டான படிவுப் பாறைகளாலும், இக்கண்டப் பரப்பின் உயரம் ஓரளவு உயர்ந்தது. இப்படிவுப் பாறைகளில் பெரும்பாலானவை கடல் சுண்ணாம்புப் பாறை, கடல் களிமண், கடல் வண்டல்மண், பாறை ஆகியவற்றால் ஆனவை. சிற்சில சமயங்களில் கண்டங்களின் அடிமட்டத் தோன்றல் பாறைகள் அரிப்புகளால் வெளிப்படக் கூடும். சான்றாக, வட அமெரிக்காவில் காணப்படும் கனடா நிலப்பகுதியைக் குறிப்பிடலாம். சில கண்டங் களில் முதலில் தோன்றிய பாறை அமைப்பின்மேல் படிவுப் பாறைகளால் ஆன அமைப்புகள் அமைந்து மிகப்பெரும் தோற்றத்தைக் கொடுக்கும். சான்றாக, வட அமெரிக்காவில் பாயும் மிசிசிபி நதியால், அப் பெரும் பகுதி அரிக்கப்பட்டுக் கீழே உள்ள உருமாறிய பாறைகள் தோற்றமளிக்கின்றன. ஒவ்வொரு கண்டத் திலும், படிவுப் பாறைகளால் ஆன பெரும் மலைத் தொடர்கள் காணப்படுகின்றன. படிவுப் பாறை ஆன அடுக்குகள் பக்கத்தின் அழுத்தத்தால் தாக்கமுறுவதால் அவை மேல்நோக்கிய, உயர்ந்த மலைகளாகத் தோன்றுகின்றன. களால் கண்டப்பகுதிகள் கடினப்பாறைகளால் அமைந் தவை. மிகப்பெரும் நிலப்பரப்புடன் அமைந்த கண்டத் திட்டுகள் புவியின் மேற்பரப்புப் பாறைக் கோளசு (lithophere) ஓட்டில் அமைந்துள்ளன. இக்கண்டத்திட்டுகள் சிறுசிறு தட்டுகளாகப் புவியில் பரவியுள்ளன. இந்நிலப்பரப்பு, புவி மேற்பரப்புப் பாறைக் கோளகக் கீழ்ப்பகுதி (asthenosphere) ஓட்டில் நெகிழும், மிதக்கும் தன்மைகளுடன் காணப்படுகிறது. மிதக்கும் தன்மையுடன் அமைந் திருக்கும் நிலப்பரப்பு அல்லது கண்டம் புவியின் உள் ஓட்டில் நிகழும் மாறுதல்களால், சிறிது சிறிதாக நகர்ந்து வேறு வேறாக விலகிச் செல்லலாம் அல்லது ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரும் அழிவையோ, புதிய நிலத்தோற்றத்தையோ உருவாக்கலாம். இந் நிகழ்ச்சி 2X10 ஆண்டிற்கு முன்பிருந்தே நிகழ்ந்து வருகிறது. இன்றைய கண்டங்கள், ஒரு காலத்தில் நிலையிலேயே ஒன்றாக இணைந்த இருந்திருக்க வேண்டும். பின்னர், வை சிறிது சிறிதாக விலகி இன்றுள்ள நிலையில் காணப்படுகின்றன. இந்நில அமைப்பும் பிற தோற்றங்களும் 4.6× 10 ஆண்டு களுக்கு படுகிறது. முன்னர்த் தோன்றியவையாகக் கருதப் ஒவ்வொரு கண்டத்திலும் அமைந்துள்ள பாறை வகைகளையும், தோற்றத்தையும் ஆராய்ந்தால் ஒவ்வொரு கண்டமும் வெவ்வேறு காலக்கட்டத்தில் தோன்றியுள்ளதை அறிய முடியும். மின்னசோட்டா, தென்மேற்குக் கிரீன்லாந்து, தெற்கு ரொடீசியா போன்ற பகுதிகளில் காணப்படும் பாறை வகைகள் மிகப் பழமையானவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. க் கண்டப் பகுதிகளில் காணப்படும் கிரானைட்