பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமாலை 349

வை பாறை வகைகள், உருமாறிய படிவுப் பாறைகள், பழங்காலக் கடலிலிருந்து தோன்றியவை. ஏறத்தாழ 4 X 102 ஆண்டுகள் பழமையானவை. இத்தகைய பழங்காலப் பாறை வகைகள் சந்திரனில் காணப்படும் பாறை வகைகளைவிடப் பழமை யானவை. கண்டங்களைச் சுற்றிப் பரவியுள்ள கடலின் மையப்பகுதியில் கடல் திட்டுகள் நீண்ட வரிகளாகக் காணப்படுகின்றன. கண்டங்கள் வேறு வேறாக விலகித் தனித்தனியே பிரியும்போது, கடலின் அடிப் பரப்பு அதன் நீட்சிக்கு ஏற்ப இசைந்து கொடுக் கிறது. அச்சமயங்களில், கடலின் அடிப்பரப்பில் பெரும் பள்ளங்கள் உருவாகின்றன. இப்பள்ளங்கள் மிகு ஆழத்தோடும், புவியின் உள்மையத்தை நோக்கி நீண்டும் காணப்படும். இதனால், உள்மைய அழுத் தத்தால் சுற்குழம்பு இப்பிளவுகளின் வழியே கடல் மட்டத்திற்கு வெளியே தள்ளப்படும். இச்சமயத்தில் மிகுதியான பாறைக் குழம்புகள் வெளிப்படும். இவை இறுகிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கும். மிகப்பெரிய அளவில் இந்நிகழ்ச்சி நடக்குமாயின், புதிய கடல் தீவுகளும், கடல்மலைகளும் உருவாகக் கூடும். கண்டப்பிரிவால், புதிய எரிமலைகளும், நில நடுக்கங்களும் உண்டாகின்றன. மேலும் கண்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலோ. ஒன்றைவிட்டு ஒன்று விலகும்போது ஏற்படும் நீட்சியாலோ, அழுத் தம் மிகுவதால் புலியின் உள்ளிருக்கும் எரிமலைக் கற்குழம்பு வெளிப்படும். புவியின் மேலோட்டில் எங்கேனும் மிகவும் வலிமையற்ற பாறைப்பகுதி இருக்குமாயின், அதன் வழியாகப் பாறைக்குழம்பு வெளிப்படும். கண்டப்பிரிவின்போது, புதிய மலைத் தொடர்களும், புதிய பள்ளங்களும் உருவாகும். கண்டங்கள் ஒன்றைவிட்டு ஒன்று நகரும்போது பக்க வாட்டில் ஏற்படும் உராய்வின் மூலமாக, மலைத்தொடர்களும் புதிய வரிப்பாறைகளும் உரு வாகும். சான்றாகக் கண்டப்பிரிதல் நிகழ்ச்சியின் விளைவாக உருவானவையே அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் போன்றவை ஆகும். கண்டமாலை நீண்ட எஸ்.சுதர்சன் நிணநீர் நாளம் வழியாகக் காசநோய்க்கிருமிகள் கழுத்தில் உள்ள புற அசு நிணநீர்க் கணுக்களை (Ecto and Endoblymphatic nodes) அடைகின்றன. தாக்கமுற்ற நிணநீர்க்கணுக்கள் கழுத்தின் மேற்புறம், ஸ்டெர்னோமாஸ்டாய்டு தசையின் கீழ் மிகுதியாகக் காணப்படும். இதில் மூன்று நிலைகள் உள்ளன. கண்டமாலை 349 முதல்நிலையில் கணுக்கள் வீர்த்து ஒன்றுடன் ஒன்று இணையாமல் காணப்படும். இதற்குக் கணுவிடை அழற்சி காணப்படாததே காரணமாகும். இந்நிலை நீண்டநாள் காணப்படுவதால் கூர்த்த தொற்றுப் இதைப் பாதிப்பிலிருந்து பிரித்தறிவது கடினம். இரண்டாம். நிலையில் இக்கணுக்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதற்குக் கணு விடை அழற்சியே காரணம் ஆகும். இதுவே நோயின் முக்கிய அறிகுறியாகும். நிணநீர்க் கணுவில் காசநோய்க் கிருமிகள் தாக்கிய நிலை நாட்பட்ட கணுக்கள் சேசியேஷன் (caseation) எனப்படும். இது கணுநசிவு ஏற்பட்டுக் குளிர் சீழ்க் கட்டிகளை (abscess) உண்டாக்கும் மூன்றாம் நிலை யாகும். அழற்சியில் காணப்படும் சூடு, வலி, சிவந்த நிற மாற்றம் முதலியன இக்கட்டியில் காணப்படுவ தில்லை. அடுத்துச் சிறு சிறு கணுக்கள் ஒட்டிக் கொண்டு இருக்கும் நான்காம் நிலையில் இக்கட்டிகள் உடைவதால் தோல் நசிந்து காசநோய்ப் புண்கள் (tuberculous ulcer) உண்டாகின்றன. அக்கணு உடை யும்போது குடாக்களும் (sinus) தோலடியில் உள்ள கணுக்களும் காசப்புண்களை உண்டாக்குகின்றன. இப்புண்களில் விளிம்பின் அடிப்புறம் ஆழ்ந்தும் குழிந்தும் சீழுடன் கூடிய தளம் நலிந்த புதுவளர் சிறு மணிகளுடனும் (unhealthy granulation) காணப் படும். புண் ஆறுவதற்கு நீண்ட நாள் ஆகும். இந் நோய் கழுத்தைச் சுற்றி மாலை போல் படர்ந்து புண்களை உண்டாக்கும். ஆறிய தழும்புகள் கழுத் தில் அருவெறுக்கத்தக்க மாலையின் தோற்றத்தைக் இது கண்டமாலை கொடுப்பதால் (tuberculous eymph glands of the nek) எனக் குறிப்பிடப்படு கிறது. நோயை உறுதிப்படுத்திய பின் காசநோய் மருந்துகளை நீண்ட நாள் கொடுக்கப் புண்கள் ஆறத்தொடங்கும். ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்