பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஞ்சா 17

வளரியல்பு. நேரான, தடித்த தண்டுடன் கூடிய கன்னா 1- 5மீ வரை வளரக்கூடிய, பருவச்செடியே பீஸ் சடைவா ஆகும். தாவரத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பிசுபிசுப்போடு கூடிய சுரப்பித்தூவிகள் காணப்படுகின்றன. இது ஈரில்ல (dioecious) தாவர மாகும். இச்செடிகளில் புறத்தோற்றத்திலேயே பால் பாகுபாடு உண்டு. பெண் செடிகள் குட்டையாக பெரிய இலைகளுடனும், ஆண் செடிகள் உயரமாக சிறிய இலைகளுடனும் இருக்கும். குறுகிய நாள் வேதிமுறைச் செயல்பாடு (short day treatment} ஓரில்லத் தாவரங்களை மிகு எண்ணிக்கையில் தோற்று விக்கும். நாருக்காக நெருக்கமாகப் பயிரிடும்போது செடிகள் கிளைப்பதில்லை. இலைகள். கைவடிவக் கூட்டிலைத் தண்டின் கீழ்ப்பகுதி எதிரடுக்கு முறையிலும், மேலே மாற்றடுக்கு முறையிலும் அமைந்திருக்கும். இலையில் 3-11 சிற்றிலைகள் இருக்கும். பூச் மலர். இருபால், ஈரில்லவகை. ஆண்பூக்கள் கோணநுனி பேனிகிள் (panicle) மஞ்சரியிலும், பெண் பூக்கள் கோணநுனி ஸ்பைக் (spike) மஞ்சரியிலும் காணப்படும். ஆண்மலரில் 5, ஆழமாகப் பிளவுபட்ட, மஞ்சள் நிறப்புல்லிகளுண்டு; மகரந்தத்தாள்கள் 5, காற்றுமூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறத்தக்க வாறு அமைந்துள்ளன. ஒவ்வொரு பெண் பூவும் சுரப்பித் தூவிகளோடு கூடிய சவ்வு போன்ற பூவடிச் செதிலால் சூழப்பட்டிருக்கும். புல்லிவட்டம் முழு மையானது. ஆண், பெண் பூக்களில் அல்லி வட்டம் இல்லை. சூலகம் காம்பற்றது. மேல் மட்டச் சூல்பை, ஓர் அறைகொண்டது. ஒரு சூல், தொங்கும் வகை யில் அமைந்துள்ளது. சூலகத்தண்டு இரண்டாகப் பிளவுபட்டு, ஒன்று வெளிநோக்கியும், மற்றது கீழ் நோக்கியும் வளைந்திருக்கும். கனி, பளபளப்பான பழுப்புநிற அக்கின் (acene ) கனியில் புல்லி நிலைத்திருக்கும். இது பூவடிச் செதில்களால் சூழப்பட்டிருக்கும். மகரந்தச்சேர்க்கை நடந்த 20-40 நாள் வரை, பெண் செடிகள் உயிருட னிருந்து காய், விதைகள் முதிர்ச்சியடைந்தவுடன் மடிந்துவிடும். தோற்றம், மத்திய ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட கஞ்சா, ஆசியா ஐரோப்பிய நாடுகளில் தொன்றுதொட்டுப் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தி யாவில் தரிசு நிலங்களிலும், சாலை ஓரம், தோட்ட வாய்க்கால் கரைகளிலும் தன்னிச்சையாக வளரும். சூழ்நிலை. வேறுபட்ட தட்பவெப்ப நிலைகளிலும் மண்வளத்திலும் வளரக்கூடியது. மித ஈரப்பசை, மித வெப்பத்தோடு கூடிய சூழ்நிலையில் வளரும்போது நார் கொடுக்க வல்லது. இச்செடியைப் போதைப் பொருள்களுக்காக வெப்பச் சூழ்நிலையில் பயிரிட வேண்டும். அ. க. 7 2 கஞ்சா 17 பொருளாதாரப் பயன். கஞ்சா முக்கியமான மூன்று பொருள்களை, அதாவது நார், எண்ணெய், போதை ரெசின் ஆகியவற்றைத் தரவல்லது. நார். மிதலெப்ப நாடுகளில் பயிராகும் கஞ்சாச் செடித் தண்டின் உட்பட்டையிலிருந்து வணிக முறை யிலான ஹெம்ப் என்னும் நார் எடுக்கப்படுகிறது. ந்நார்கள் மென்மையாகவும் 1-4 மீ. வரை நீள மாகவும் இருக்கும். வலிமையாக இருப்பதால் கயி வலை. பாய்மரத்துணி கான்வாஸ் தார்ப்பாலின் தயாரிக்கப்பயன்படுகின்றன. இந்தியாவில் நெசவுக்கும் பயன்படுத்துவர், பழைய ஹெம்ப் கயிற்றைப் பிரித்து கிடைக்கும் நார் தூள்களைக் கொண்டு சுப்பல் பலகைகளுக்கு டை யேயுள்ள இடை வெளிகளை நீர் புகாவண்ணம் அடைக்கப் பயன்படுத்துவர். எண்ணெய். நாருக்காக ஆண்செடிகள் அகற்றம் பட்ட பிறகு எஞ்சியுள்ள பெண் செடிகளில் கிடைக் கும் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. விதைகளில் 30-35 விழுக்காடு உலர் எண்ணெய் கிடைக்கிறது. இது வண்ணப்பூச்சு (paint), வார்னிஷ், சோப் போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுகிறது. கோழி பறவைகளுக்குத் தீவனமாகிறது. போதை ரெசின், போதைப் பொருளைப் பொறுத்த வகையில் பங்க், கஞ்சா, சரஸ் என மூன்று வகை யுண்டு. பங்க் (bhang) அல்லது ஹசீஷ் (hashish). ஆண், பெண் செடிகளின் காய்ந்த லை. பூக்கதிர்களி லிருந்து தயாரிக்கப்படுவதே பங்க் என்பதாகும். இத் தயாரிப்பில் ரெசின் அளவு மிகக் குறைவு. தன்னிச்சை யாக வளரும் செடிகள் இதற்குப் பயன்படுகின்றன. கஞ்சா (ganja). இந்தியாவில் வளர்க்கப்படும் தனிவகைக் சுஞ்சாச் செடியின் காய்ந்த, கருதரிக்காத பெண் மஞ்சரியே கஞ்சா எனப்படும். இது ஆங்கில மருத்துவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தாகும். இதைத் தூக்கம் மற்றும் சுவர் (வசிய) மருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். சாச் சரஸ் (charas). இது தூய்மைப்படுத்தாத பிசினைக் குறிக்கும். கைகளாலோ, துணியாலோ கஞ்சா செடிகளின் நுனிப்பகுதிகளைத் தேய்ப்பதால் இப் பிசின் கிடைக்கிறது. மத்திய ஆசியாவில் யார்கண்ட் (Yar kand) பகுதியில் இது முக்கியமாகத் தயாரிக்கப் படுகிறது. தண்டு, இலை, பூக்களில் காணப்படும் சுரப்பித் தூவிகளால் சுரக்கப்படும் ரெசினே போதைக்குக் காரணமாகிறது. கஞ்சா, சரஸ் வகையைப் புகைக்கும் வகையாகவும், பங்க் வகையைப் பானமாகவும் பயன் படுத்துவர். வெளி நாடுகளில் சிகரெட்டுடன் புகைப்பார்கள். கஞ்சாவைச் சிறிதளவு புகைத்தால் மகிழ்ச்சி தூண்டப்பட்டாலும், அளவு அதிகமாகும்