கண்ணாடியும் கண்ணாடிப் பொருள்களும் 355
சிலிக்கா கண்ணாடிகளின் உருகுநிலையைத் தேவையான அளவு குறைப்பதற்கு, சோடியம் கார்ப னேட் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்ப்பதால் தேவையான விளைவை ஏற்படுத்தலாம். ஆனால் இம்முறையில் உண்டாகும் கண்ணாடிகள் வேதிப் பொருள்களால் பாதிக்கப்படுகின்றன. இவை நீரி லேயே கரைந்து விடுகின்றன. இவற்றிற்கு நீர்க் கண்ணாடிகள் (water glass ) என்று பெயர். இத் தன்மையை மாற்றுவதற்கு, கால்சியம் ஆக்சைடு சேர்க்கப்பட்டுச் சோடா சுண்ணாம்பு சிலிக்கா கண்ணாடி செய்யப்படுகிறது. இக்கண்ணாடியின் மூலம் பெரும்பாலான கண்ணாடிப்பொருள்கள் செய்யப்படுகின்றன. இம் மூன்று பொருள்களும் முதன்மையாக இருந்தாலும், வணிகக் கண்ணாடிகள் செய்வதற்குப் பல ஆக்சைடுகள், அலுமினியம், மக்னீ சியம் ஆக்சிஜனேற்றமடைவதற்கும், மென்மையா வதற்கும், வண்ணம் நீக்குவதற்கும் தேவையான பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. தனிவகைக் கண்ணாடிகள், மேற்கூறியவற்றைத் தவிரப் பிற ஆக்சைடுகள் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக, போரான் ஆக்சை டைச் சிலிக்கேட் கண்ணாடிகளுடன் சேர்க்கும்போது அவற்றின் வெப்ப விரிவுத் தன்மை குறைகிறது. இவ் வகைக் கண்ணாடிகள் மூலம் ஆய்வகக் கண்ணாடிப் பொருள்கள் செய்யலாம். இக்கண்ணாடிகள் அடிக் கடி மாறும் வெப்பநிலைகளைத் தாங்கவல்லவை. பைரெக்ஸ் கண்ணாடிகள் இவ்வகையைச் சார்ந் தவை. அடுத்து. காரீய ஆக்ஸைசடச் சேர்ப்பதன் கண்ணாடியும் கண்ணாடிப் பொருள்களும் 355 மூலம் கண்ணாடியின் ஒளி விலகல் எண் மிகுதி யாகிறது. கண்ணாடிகள் மூலம் ஒளியியல் பொருள் களைச் செய்யலாம். இதைப் போலவே மேலும் பல வகைக் கண்ணாடிகள் குறிப்பிட்ட பயன்பாட்டிற் காசுக் குறிப்பிட்ட ஆக்சைடுகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன. அமைப்பு. கண்ணாடிகளில் உள்ள அணுக்கள் நீர்மங்களில் உள்ள அணு அமைப்பை ஒத்துள்ளன. படிக அமைப்பில் அணுக்கள் சீரான முறையில், மீண்டும் வரும் அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கண்ணாடியில் ஒரு குறிப்பிட்ட அணுவைச் சுற்றியுள்ள அமைப்புகள் சீராக இருந்தாலும், மொத்த அமைப்பைப் பார்க்கும்போது அணுக்கள் மீண்டும் நிகழும் முறையில் அமைந்திருப்பதில்லை. கண்ணாடிப் பொருள்கள். பெரும்பாலான கண்ணாடிகள் தட்டைப் பொருள்களான ஜன்னல் கண்ணாடிகள், தட்டுக் கண்ணாடிகள் செய்வதற்கும் ள்ள குடுவைப் பொருள்களான புட்டிகள், ஜாடிகள் செய்வதற்கும் பயன்படுகின்றன. முன் உலையில் உருகிய கண்ணாடியைப் பெரிய தகட்டின் மீது இழுப்பதன்மூலம் ஜன்னல் கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. இழுக்கப்பட்ட கண்ணாடிகள் நீள் அடுப்புகளில் குளிர்விக்கப்படுகின்றன. இவை தொடர்ச்சியாகத் தகடுகள் வெட்டும் எந்திரத்திற்குச் சென்று குறிப்பிட்ட நீளங்களில் (1.2 மீ.) வெட்டப் படுகின்றன. இவற்றின் வெட்டு முனைகள் மழுக்கப் படுகின்றன. இந்தக் கண்ணாடிகள் குறைகள் இல்லாத சிறு சிறு துண்டுகளாக மீண்டும் வெட்டி எடுக்கப் படம் 1. படிகத்தில் அமைந்திருக்கும் சீரான அணு அமைப்பு. வெள்ளை வட்டங்கள் ஆக்சிஜன் ணுக்களையும்,கறுப்பு வட்டங்கள் சிலிக்கான் அணுக்களையும் குறிக்கின்றன கண்ணாடியில் அமைந்திருக்கும் சீரற்ற அணு அமைப்பு ஒவ்வொரு சிலிக்கான் அனுவைச் சுற்றி (சுறுப்பு வட்டம்) அதே அளவு ஆக்சிஜன் அணுவைச்சுற்றி (வெள்ளை வட்டம்) காணப்படும்.