பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கட்குழி

18 கட்குழி போது உணர்ச்சியற்ற தன்மையும், நினைவற்ற நிலையும் தோன்றக்கூடும். இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் இதை மரிஜ்வானா (marijuvana) என்ற பெயரால் குறிப்பர், போதை மருத்துவத்தில் பயன் படும் இரசினில், கன்னபைனாலும் (cannabinal) அதைச் சார்ந்த வேதிப் பொருளும் உண்டு. பயிரிடும் முறை.விதைகள் மூலம் கஞ்சா பரப்பப் படுகிறது. நாருக்காகப் பயிரிடப்படும்போது விதைகள் நெருக்கமாகத் தூவப்படுகின்றன. செடிகள் பூக்கத் தொடங்கியவுடன் அறுவடை செய்யப்படுகின்றன. தண்டுகள் நீரிலோ பனியிலோ அழுகவிடப்பட்டு நார்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. ஏக்கருக்கு 3/4 1 டன் வரை நார் கிடைக்கும். எண்ணெய், போதை ரெசினுக்காகப் பயிரிடப் படும்போது விதைகள் பரவலாக 4 அடி இடைவெளி களில் ஊன்றப்படுகின்றன. பிறகு ஆண் செடிகளை அடையாளம் கண்டு அவற்றைப் பூப்பதற்கு முன்பே நீக்கிவிடுவர். எஞ்சிய பெண் செடிகளின் சுரப்பிகள் ரெசினைச் சுரக்கும். நடப்பட்ட 5 மாதங்களில் பூக்காம்புகள் மஞ்சளாக மாறும். அப்போது அவை ஒன்றுசேர்க்கப்படும். இவ்விதம் ஏக்கரில் 100 கிலோ கிடைக்கும். கஞ்சாவை முக்கியமாக ஏற்றுமதி செய்யும் நாடு கள் இத்தாலி, யுகோஸ்லோவாகி ஆகியன. இறக்கு மதி செய்யும் நாடுகள் மே.ஜெர்மனியும் பிரான்ஸும் ஆகும் இந்தியாவில் உரிமம் பெற்ற விவசாயிகள் மூலம் மே.வங்காளம், கர்நாடகம், தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் வருவாய்த்துறையினரின் மேற் பார்வையில் இது பயிரிடப்படுகின்றது. மேலும் நம் நாட்டில் கஞ்சா, சரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் பங்க் தயாரிப்பு மட்டும் சட்டப்புறம்பான முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கு மாயத் தோற்ற இலைகள், மகிழ்ச்சி தூண்டுவான், இணைப் பான் என்ற பெயர்களுண்டு. கட்குழி தி, ஸ்ரீகணேசன் மனித உடலின் முக்கிய உறுப்பாகிய கண் பாதுகாப் பாகத் தலையோட்டில் உள்ள கட்குழியில் (orbit) பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கட்குழி பிரமி டின் வடிவை ஒத்து இருப்பதுடன் முன்புறம் விரிந்தும் பின்புறம் குறுகியும் காணப்படும். கட் குழியின் மேல்தளம் பிராண்டல் காற்றறை, முன் தலைமோட்டு அறை மற்றும் முளையின் பிராண்டல் பகுதி ஆகியவ ற்றைக் கண்ணிலிருந்து பிரிக்கிறது. உட்பக்கச் சுவரில் உள்ள குழியில் கண்ணீர்ப் பையும் வெளிப்பக்கச் சுவரின் மேற்புறம் கண்ணீர்ச் சுரப்பி யும் காணப்படும். உட்சுவர் லேக்ரிமல் எலும்பாலும் lacrimal bone) மாக்சிலரி எலும்பின் ஃபிராண்டல் பகுதி (forntal process of maxilla) மற்றும் எத்மாய்டு எலும்பின் கட்குழி பகுதியாலும் ஆனவை. மேல் மை மேல் இமைத்தூக்கித்தசை மேல் நீள்தசை விழி நரம்பு கீழ் நீள்தகை கட்குழியின் நீள்வெட்டுத்தோற்றம் எத்மாய்டு எலும்பில் உள்ள துளை வழியே நரம்பும் புன்கலன்களும் கட்குழிக்கு வரும், பின்புறம் உள்ள விழித்துளை வழியே பார்வை நரம்பும் விழித்தமனியும் கட்குழியினுள் வரும். கட்குழியின் தரைப்பகுதி மாக்சிலரி எலும்பினால் ஆனது. து மாக்சிலரி காற்றறையைக் கட்குழியிலிருந்து பிரிக் கிறது. இதன் பின்புறம் கீழ் கட்குழிப்பிளவு (infra orbitral groove) காணப்படுவதுடன், இப்பிளவு முன் நோக்கிச் சென்று கீழ்க் கட்குழித் துளையில் முடிவடை யும். இத்துளை வழியே கீழ்க் கட்குழி நரம்பும் புன்கலன்களும் வெளிவரும். கட்குழியின் வெளிப்புறச் சுவரில் முக்கியமான பகுதிகள் எதுவுமில்லாமையால் விழிப்பிதுக்கத்தில் இவ்வெலும்பைச் செதுக்கிக் கட் குழியின் ஆழத்தை அதிகப்படுத்தலாம். வெளிச் சுவரைக் கட்குழி மேல்தளத்திலிருந்து மேற் கட் குழிப் பிளவு பிரிக்கிறது.