362 கண் நோய்கள்
362 கண் நோய்கள் கண் நோய்கள் உடலின் முக்கிய உறுப்புகளிலொன்றான கண்ணில் ஏற்படும் சில நோய்களால் மிகு துன்பம் இல்லை யென் றாலும் சில நோய்களால் கண்பார்வையில் முழுதுமோ பகுதியோ இழக்கக்கூடிய நிலை ஏற்பட லாம். கண்கள் மூக்கையொட்டியமைந்துள்ளமையால் கண்நோய்களும் மூக்கு நோய்களும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கும். வேறு உறுப்புகளில் ஏற்படும் சில நோய்கள் கண்களையும் தாக்கக்கூடும். கருவிழிப்படல நுண்ணோக்கி (cornea microscope), கண்உள் நோக்கி (ophthalmoscope) கீற்றுத்துளை விளக்கு ஆகிய கருவிகளைக் கொண்டு கண் நோய்க்கூறுகளை எளிதில் கண்டறியலாம். கண்நோய்களுக்குத் தகுந்த மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து கூடாது. கண் இமைப்படல நோய்கள் டக் மைகளின் உட்புறத்தையும் வெண் விழிலயயும் [ மூடியுள்ள கோழைப்படலத்தில் உண்டாகும் அழற்சி களில் முக்கியமானவை: தனால் கடும் சனி அழற்சி. இது கோக் (koch) என்னும் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயாகும். கண்கள் சிவந்து மஞ்சள் நீர் வடியும். காலையில் எழுந்தவுடன் இமைகள்ஒட்டிக் கொள்ளும். தகுந்த மருத்துவரை நாடி மருந்திட்டுக் கொண்டால் சில நாளில் நோய் நீங்கும். வீட்டிலோ அலுவலகத் திலோ இந்நோயுள்ளோர் இயன்ற இயன்ற வரை தனித் திருந்தால் நோய் தொற்றாமல் தடுக்கலாம். கண்களி லிருந்து வழியும் நீரை ஒற்றியெடுக்கும் துணிகளைப் பிறர் நடமாட்டமில்லாத இடத்தில் போட்டு எரித்து விட வேண்டும். வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன், நோயாளியின் துணி, படுக்கை, தலையணை முதலியவற்றையும் தனியாக வைப்பதே நல்லது. கோனோகாக்கஸ் என்னும் பாக்டீரியா அழற்சி கடுமையானால் இமையிணைப்படலத்திலிருந்து சீழ் வரும். இமைகளிலும் இமையிணைப் படலங்களிலும் வீக்கம் உண்டாகும். கருவிழிப்படலத்திலும் புண் உண்டாகும். புண் உண்டாவதற்கு முன் தகுந்த மருத்துவம் செய்யாவிடில் பார்வையை இழக்க நேரிடும். வெட்டை (gonorrhea) நோயால் பீடிக்கப்பெற்ற பெரும்பான்மையான வயது முதிர்ந்த ஆண்களிடம் இந்நோய் காணப்படும். சிறுநீர் கழிக்கும்போது சிறு நீர்க் (தாரை) குழாயில் கையை வைத்து விட்டுக் கண்ணில் வைப்பதாலும் நோய் உண்டாகும். கண்ணிமை நோய்கள். மை விளிம்பில் ஏற்படும் அழற்சிக்குக் கண்ணிமை அழற்சி (blepharitis) எனப் பெயர். இமை விளிம்பிலுள்ள எண்ணெய்ச் சுரப்பி களில் சீழ் உண்டானால் அதற்குக் கண்கட்டி எனப் கண் உள் நோக்கி கண் சுட்டி