கண் நோய்கள் 365
குறைவு, வலி, கூசுதல், கண்ணீர் ஒழுக்கு, முதலா னவை உண்டாகலாம். கடுமையான அழற்சியானால் குணப்படுத்துவதும் கடினம். உண் புண் கண் நோய் காயம், தோல் நோய், நரம்பு நோய் ஆகியவற்றால் சுருவிழிப்படலத்தில் புண்கள் டாகலாம். இவற்றில் ஹைப்போபையான் (hypopyon ulcer) என்பது மிகக்கடுமையானதாகும். இது பெரும்பாலும் நியுமோகாக்கஸ் கிருமியால் ஏற் படும் தொற்றுநோயாகும். கருவிழிப்படலத்தின் வழி யாக இக்கிருமியின் நஞ்சு செல்வதால் முன்னறையில் கருவிழிப் படலப் புண்ணும் சீழும் உண்டாகும். இத் துடன் இரண்டாம்நிலைக் கிளாக்கோமாவும் சேர்ந் தால் பெருந்துன்பம் உண்டாகும். தக்க மருத்துவம் செய்யாவிடில் கருவிழிப் படலத்தைத் துளைக்சு, கண் முழுதும் சீழ்பிடித்துப் பார்வையை இழக்க நேரிட லாம். பெனிசிலின் சிறந்த மருந்தாகும். சென்னைக்கண் (Madras eye) என்னும் நோய் வந்தால் கண்ணில் எரிச்சல் உண்டாகிக் கருவிழிப் படலத்தில் நுண்புள்ளிகள் தோன்றும். தக்க மருத்து வத்தால் புள்ளிகள் மறைந்து விரைவில் குணமாக லாம். ஆனால் கெர்க்பாட்ரிக் (kirkpatrick) என்னும் நோயால் எரிச்சல் குறைந்திருந்தாலும் புள்ளிகள் பெரிதாகத் தோன்றிப் பார்வையை மறைக்கும். குணமாவதற்கும் பல நாள் ஆகலாம். இந்நோய் ஒரு வகை வைரஸால் உண்டாகிறதெனக் கருதப்படுகிறது. கண் நோய்கள் 365 புடைய ஹெர்ப்பீஸ் ஸாஸ்ட்டெர் ஆப்தால்மிக்கஸ்! (herpes zoster ophthalmicus) என்னும் நோயும் வைர சால் ஏற்படும். இந்நோய் தோன்றிய சில நாள்களில் தலைமுன் பகுதியில் கடுமையான வலி தோன்றி, பின்னர் ஒரு கண் இமைகளிலும் நெற்றியிலும் கொப்புளங்கள் உண்டாகும். நாளாக ஆகக் கண்ணில் வேறுபல கோளாறுகளும் ஏற்படலாம். தலையில் காயம் ஏற்பட்டுத் தக்க மருத்துவம் செய்யத் தவறி னாலும் காஸேரியன் நரம்புச்செல்திரளில் (Gasserian ganglion) அழற்சி ஏற்பட்டாலும் இது போன்ற நோய் உண்டாகும். நரம்புப் பக்கவாதக் (neuroparalytic keratitis) கருவிழிப்படல அழற்சி நோயால் கருவிழிப் படலத்தின் புறப்படலம் கிழிந்து விரைவில் உலர்ந்து விடுவதால் ஒளிபுகாவண்ணம் பார்வையற்று விடு கிறது. விழித்திரை (iris) நோய்கள். நீர்வடிதல், ஒளியில் கண் கூசுதல், பார்வை மங்குதல் முதலியவை நோய்க் குறிகளாகும். கருவிழிப்படலத்தைச் சுற்றிச் சிவந் திருக்கும். விழித்திரை, பின்புறமுள்ள விழியாடியுடன் (lens) ஒட்டிக் கொள்வதால் கண் பாவை சுருங்கும். குற்றிழைத் தசையிலும் விழித்திரையிலும் ஒருசேர அழற்சி ஏற்படின் நோய் மிகவும் கடுமையாகும். கிரந்தி, தொழுநோய், காசம், வெட்டை, நீரிழிவு ஆகியவற்றால் பார்வைப் படலத்தில் (retina) ஒரு ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ் (வலக் கண்ணில்) ஹெர்ப்பீஸ் சிம்ப்ளெக்ஸ். (herpes simplex). இது வகை வைரஸ் கிருமிகளால் உண்டாகிறது. தனால் சளி, காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் தோன்றிக் கருவிழிப்படலத்தில் புள்ளிகளும் கொப்பு ளங்களும் (vesicles) உண்டாகும். கண்சிவந்து நீர் வடி யும். நோய் கடுமையானால் கருவிழிப்படலத்தில் புண் உண்டாகிக் கிளைவிடும். சின்னம்மைக்குத் தொடர் விழித்திரை நோயினால் கண் பாவை ஒழுங்கற்ற நிலை அடைதல