பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 கண்‌ நோய்கள்‌

366 கண் நோய்கள் கிளாக்கோமா சுருவிழிப்படலத்தில் படிவுகள் கட்டி போன்ற கடும்நோய் ஏற்படலாம். நோய் கண்டவுடன் மருத்துவம் செய்து கொண்டால் நலம் பெறலாம். சில வேளைகளில் கருவிழிப்படலத்தின் பின்புறம் படிவுகள் (keratic precipitate) ஏற்பட்டு, கெடு நீரால் பாவை மறைக்கப்படும். விழி ஆடியில் கண்படல நோய் உண்டாகி, பார்வை மங்கி, காலப் போக்கில் குருடாகும் நிலை தோன்றக்கூடும். வலி அதிகமானால் கண்ணையே எடுக்க நேரிடும். கிளாக்கோமா (glaucoma). கண்ணிலுள்ள பாய் மங்கள் சுரக்கும் நிலையும் அழுத்தமும் சரியான பார்வை நிலையில் இருந்தால்தான் தெளிவாக இருக்கும். கண்ணின் உறைகள் இடைவிடாமல் நீட்டி வைக்கப்பட வேண்டும். இதனால் முன்கணீர் (aque- ous humour) மூலமாக அழுத்தம் சரியான நிலையில் வக்கப்படும். பாய்மங்கள் சுரப்பது குறைவாகவோ மிகையாகவோ இருந்தால் அழுத்தம் மிகும். இவ் வழுத்தம் மிகும் நோய்க்குக் கிளாக்கோமா வை என்று பெயர். மிகை அழுத்தத்தின் காரணம் புலப்படா திருந்தால் முதல்நிலைக் கிளாக்கோமா என்றும், காரணம் தெரிந்தால் இரண்டாம்நிலைக் கிளாக் கோமா என்றும் குறிப்பிடப்படும். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர் களுக்கே முதல்நிலைக் கிளாக்கோமா தோன்றும். இது இரத்தம் நிறை (congestive) கிளாக்கோமா, இரத்தம் குறை கிளாக்கோமா என இருவகைப்படும். இரத்தம் நிறை-தொடக்கநிலைக் கிளாக்கோமா உள்ள நோயாளி விளக்குச் சுடரைப் பார்த்தால் சுடரைச் சுற்றி வானவில் போல் பல நிறங்கள் தோன்றும். கண்ணில் வலி, கடும் தலைவலி, வா வாந்தி. பார்வை மங்கல் முதலியன ஏற்படும். இதைத் தொடர்ந்து கண்பார்வையும் குறைந்து நாட்பட்ட கிளாக்கோமா நோய் ஏற்படும். பார்வைப்புலம் குறுகி, பாவை விரியும். கண் திசுக்கள் நலிவடைந்து இறுதியாகப் பார்வை குன்றும். இரத்தம் குறை கிளாக்கோமாவினால் மிகு துன்பம் இல்லாவிடினும், தகுந்த மருத்துவம் செய்யா விடில் நோய் முதிர்நிலையடைந்து கண்ணாடியை அடிக்கடி மாற்ற வேண்டிய நிலையேற்படும். பார்வைப்புலம் குறுகிப் பார்வையிழக்க நேரிடும். இந்நோய் தொடக்கத்திலேயே கண் பாவையைச் சுருங்கச் செய்து அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். இது நலம் தாராவிடில் அறுவை மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம். கண்படலம் (cataract). கட்டிகள், இரத்தம் கட்டுதல் போன்றவை இரண்டாம் நிலைக் கிளாக் கோமாளின் நோய்க் குறிகளாகும். ஒளிபுகாத கண்படலம் என்பது விழிஆடி நிலையைப் பெறுவதாகும். பொதுவாக முதி யோாக்கே இது நேர்ந்தாலும், வயது குறைந்த சிலருக்கும் ஏற்படலாம். குழந்தைகளில் சிலர் பிறக்கும் போதே கருவில் தோன்றும் (congenital) இந்நோ யுடன் பிறப்பதுண்டு. தாய் கருவுற்ற மாதங் கண்படல நோய் 5-4