பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 கண்‌ நோய்கள்‌

368 கண் நோய்கர் கண்படல நோய் உண்டாகும். பிட்யூட்டரி நாள் மில்லாச் சுரப்பி சீராக வேலை செய்யாவிடினும் இந்நோய் உண்டாகலாம். அறுவைதான் இதற்குச் சிறந்த மருத்துவம். பார்வைப்படல் இரத்தப் பெருக்கு (retinal haemorrhage). கடுமையான நோய்களிலொன்றான இதனால் இரத்த நுண்குழாய்களிலிருந்தும் சிரைகளி லிருந்தும் சில வேளை தமனிகளிலிருந்தும் இரத்தப் பெருக்கு ஏற்படும். இரத்தம் கசிந்து பார்வைப் படலத்தில் பெருகினால் பெரும் ஆபத் தில்லை. விழியடிக் கரும்படலத்துள் சென்றால் உண்டாகிப் நார்த்திசு, சாயப் பொருள் முதலியன பார்வைப் படலம் நலிவுறும். இந்நோய் கக்குவான், உடல் முறுக்குதல், நீண்டநோய், பேறுகால வேதனை, பார்வை நரம்பின் நுனி வீங்குதல், பார்வைப்படலச் சிரைகளில் இரத்தம் கட்டுதல், பார்வைப்படலத் தமனி நோய். மிகை இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் முதலியவற்றால் உண்டாகும். பார்வைப்படல மையத்தமனி அடைப்பு (occlusion of central retinal artery). இரத்தக்குழாய்ச் சுவர் தடித் தல், இரத்தக்கட்டி உண்டாதல் ஆகியவற்றால் உண்டாகும் இந்நோயில் திடீரென்று ஒரு கண்பார்வை போய்விடும். கண்ணின் அடித்தளம் வெளுத்துக் கண் தமனிகள் சுருங்கி, மஞ்சள் புள்ளியில் சிவப்புப்புள்ளி யும் தோன்றும். இரத்தக் குழாய்களில் இரத்தம் அடைபட்டு இடைவெளி விட்டுவிட்டு இருக்கும். பார்வைப் படலத் தமனிகள் மற்ற தமனிக களுடன் தொடர்பற்றுத் தனித் தமனிகளாகிவிடும். இதனால் பார்வை வட்டு வெளிறியும் பார்வை குறைந்தும் போகலாம். நடுப்பார்வைச் சிரையில் இரத்தக்கட்டு (thrombosis of the central retinal vein). இந்நோய் தமனிகள் கட்டிப்படுவதால் (arteriosclerosis) உண்டாகும். கண் குழிச்செல் அழற்சி அல்லது நஞ்சாதல் டைஃபாய்டு காய்ச்சலால் உண்டாகும். இந்நோயால் சிரைகளில் அதிகமாக இரத்தம் தேங்கிச் சிரைகள் கறுப்பாக மாறிவிடும். நாட்பட்ட நோய் கிளாக்கோமாவில் முடியும். இரத்தக் குழாய்கள் கட்டியாதலும் பார்வைப் படல இரத்தப் பெருக்கும் (arteriosclerosis retinopathy). இந்நோய் கடுமையான நிலையில் பார்வைப் படலத் தில் இரத்தப் பெருக்கும் பொருட்கசிவும் (exudate) உண்டாகும். இதனால் பெருமூளைத் தமனிகளிலோ அனைத்துத் தமனிகளிலுமோ நோய் ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். சிறுநீரகப் பாதிப்பாலும் இது ஏற்படலாம். அல்புமின் பார்வைப்படல அழற்சி. (albuminuric retinitis). சிறுநீரக அழற்சியால் பார்வை வட்டிலும், அதைச் சுற்றியுள்ள பார்வைப்படலத்திலும் வீக்கம் ஏற்பட்டு, இரத்தப்பெருக்கு, பஞ்சு போன்ற பொருட் கசிவு, மஞ்சள் புள்ளியில் நட்சத்திரம் போல் தோன்று தல் முதலிய சிக்கல்களுண்டாகும். இந்நோய் முற்றி னால் விரைவில் மரணம் நேரிடும். பேறுகால நஞ்சு நிலை ஏற்படும்போது உண்டாகும் பார்வைப்படல இரத்தப்போக்கு (retinopathy of toxaemia of pre- gnancy) நஞ்சுநிலை ஏற்பட்ட சூலைத் தொடக்கத் திலேயே அழித்துவிட்டால் தாயின் பார்வையையும் உயிரையும் பாதுகாக்கலாம். கடுமையற்ற இரத்தக் குழாய் மிகு அழுத்தம் (benign hypertension) உண்டானால் நோயாளி பல ஆண்டுகள் கூட வாழ முடியும். ஆனால் கடுமையான மிகு அழுத்தம் malignant hypertension) ஏற்பட்டால் நோயாளி ஆறு மாதங்கள் கூட உயிர் வாழ்தல் அரிது. நீரிழிவு பார்வைப்படல நோய் (diabetic retinitis). நீண்டநாள் நீரிழிவு நோயுள்ள முதியவர்களிடம் காணப்படும் இந்நோயால் கண்ணிலிருந்து சோப்புப் போன்ற கசிவும், வட்டமான புள்ளியுடைய இரத்தப் பெருக்கும் உண்டாகும். இந்நோய் ஆபத்தானதன்று என்றாலும் உடனடியாகத் தக்க மருத்துவம் செய்து கொள்வது நல்லது. பார்வைப்படலம் பிரிதல் நோய் (detachment of retina). இது கொடிய நோய்களில் ஒன்று. இதனால் பார்வைப் படலத்தின் ஒரு பகுதியோ முழுதுமோ முன்னால் பிதுங்கும். பார்வைப்படலம் அல்லது விழி யடிக் கரும்படலத்தில் கட்டி ஏற்படுதல், அழற்சி, ஒட்டுண்ணி, இரத்தப்பெருக்கு, ஊனீர் சுரத்தல், கிட்டப்பார்வை ஆகியவற்றால் இந்நோய் உண்டா சூம். நோய்த் தொடக்கத்தில் பளிச்சென்று ஒளிவீசும் பொருள்கள் திரைவழியாகப் பார்ப்பது போல் மங்க லாகத் தெரியும். பிரிந்த பார்வைப்படலம் சாம்பல் நிறத்தில், மடிப்புக்களுடன் கண் அசையும்போது அசையும். பார்வைப்படலத்தில் துளை இருந்தால் அறுவை மருத்துவம் செய்ய வேண்டும். தகுந்த நேரத்தில் மருத்துவம் செய்யத் தவறினால் பார்வை இழப்பு ஏற்படும். மீது குமிழ்' ஊனீர்ச்சுரப்பு (papilloedema). பார்வை நரம்பின் தலைப்பில் ஊனீர் சுரப்பதால் உண்டாகும் இந்நோயில் பார்வை வட்டுச் சிவந்தும், சிரைகள் விரிந்தும் தோன்றும். ஊனீர்ச் சுரப்பினால் பார்வைப் படலம் சாம்பல் நிறமாகிவிடும். பார்வை வட்டின் இரத்தப் பெருக்கு உண்டாகும். மஞ்சள் புள்ளியில் நட்சத்திரம் போல் தோன்றும், பார்வை நரம்பு நசித்துப் (optic atrophy) போகும். பார்வை நரம்பு மெலிவடைய இறுதியில் கண் குருடாகி விடும். மண்டையோட்டில் அழற்சி, இரத்தப்பெருக்கு, மூளைக்கட்டி முதலியவற்றாலும் இந்நோய் உண் டாகும். தொற்றுப் பார்வைக்குறைவு. பார்வைக்குறைவு. (toxic amblyopia). கண்ணின் அடித்தளத்தில் ஏற்படும் இந்நோயின்