பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 கண்‌ நோய்கள்‌

370 கண் நோய்கள் பார்வை நரம்பழற்சி புகையிலைப் பார்வைக் குறைவு து அண்மைப் கண் பார்வை உருண்டை (myopia or short sight). நீள்வதால் ஏற்படுகிறது. இத்துடன் பார்வைப்படலம் பிரிந்தால் கண்குருட கி விடும். குழி ஆடிகளைப் பயன்படுத்தி இதைச் சீர் செய்யலாம். குழந்தைகளுக்கு அடிக்கடி கண் ஆய்வு செய்து தேவைப்படின் தகுந்த மூக்குக் கண்ணாடி அணியச் செய்தால் நாளடைவில் பார்வை சீராகி விடும். கண்ணாடிகளை எப்போதும் அணிந்திருப்ப துடன், வெளிச்சம் குறைந்த இடத்தில் படிப்பதோ எழுதுவதோ கூடாது.பஸ்-இரயில் பயணங்களின் போது படிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒளி முனைப்படாமை (astigmatism). இது ஒழுங் கானது, ஒழுங்கற்றது என இரு வகைப்படும். ஒழுங் கான ஒளி முனைப்படாமைக்கு உருளை வடிவ ஆடிகளைப் பயன்படுத்தி மூக்குக் கண்ணாடி அணிந்து சரி செய்யலாம். ஒழுங்கற்ற ஒளி முனைப் படாமைக்கு கண் விழியை ஒட்டியிருக்கும் விழி ஆடிகளைப் பயன் படுத்த வேண்டும். அஃபாக்கியா (aphakia). விழி ஆடி இல்லாதிருந் தால் தூரப்பார்வைக் குறை மிகுதியாக ஏற்படும். கண் படல் நோய்க்குரிய அறுவை செய்த பின் சில கோளாறுகளால் இது உண்டாகும். வெள்ளெழுத்து (presbyopia). பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் முதியோரிடம் பரவலாகக் காணும் இந்நோயால் எழுத்துக்கள் வெளிறித் தோன்றும். தெளிவாய்ப் படிப்பதற்குப் புத்தகத்தைத்தொலைவில் வைத்தோ மிகுந்த வெளிச்சமுள்ள இடத்தில் வைத்தோ படிக்க வேண்டியிருக்கும். முதுமைப் பார்வையைச் சீர் செய்யக் குவி ஆடிகளைப் பயன் படுத்த வேண்டும். ஓட்டு விழிஆடிகள் (contact lenses). இவை விழிப் புறப்படலத்தை ஒட்டியிருந்து இமைகளினடியே கருவிழிப்படலத்தை மூடியிருக்கும். கூம்பும் கருவிழிப் படல நோய்க்கு மூக்குக் கண்ணாடிகள் பயன்படாத போது இவை மிகுந்த பயனளிக்கும். ஒளிக்கோட்டத் தன்மையில் இரண்டு கண்களிலும் வேறுபாடுகள் மிகுந்திருந்தால் இத்தகைய கண்ணாடிகள் இரண்டு கண் பார்வையும் சரியாகக் கிடைக்கச் செய்யும். வை கண்களையும் பாதுகாக்கின்றன. ஒட்டு விழி ஆடி பொருத்தும் முறை