கணிதக் குறிகளும், குறியீடுகளும், குறிமுறைகளும் 377
இருக்கிறார். முனைவர் சுதர்சன் அவர்கள் 'மூன்றாம் உலக இயற்பியல் அவையின் பரிசை' (III world academy prize for physics) முதன்முறையாகப் பெற்ற வர். இந்நிறுவனத்தின் அறிக்கைகள் " அறிவியல் ஆய்வு நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆகும்போதுதான் முழுமை பெறுகிறது" என்னும் குறிக்கோளுடன் தொடங்கி மேலும் பல நோக்கங்க ளைப் பின்வருமாறு அறிவிக்கின்றன. செயல்முறை ஆக்கப் பணிகளுக்கும், கணித அடிப்படையைக் கொண்ட அறிவியல் வளர்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் பெறுகின்ற இன்பத்திற்கும் ஏற்ற வாய்ப்பையும் சூழ்நிலையையும் உருவாக்கித்தருதல்; தனிக் கணிதம் (pure mathematics), பயன்படுகணிதம் (applied mathematics), தனி இயற்பியல் (theoretical physics), பயன்படு இயற்பியல் (applied physics), விண் மீன்களைப் பற்றிய இயற்பியல் (astrophysics) இவை பற்றி ஆய்வு செய்வதற்கு உதவுதல்; அனைத்து நாடுகளையும் சார்ந்த அறிவியலாருடன் தொடர்பு கொண்டு ஆய்வு செய்வதற்கான திறனை வளர்த்தல்: நிறுவனத்தில் அனைத்து நாடுகளையும் சார்ந்த அறிவியலாரின் சொற்பொழிவு, கருத்தரங்குகளை நடத்திப் புதிய அறிவியல் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுதல் முதலிய திட்டங்களைக் குறிக்கோளாக நிறுவனம் அறிவிக்கின்றது. தொடக்க காலத்தி லிருந்தே இக்குறிக்கோள்கள் நல்ல முறையில் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. இங்குள்ள அறிவியலார்களின் புதிய கண்டுபிடிப் புகள் பற்றிய கட்டுரைகள் உலக அறிவியல் ஏ களில் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ளன. இக் கட்டுரைகள் நிறுவனத்திலுள்ள நூலகத்திலும் வைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயன்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்தும் அறிவியலார் பலர் வந்து தங்கி ஆய்வுகள் செய்து அறிக்கைகள் வெளியிட் டுள்ளனர். மேலும் இங்கு நடைபெறும் பல கருத் தரங்குகள், கோடை வகுப்புகள் ஆகியவற்றின் அறிக்கைகளும் நூலகத்தில் உள்ளன. இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களிலிருந்து வந்து இந்நிறுவனத்தில் ஆய்வு செய்யவும், இந் நிறுவனம் அளிக்கும் முனைவர் பட்டத்திற்கு எங்கும் சிறப்புள்ளமையால் அப்பட்டம் பெறவும் மாணவர் பலர் வருகின்றனர். 'வருகைதரும் பேராசிரியர்கள் திட்டம்' (visi ting professors scheme) ஒன்று இந்நிறுவனத்தில் செயல்படுவதன் மூலம் நூற்றுக்கணக்கான மேதைகள் பலநாடுகளிலிருந்தும் இங்குவந்து சொற்பொழி லாற்றுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் ஒரு பெரிய கருத்தரங்கு அமைக்கப் பெற்றுப் பல நாட்டு அறிவியலார் தங்கள் கண்டு பிடிப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். கணிதக் குறிகளும், குறியீடுகளும், குறிமுறைகளும் 377 இங்கு நடக்கும் ஆராய்ச்சிப் பகுதிகளில் சில பின்வருமாறு: நிகழ்தகவுச் சார்பு முறைகள் (stochaistic proces- ses ) அடிப்படைத்துகள் இயற்பியல் (particle physics) அணு இயற்பியல் (nuclear physics) பலதுகள், சுருக் திய பொருள் இயற்பியல் (many particle, condensed matter physics) புள்ளியல் இயக்கவியல் (statistical mechanies) தனிக்கணிதத்தின் அனைத்துப் பிரிவுகளின் கணக்கிடுபொறியியல் (computer science) போன்ற பல உள. நூலகம். இங்கு ஒரு சிறந்த நூலகம் உள்ளது. இதில் ஏறக்குறைய 20,000 சிறந்த கணித இயற் பியல் நூல்கள் உள்ளன. பல்வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கு மேலான அறிவியல் ஏடுகள் வருகின்றன. இவற்றுடன் இந்நிறுவனத்தின் அனைத்து வெளியீடு களும் அறிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. மாணவர் களும் ஆசிரியர்களும் பயன்படுத்துவதற்கு இங்கு வசதியான படிப்பகமும் உள்ளது. ஆட்சிக்குழு. இந்நிறுவனத்துக்குத் தமிழக அரசின் கல்வி அமைச்சர், தமிழக அரசின் கல்விச் செயலர். மத்திய அரசின் அணு ஆராய்ச்சித்துறையின் தலைவர், மத்திய அரசின் அணு ஆராய்ச்சித்துறை யின் செயலர், இந்நிறுவனத்தின் இயக்குநர், இந் நிறுவனத்தின் பேராசிரியர் ஒருவர் ஆகிய 6 உறுப் பினர்கள் கொண்ட ஆட்சிக்குழு உள்ளது. - எல்.இராசகோபாலன் கணிதக் குறிகளும், குறியீடுகளும், குறிமுறை களும் குறிகள் (signs). குறியீடுகள் (symbols). குறிமுறைகள் (notations) ஆகியவற்றைப் பயனபடுத்துவதால் கணிதச் செயல் முறைகள் (mathematical operations) மிகவும் எளிமையாகும். சில குறியீடுகள், செயல் முறை எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை விளக்கு கின்றன. சில குறிமுறைகள் சொற்றொடர்களுக் காகப் பயன்படுகின்றன. தற்போது பயன்படுத்தப் பட்டு வரும் குறியீடுகள் கணிதத்தில் மிகவும் அடிப் படையானவை. அவை நீண்ட நாளாகப் பல நாடு களில் பல மொழிகளில் பலவாறாகப் பயன்படுத்தப் பட்டு வந்து, வளர்ச்சியடைந்த நிலையை எட்டி யுள்ளன. தற்போது இக்குறியீடுகள் உலகமனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன ஒவ்வொரு குறியீடும் மிகவும் எளிமையாகவும். சுருக்கமாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றைப் பார்த்தவுடன் மனத்தில் பதியவைத்துக் கொள்வதற்கும், எளிதில் எழுதுவதற்கும். அச்சிடு VOL 7