384 கணிதப் படிமங்கள்
384 கணிதப் படிமங்கள் கணிதச் சிறப்பியல்பு, கற்பவர்களுக்கு முரண் பாடற்ற சிந்தனைத் திறனையும் (coherent thinking) தர்க்கரீதியான அறிதிறனையும் (logical reasoning) கணிதம் சுற்றுத் தருகிறது. பொதுவாக ஏனைய வழிச்சிந்தனையில் தீவிர உணர்ச்சிகளுக்கும் மனக் கிளர்ச்சிகளுக்கும் இடமுண்டு. ஆனால் கணித வழிச் கணிதத்தைக் சிந்தனையை அவை பாதிப்பதில்லை. கற்பதால் ஒருவர் மன ஒழுக்கத்தையும் (mental discipline) விழிப்புணர்ச்சியையும் (alertness) முழுமை யாகப் பெறுகிறார். அறிமுறைப் பிரச்சினையானாலும் (theoretical problem) நடைமுறைப் பிரச்சின அதைச் சரியாக யானாலும் (practical problem) அணுகித் தீர்வு காண்பதற்க கான பயிற்சியை ஒருவர் கணிதத்தைக் கற்பதால் பெறுகிறார். னை கணிதம், இசை அல்லது கவிதையைப் போல மனித மனத்தின் கற்பனையில் தோன்றிய படைப்பு ஆகும். அதன் உண்மை நிலை வெளிப்படையான ஏனைய உண்மை நிலைகளினின்றும் மா றுபட்டது. எவ்வாறு மொழி மனித எண்ணங்களையும் சிந்தனைப்போக்குகளையும் குறிப்பாக வெளிப் படுத்துகிறதோ, அவ்வாறே கணிதம் அறிவியல் விதி களையும் செயல்படுத்தற்குரிய கோட்பாடுகளையும் தெளிவாக உருவாக்கிக் கொடுக்கிறது. கணிதத்தின் ஆழ்ந்த நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளமட்டும் தான் சிறப்புப்பயிற்சி தேவையேயன்றி, கணிதமுறை களையும் முடிவுகளையும் பொதுவாகப் புரிந்து கொள்வது கடினமன்று. தி.வீரராஜன் புரிந்து கணிதக் கருத்துகளை எளிமையாக்கி எல்லோரும் புரிந்து கொள்ள வகை காண்பதே கணிதப் படிமங் களின் குறிக்கோளாகும். பல படிமங்கள் முப்பரி மாணங்களால் உருவாகி, எளிதாகப் கொள்ள இயலா த நிலையில் உள்ளன. கணிதக் கோட்பாடுகளைப் படிமங்கள் நிரூபிக்காவிடினும். அவை ஆய்வின் வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைகின்றன. அத்துடன் புதிய படைப்புகள் உரு வாக வழி வகுக்கின்றன. ஒரு வரைபடம் வரையத் தேவைப்படும் நுட்ப அளவுகள் இவற்றிற்குத் தேவை யில்லையெனினும், முறையான கவனத்துடனும் யான சரி தயாரிக்கப்பட பொருள்களுடனும் இவை வேண்டும். படிமங்களின் செய்முறை செய்யக்கூடிய வரின் குறிக்கோளைப் பொறுத்துள்ளது. வெளித் கணிதப் படிமங்கள் எந்த ஒரு முறையையும் உருவப்படுத்தி அதன் பண்பு களைத் தெளிவிப்பது படிமங்களின் (models) குறிக் கோளாகும். எடுத்துக்கொண்டுள்ள முறை சிக்கலாக வும். அளவில் பெரியதாயுமிருந்தால் அதற்குத்தக, படிமத்தின் பயன் அதிகமாகிறது. படிமத்தைத் தயாரித்து, ஆய்வுக்குட்படுத்தி மிகச்சிக்கனமான முறையில் திருத்தியமைக்கவும் இயலும். பொருத்த மாகத் தயாரிக்கப்படும் படிமத்தைக்கொண்டு, பல முறைகளை மிக எளிமையாகவும், பயனுள்ள வழியி லும் அணுக முடியும். பாலம், பெரிய அணைத் தேக்கம், வானவூர்தி, துறைமுகம், விவசாயக்கருவி போன்ற பற்பல கருவிகள் உருவாவதற்குப் படிமங் கள் பெரிதும் பயன்படுகின்றன. குழந்தை விளையாடும் மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டிதான் கன சதுரங்களாக (cubes), பட்டகங் களாக (prisms). உருளைகளாக (cylinders) உரு வெடுத்துப்பற்பல படிமங்களுக்கு அடிகோலுகின்றது. படம் 1