கணிதப் படிமங்கள் 385
தோற்றத்தை மட்டும் படம் 2 அளந்தறியவல்ல படிமங் களைக் காகித அட்டை மரப்பூச்சுப் (wood plaster ) போன்றவற்றால் செய்ய இயலும். அதேசமயம், படிமங்களைப் பிரிக்காமல், உள் தோற்றத்தை ஆய வேண்டின் வெளிப்புறத்தைக் கண்ணாடி அல்லது எளிதில் பார்க்கவல்ல ஞெகிழி போன்ற பொருள் களால் உருவாக்க வேண்டும். மெல்லிய உலோகத் தகடும், காகித அட்டையும் பல படிகங்கள் செய்யப் போதுமானவையாகும். கயிறுகள் பட்டு அல்லது பருத்தி நூல்களும் கூட இதற்குப் பயன்படுகின்றன. 1958ஆம் ஆண்டிலிருந்து நடந்த முனைப்பான ஆய்வின் விளைவாக உயிரியலின் கணிதப் படிமங்க ளில் பெரிய மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. கணிதப் படிமங்களை வசதிக்கேற்ப இரு வகையாகப் பிரிக்கலாம். இயற்பியல் கண்ணோட் டத்திலுள்ள கணிதப் படிமங்களில் அட்டையால் உருவப்படுத்தப்படும் தளங்களையும், திண்ம வரை முறை உருவங்களையும் எடுத்துக்கொள்ள இயலும். இன்னும் சில கடினமான கணித இயல்புகளைக் குறிக்கும் இயற்பியல் சார்புள்ள பரப்புகளும் (surfaces), கூம்புப் பகுதிகளும் (conic sections), படம் படம் 4 கணிதப் படிமங்கள் 385