386 கணிதப் படிமங்கள்
386 கணிதப் படிமங்கள் அண்ட வெளியிலுள்ள வளைவரைகளும் கம்பி, நூல் ஆகியவற்றால் செய்யப்படும் முப்பரிமாண உருவங்க ளும் இதில் அடங்கும். இது ஒரு வகை. அடுத்து;கொள்கைக் கண்ணோட்டத்தில் (theore- tical sense) பார்க்கும்போது, கணிதப் படிமங்கள் பெரியதொரு முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. பயன் இயற்கையாகவோ தொழில் நுட்பத்தைப் படுத்தி மனிதனால் உருவாக்கப்பட்டோ அமைக்கப் படும் இயற்பியல், உயிரியல் உலகில், பல செய்தி களும் செயல்களும் எண்ணிக்கையில் அளவிடப்படும் நிலையில் கணிதப் படிமங்கள் அதிகமாகப் பயன் படுகின்றன. இதனால்தான், ஆளும் கொள்கையும் (control theory). மீப்பெரு அல்லது மீச்சிறு மதிப்பு காணும் ம் களைக் (optimization) கொள்கைகளும், இன்று பல தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து அமைப்புகள், அவற்றைச் சார்ந்த கருவிகள், செய்தித் தொடர்புகள், இணைப்புகள், செய்திகளை ஓரிடத்தி லிருந்து மற்றோர் இடத்திற்கனுப்புதல், கணிப் பொறித் தூண்டுதல், இன்னும் அறிவியலிலும், பொறி யியலிலும் காணப்பெறும் எண்ணற்ற செயல்கள் ஆகியவற்றைக் கவர்ந்துள்ளன. கன பல பிரச்சினைகளைக் கூட மரப்படிமங்களைப் பகுதிகளாகப் பிரித்துத் தீர்க்க இயலும். ஈருறுப்புக் கன சதுரத்தை (binomial cube) இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். சிறு கன சதுரங்களாகவும், பட்டயங்களாகவும் விளிம்பு நீளங்கள் a, b எனும் மதிப்புகளையுடைய (a + b) எனும் பெரிய சதுரத்தையும், அதற்குச் சமமான as + 3a' b + 3ab' +b எனும் தடுப்புகளையும் (block) கொண்டவை இப்படிமங்கள்.கூம்புப் பகுதிகளைப் பற்றிய விளக்கம், படிமங்களின் துணையால் எளிதாக்கப்படுவதை அறியலாம். நேர்கோட்டின் சுழற்சியால் ஏற்படும் பரப்புகள் இதற்கு எளிய எடுத்துக்காட்டுகளாகும். படம் 1 இல் உள்ளது ஒரு நூல் படிமமாகும். இரு வட்ட வடிவத் தகடுகளில் (circular disc) ஒரே அளவு தூரத்தில் துளையிட்டு, நூல்களாலும், பாரமான கயிறுகளாலும் இப்படிமங்கள் அமைக்கப்படுகின்றன. படம் 5