404 கணிப்பான் (மின்னணுப் பொறியியல்)
404 கணிப்பான் மின்னணுப் பொறியியல்) மடக்கைப் பின்னமும் (mantissa) ஒரு பண்பெண்ணும் (characteristic) அடங்கியிருக்கும். பண்பெண் எதிரின் மாகவோ, நேரினமாகவோ இருக்கலாம். மடக்கைப் பின்னத்தில் ஒரு இலக்கம் கட்டாயமாக இருக்கும். அது பூஜ்யமாகக்கூட இருக்கலாம். அது தசமப் புள்ளிக்கு இடப்புறத்திலிருக்கும் பலகணியில் 4.2 07 என்று தெரிந்தால் அது 4. 2×10' என்ற எண்ணைக் குறிப்பதாகும். 4.2-07 எனத் தெரிந்தால் அது 4.2×10-1 ஆகும். பொறியியல் குறியீட்டில் பண் பெண் மூன்றின் முழுஎண் மடங்காக இருக்கும். தசமப் புள்ளியின் இடப் புறத்தில் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று எண்கள் அமையும். அவை பூஜ்ய மாக ருக்கா. அதன்படி 4.2×10? என்ற எண் 42.0 06 என்று அல்லது 420000 03 என்று காட்டப்படும். சாதாரணக் கணிப்பான்களின் காட்சிப் பல கணியில் 8 இலக்கங்களுக்கு இடமிருக்கும். + அல் லது குறிக்காகவும் ஓரிடம் விடப்படும். அறிவியல் மற்றும் பொறியியல் கணிப்பான்களில் 12 அல்லது 14 இலக்கங்களுக்கு இடமிருக்கும். அவற்றில் 8 அல்லது 10 இடங்கள் மடக்கைப் பின்னத்திற்கும் 2 டங்கள் பண்பெண்ணுக்கும் ஓர் டம் மடக்கைப் பின்னத்தின் குறிக்கும் ஓர் இடம் பண்பெண்ணின் குறிக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். L தாடக்கக் காலக் கணிப்பான்களில் காட்சிப் பலகணியை ஒளியூட்ட உயர் மின்னழுத்த வளிம மின்னிறக்கக் குழல்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று அவற்றில் ஒளி உமிழ் யோடுகள் (LED) பயன் படுத்தப்படுகின்றன. இவை நம்பகமானவை. குறைந்த மின்னழுத்தத்தில் இயங்குபவை. ஆயினும் கணிப் பானில் செலவாகும் மின்னாற்றலின் பெரும்பகுதி ஒளி உமிழ் டயோடுகளை ஒளிரச் செய்வதற்கே செலவாகிறது. பல கணிப்பான்களில் சில நிமிடங் களுக்குப் பிறகு ஒளி உமிழ் டயோடுகள் தானாகவே அணைந்து விடும்படிச் செய்வதன் மூலம் மின்னாற்றல் மிச்சப்படுத்தப்படுகிறது. இன்னும் நவீனமான கணிப்பான்களில் நீர்மப்படிகக் காட்சி (liquid crystal display) அமைப்புகள் பயன்படுகின்றன. இவற்றில் செலவாகும் மின்னாற்றல் மிகவும் குறைவு. ஆனால் வெளிச்சமான இடங்களில் மட்டுமே அவற்றை எளிதாகப் பார்க்க முடியும். விடக் கணிப் பல கணிப்பான்களில் தகவல்களைச் சேமித்து வைக்கும் வசதி அமைந்திருக்கிறது. அறிவியல் சுணிப் பான்களில் பத்துத் தகவல்கள் வரை சேமித்து வைக்க முடியும். கணிப்பொறிகளை பான்களின் கணக்கீடு வேகம் குறைவு. ஆயினும் எளிய கணக்குகளைப் போடவே கணிப்பான்கள் பயன்படுத்தப்படுவதால் இந்தக் காலத்தாழ்வு பொருட்படுத்தப்படுவதில்லை. ஆணைத் தொடர் களைப் பின்பற்றிக் கணக்குகளைத் தாமாகவே போட்டு விடைகளை அச்சிட்டுத் தரும் வகையிலும் கணிப்பான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆணைத் தொடர் நினைவுக்காப்பகத்தில் பதிவு செய்யப்படும். கணிப்பானை அணைத்தவுடன் நினைவுக் காப்பகத்தில் சேமித்து வைக்கப்பட்ட தகவல்கள் மறைந்துவிடும் வகையில் பெரும்பாலான கணிப் பான்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சில வகைக் கணிப்பான்களில் தனியாகக் காந்தப்பதிவு அட்டை கள் அல்லது நாடாக்கள் நினைவுக் காப்பகமாகப் பயன் படுத்தப்படுகின்றன. கணிப்பானை இயக்கும் போது இவற்றைப் பொருத்திக் கொள்ள வேண்டும். சிறப்பு நோக்கங்களுக்காகப் பல கணிப்பான்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நிதிக்கணக்கிடும் கணிப் பான்கள் விளைச்சல், கூட்டு வட்டி, கடன் கணக்கு போன்ற விவரங்களைக் கணக்கிடும். காசோலைக் கணிப்பான் வங்கியில் உள்ள பணத்திற்குக் கணக்கு வைக்கும் கணிப்பான்களை எளிய கணிதம் அல்லது மொழிகளில் பயிற்சி தரும் ஆசான்களாகவும் பயன் படுத்துகின்றனர். கே.என். இராமச்சந்திரன் கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) தேவையான கணக்குகளை எளிமையாகவும் விரை வாகவும் செய்யப் பயன்படும் கருவிகளுக்குக் கணிப் பான்கள் (calculators) எனப் பெயர். முற்காலத்தில் எந்திர பகுதிகளை முழுமையாகக் கொண்ட கணிப் பான்கள் தயார் செய்யப்பட்டன. நாளடைவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றத்தால் பல மின்னணுக்கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டன. அவற்றின் முன்னேற்றத்திற்கேற்பக் கணிப்பான்களும் செய்யப்பட்டன. தற்காலத்தில் மின்னணுக் கணிப்பான்கள் மிகுதி யாகத் தயாரிக்கப்படுகின்றன. அவை பயன்படுத்தப் படுவதற்கு மிகவும் எளிதாக உள்ளன. வணிகப் போட்டி காரணமாகப் பல்வேறு தொழில் நிறுவனங் கள் பல்வேறு வகையான கணிப்பான்களை உ உற்பத்தி செய்கின்றன. கணிப்பான்கள் ஆற்றும் பணிகளைப் பொறுத்து அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கைக்கடிகாரம், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கணிப்பான்கள் பொருத்தப்பட் அளவுகோவிலும் டுள்ளன. வரலாறு. பண்டைக்காலத்தில் கணக்கிடக் கை விரல்களைப் பயன்படுத்தினர். பத்து விரல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கணிதமுறை தசம முறை எனப்பட்டது. அக்காலத்தில் கணக்கிடும் தொகை