கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) 405
மிகவும் குறைவாக இருந்தது. ஆதலால் அக்கணக்கை மனத்திலேயே செய்து நினைவில் வைத்துக் கொண்டனர். நாளடைவில் கணக்கிடும் அளவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே அவற்றை நூலில் பதிவு செய்து வைத்தனர். கடந்த நூற்றாண்டில் வணிகப் பெருக்கத்தின் காரணமாகக் கணக்கிடும் அளவுக கள் அதிகரித்தன. விரைவில் செய்ய வேண்டிய கட்டாய மும் ஏற்பட்டது. இதைச் செய்ய மனித ஆற்றல் மிகுதியாகத் தேவைப்பட்டதால் செலவும் அதி கரித்தது. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் செயல் களைச் செய்ய முடியவில்லை. இதனால் எந்திரக் கருவிகளின் உதவியை நாடினர். எந்திரக் கருவிகளின் உதவியால் எளிதாக, விரைவாகப் பிழையில்லாமல் கணக்கிட முடியும் என்று கருதினர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கருவிகள் கணிப்பான்கள் எனப் பட்டன. எந்திரக் கணிப்பான்கள் (mechanicai calculators). எந்திரக் கணிப்பான்கள் முழுதுமாக எந்திர உறுப்பு களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தொடக்கக் காலங்களில் எந்திரக் கணிப்பான்கள் கண்டுபிடிக்கப் பட்டன. நகரும் அளவு கருவி (slide rule) ஓர் எந்திரக் கணிப்பான் ஆகும். இதில் ஒரு நிலையான அளவுகோல் உள்ளது. அது பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு எண் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் நகரும் அளவுகோலும் உள்ளது. இதுவும் சமமாகப் பிரிக்கப்பட்டு, எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவி நீள அளவு கணக்கிடும் அளவைக் குறிக்கிறது. இந்த அளவுகோல் கூட்டல் கணக்கைச் செய்யப் பயன்படுகிறது. சான்றாக, இரண்டையும் மூன்றையும் கூட்ட வேண்டுமானால் நகரும் அளவுகோலில் உள்ள இரண்டு எண் அளவை நிலையான அளவுகோலில் உள்ள பூஜ்யம் அளவிற்கு நேராக வைக்க வேண்டும். நிலையான அளவு கோலில் உள்ள மூன்றுக்கு நேர் நகரும் அளவு கோலில் உள்ள எண்ணைப் படிக்க வேண்டும். அந்த எண், இரண்டையும் மூன்றையும் கணிப்பான்(மின்னணுப் பொறியியல்) 405 கூட்டினால் கிடைக்கும் தொகையைக் குறிக்கும். இந்த அளவுகோலைப் பெருக்கல் கணக்கைச் செய்ய வும் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்ய அளவு கோவில் உள்ள அளவுகளை மாற்ற வேண்டும். பின்னர் பல் சக்கரங்களையும் உருளைகளையும் கொண்டு கணிப்பான்களை உருவாக்கினர். அவற்றின் சுழற்சி (rotation) அளவைக் குறிக்கப் பயன்பட்டது. 1642 இல் பாஸ்கல் என்பார் பல்சக்கரங்களைப் பயன்படுத்திக் கணிப்பானை உருவாக்கினார். இக் கருவியை அவர் தம்முடைய தகப்பனாருக்குக் கணக் கில் உதவி செய்ய உருவாக்கினார். 1671-இல் லெபிநெட்ஸ் என்னும் ஜெர்மானியர் படியமைப்பு உருளைகளைக் (stepped cylinders) கணக்கிடப் பயன் படுத்தலாம் என்று கூறினார். து பல முக்கிய முன்னேற்றங்களுக்குத் துணையாக் விளங்கியது. இதற்குப் பின்னர் நூறு ஆண்டுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 1770 இல் ஹொன் என்னும் ஜெர்மானியர் புதிய நான்கு செய்கைக் (four process) கணிப்பானை உரு வாக்கினார். அவர் லெபிநெட்ஸ் கண்டுபிடித்த 1820 அடுக்கு உருளையை அவருடைய கணிப்பானில் பயன் படுத்தியுள்ளார். இல் தாமஸ் என்னும் பிரான்ஸ் நாட்டவர் அடுக்கு உருளையில் சுழற்சியை உண்டாக்கும் வணரியை (crank) இணைத்துப் புதிய கணிப்பானை உருவாக்கினார். அந்த எந்திரம் தற் காலக் கணிப்பான்களுக்கு முன்னோடியாகக் கருதப் படுகிறது. இக்கருவி ஐரோப்பா முழுதும் பயன் படுத்தப்பட்டுப் பின்னர் அமெரிக்காவிலும் பரவியது. அங்கு அது பல முன்னேற்றங்களுக்கு வழிகாட்டியாக விளங்கியது. 1857 இல் ஹில் என்னும் அமெரிக்க நாட்டவர் நான்கு செய்கைக் கணிப்பானைச் சாவி இயக்க முறை மூலம் இயக்குமாறு செய்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஹில் இக்காலக் கணிப்பான்களின் தந்தையாகக் கருதப்பட்டார். 1871 இல் பால்டுவின் 2 3 6 B 10 往 $2 13 14 16 17 1B 19 20 7 8 9 TO 11 2 13 14 15 16 17 18 2# படம் 1. எந்திரக் கணிப்பாள்