கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) 407
முடிவு செய்தனர். துளையிட்ட அட்டையில் உள்ள நிலைகள் மின் கருவிகள் மூலம் மின்சாரச் செய்தி களாக மாற்றப்பட்டன. இதற்கு உணர்த்தி (relay) என்னும் மின்எந்திரக் கருவி பயன்படுத்தப்பட்டது. 1944இல் ஹாவர்டு எய்கின் என்பாரும், ஐ.பி. எம். தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் களும், ஹார்வார்டு பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து மார்க் 1 என்னும் கணிப்பொறியை உருவாக்கினர். மின்னணுக் கணிப்பான்கள். மின்னணுத் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வெற்றிடக் குழாய் கள் தயாரிக்கப்பட்டன. அவற்றின் உதவியால் கணிப் பொறிகள் (computers) உருவாக்கப்பட்டன. முதல் கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) 407 கணிப்பொறி 1946 இல் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டது. எக்கார்ட், மேக்லி ஆகியோரால் இது வடிவமைக்கப்பட்டது. அதற்கு ஈனியாக் எனப் பெயரிட்டனர். இப்பொறி ஒரு நொடிக்கு முந்நூறு பெருக்கல்களைச் செய்யக் கூடியதாக இருந்தது. மார்க் 1 கணிப்பொறியை விட இது நூறு மடங்கு மிகு வேகத்தில் முடிக்கக் கூடிய திறமை பெற்றிருந்தது. 1949 இல் வில்க்ஸ் என்பாரின் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ஈட்சேக் என்னும் கணிப்பொறி உருவாக்கப்பட்டது. இதன் வேகம் ஏறக்குறைய ஈனியாக்கைப் போன்றே இருந்தது. இக்காலக் கட்டத்தில் கணிப்பொறிகளே உருவாக்கப் பட்டன. கணிப்பான்கள் செய்யப்படவில்லை. இக் காட்சி அமைவு மின்கலத் தொகுதி இணைப்பு மாற்றி இலக்கச் சா சாவி ஒருங்கிணைந்த மின்சுற்று படம் 4. ஒருங்கிணைந்த மின்சுற்றினால் இயங்கும் கணிப்பான்