408 கணிப்பான் (மின்னணுப் பொறியியல்)
408 கணிப்பான் (மின்னணுப் பொறியியல்) கணிப்பொறிகள் முதல் காலக்கட்டக் (first genera- tion) கணிப்பான்கள் எனப்பட்டன. பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி கடத்தி களைப் (semiconductor devices) பயன்படுத்திக் கணிப்பொறிகள் தயாரிக்கப்பட்டன. அவை இரண் டாம் காலக் கட்டக் கணிப்பொறிகள் எனப்பட்டன. பகுதி கடத்திகளைப் பயன்படுத்திக் கணிப்பான்களும் தயாரிக்கப்பட்டன. அவற்றின் விலை மிகுதியாக இருந்தமையால் அவை பொதுமக்களால் பெரும் பான்மையாகப் பயன்படுத்தப் படவில்லை. டிரான் பின்னர் ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் (integra- ted circuits) செய்யப்பட்டன. அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும் ஆயிரக்கணக்கான சிஸ்டர்களும் (transisters) இதர மின்சுற்றுப் பொருள் களும் அவற்றில் ஒருங்கிணைந்த மின் சுற்றில் அமைக்கப்பட்டு இருக்கும். இவற்றை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிந்தது. இதைப் பயன் படுத்திக் கணிப்பான்கள் செய்யப்பட்டன. இவை அளவில் சிறியனவாக இருப்பதால் கணிப்பான்களும் மிகச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டன. இவற்றின் விலையும் மிகக் குறைவாக இருந்தமையால் பெரும் பல பான்மையாக வாங்கி பயன்படுத்த முடிந்தது. நிறுவனங்கள் கணிப்பான்களைத் தயாரிக்கின்றன. வணிகப் போட்டியின் காரணமாகக் கணிப்பான்களில் பல புதிய கூறுகள் இணைக்கப்படுகின்றன. இதனால் கணிப்பான்களின் செயல் ஆற்றும் திறன் மிகுதியா கிறது. கணிப்பான் வாங்குவோர் தேவையைப் பொறுத்து அவர்களுக்கு வேண்டிய கணிப்பான்களை வாங்கலாம். வேலை செய்யும் விதம். மின்னணுக் கணிப்பான் கள் சாதாரணமாக 3v 9v வரை உள்ள மின்சுலங் களைக் கொண்டு இயங்கும். மின் மாற்றிகள் மூலம் வீட்டில் உள்ள 230v மின்னழுத்தத்தை 3v முதல் 9v வரை மாற்றலாம். கணிப்பானில் இதற்கெனத் தனிப்பகுதி அமைக்கப்பட்டு இருக்கும். இதன் மூலம் கணிப்பானுக்குத் தேவையான மின் ஆற்றலை அளிக்கலாம். சூரிய வெளிச்சத்தைக் கொண்டு மின் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்களை யும் (solar cells) கணிப்பானில் இணைக்கலாம். இது சாதாரண வெளிச்சத்திலிருந்து மின் ஆற்றலைச் சேகரித்து வைத்து, கணிப்பானை இயக்கும்போது அதற்குத் தேவையான மின்னாற்றலைக் கொடுக்கும். கணிப்பான்களின் உறுப்புகள். கணிப்பான்களின் உறுப்புகளைக் கீழ்க்காணுமாறு பிரிக்கலாம். எண் நினைவகம் உள்ளிடு சுருவி எண்கணித மற்றும் முறைமையகம் வெளியிடு கருவி கட்டுப் பாட்டுப் பகுதி படம் 5. கணிப்பான் வரைபடம்