பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிப்பொறி 411

பெரு பொது வகுப்பானைக் காண்பதற்குரிய கணிப்பு வழி (யூக்ளிட் கணிப்புவழி): நிலை (i) mg nஆல் வகுக்க மீதம் எனலாம். (0 ≤ r <n) நிலை (ii) r = 0 எனில், n தான் தேவையான மீப் பெரு பொது வகுப்பானாகும். இந்நிலை யில் கணிப்புவழி முடிவடைகிறது. நிலை (iii) r=0 எனில், m + n, n - [ எனக்கொண்டு நிலை (i) க்குத் திரும்பிச் செல்லலாம். (அதாவது I #0 எனில், நிலை (i)இல் mக்குப் பதிலாக nஉம். nக்குப் பதிலாக [உம் எடுத்துக் கொண்டு செய்முறையைத் தொடரவேண்டும். இக்கணிப்புவழியைப் பயன்படுத்தி 15,10 இன் மீப்பெரு பொது வகுப்பான் காணலாம். நிலை (i) ஐப் பயன்படுத்த, மீதி 5 (≈0) அடையலாம். நிலை (iii) இன்படி மீண்டும் 10,5க்கு நிலை (i) ஐப் பயன் படுத்தி மீதி 0 அடையலாம். எனவே நிலை (iii) இன்படி தேவையான மீப்பெரு பொதுவகுப்பான் 5 ஆகும். தற்காலத்தில் கணிப்பொறி அனைத்துத் துறை களிலும் பயன்படுகிறது. எந்த ஒரு பிரச்சினையையும் நேரடியாகக் கணிப்பொறிக்குள் செலுத்திவிட முடி யாது. மாறாக, அது ஒத்துக்கொளளும் வகையில் அதன் சொந்த மொழியில் பிரச்சினையை மாற்றி அதனுள் கிடைக்கும். செலுத்தும்போதே தீர்வு இதற்குத் துணையாயிருப்பது கணிப்புவழியாகும். இக்கணிப்புவழியை விளக்கும் வழிப்படமே பின்னர் கணிப்பொறிமொழியில் எழுதப்பட்டு, அக்கருவிக்குள் ஒரு பிரச்சினைக்கு செலுத்தப்படுகிறது. எனவே, கணிப்பொறி பயன்படுத்தித் தீர்வு காண்பதாயின், கணிப்புவழி மிகவும் இன்றியமையாதது என்பதை அறியலாம். ஆர். ரஹீம் பாட்சா நூலோதி.Donald 1987: . E. Knuth, Fundamental Algorithms: the art of computer programming, Vol.1, Second Edition, Narosa Publishing House, Narsing Deo, Graph theory with Applications to Engineering and Computer Science Prentice Hall of India. Pvt Ltd, 1984. கணிப்பொறி தகவல்களைப் பெற்று, செயல்படுத்தி, வேறு தகவல் களை அளிக்கும் ஒரு கருவி கணிப்பொறி (computer) கணிப்பொறி 4/1 எனப்படுகிறது. கணிப்பொறிகளில் ஒத்த அளவு வகை (analog), இலக்க வகை (digital) என இரு வகைகள் உள்ளன. வேகயானிகள், வாட்மானிகள் போன்று, பற்சக்கரங்களையும் நெம்புகோல்களையும் படுத்தி அளவு காட்டுகிற கருவிகளையும் பயன் ஒத்த அளவு கணிப்பொறிகளாகக் குறிப்பிடலாம். ஆயினும் பொது மக்களின் மனத்தில் பதிந்துள்ள சித்திரத்தின் என்பது கணிப்பொறி கணிப்பானைப் படி ஒரு போன்று இலக்கங்களாக விடைகளை விரைந்து தரு கிற மிகு அறிவுடைய எந்திரமாகவே கருதப்படுகிறது. தட்டச்சு எந்திரங்கள், துணிவெளுக்கும் கருவிகள் போன்றவற்றைக் கூடப் புத்திகூர்மையான பொறிகளாக வகைப்படுத்தலாம். கணிப் மாறும் ஒத்த அளவு வகைக் கணிப்பொறிகளில் அளவுகளின் உடனடி மதிப்புக்கு நேர் விகிதத்தி லுள்ள மின்னோட்டங்கள் அல்லது மின்னழுத்தங்கள் உள்ளிடு தரவுகளாகப் புகுத்தப் படுகின்றன. முன் கூட்டியே ஆயத்தம்செய்து வைக்கப்பட்டிருக்கும் ஆணைத்தொடரின் இந்த அடிப்படையில ஓர் வெளிவரும் உள்ளிடு தரவுகள் தொகுக்கப்பட்டு தரவுகளாக மாற்றப்படுகின்றன. இந்த வெளிவரும் தரவுகள், உள்ளிடு தரவுகள், செயலாக்க முறைகள் ஆகியவற்றின் ஒரு தொடர்ந்துமாறும் சார்பெண் களாக இருக்கும். இந்த வெளிவரும்தரவுகள் ஒரு காட்சிப்பலகணியில்காட்டப்படலாம் அல்லது வேறு ஒரு கருவிக்குள் செலுத்தப்பட்டும் இயக்கப்படலாம். வேகக் கட்டுப் பாட்டுக் சுருவி (speed governor ) போன்ற கருவிகள் இத்தகையவை. மின்னணு ஒத்த அளவு கணிப்பொறிகள் சிக்க லான இயக்கவியல் கணக்குகளுக்குத் தீர்வு காண உதவுகின்றன.டிரான்சிஸ்டர்கள் அடங்கிய மின்சுற் றுகள் கணக்கிடு செயல்களை நிகழ்த்துகின்றன. மின் னணுப் தொடர் பெருக்கிகள் குறியீடுகளைத் மின் இணைப்புச் சுற்றுகளில் பதிக்கின்றபோது னாற்றல் இழப்புகள் ஏற்படா. எந்திர வகைக் கணிப் பொறிகளில் தரவுகள் ஒவ்வொரு படியைத் தாண்டும் போதும் ஆற்றல் இழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மின்னணுச் இத்தகைய ஆற்றல் இழப்பு தவிர்க்கப்படுவது ஒரு நன்மையாகும். எந்திரவியல் கணிப்பொறிகளில் உராய்வினால் ஏற் போவதால் படும் இழப்புகள் பெருகிக்கொண்டே கணிப்பொறியின் செயல்திறனை ஓரளவுக்கு மேல் விரிவாக்க முடிவதில்லை. சுற்றுகளில் சிறிய மின்னணு ஒத்த அளவுடைய கணிப்பொறி கள் பல கட்டுப்பாட்டுக் கருவிகளில் உறுப்புகளாக இடம் பெறுகின்றன. அளவுக் கருவிகளிருந்து உள்ளிடு தரவுகள் மின் குறியீடுகளாக வெளிப்படு கின்றன. இந்த மின் குறியீடுகள் ஒத்த அளவில் கணிப் பொறிக்குள் செலுத்தப்படும். அது அவற்றைச்