412 கணிப்பொறி
4/2 கணிப்பொறி செயலுக்குட்படுத்தித் தொடர்ச்சியான வெளியிடும் மின்குறியீடுகளை வெளியிடுகிறது. இந்த வெளியீடு கள் ஒரு அளவியில் காட்டப்படுகின்றன அல்லது வேறு மின் கருவிகளுக்குள் செலுத்தப்பட்டு இயக்கப் படும். இந்த மின்சுருவிகள் குறிப்பிட்ட நேரத்தில் மணியடிப்பது, விளக்கேற்றுவது போன்ற எளிய பணிகள் முதல் விண்வெளிக்கருவிகளைப் பறக்க விடு வது போன்ற சிக்கலான பணிகள் வரை செய்யக் கூடியவையாக இருக்கும். பெரும்பாலான ஒத்த அள வான கணிப்பொறிகள் ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யக் கூடியவையாக உள்ளன. இவை ஒற்றை நோக்க ஒத்த அளவு வகைக் கணிப்பொறிகள் (Special purpose devices) எனப்படும். கணிப் பல நோக்கு மின்னணு ஒத்த அளவான பொறிகள் அறிவியலார், பொறியியலார் ஆகியோர் தம் சிக்கலான இயக்கவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகின்றன. இவற்றில் கட்டுப்பாட்டு முகப்புகள் (control panels) மாற்றியமைக்கக்கூடியவை யாக இருக்கும். ஓர் உறுப்பின் வெளியீட்டுக் குறியீடு அடுத்த உறுப்பிற்குள் உள்ளிடு குறியீடாகப் புகுத்தப் படும். இவற்றின் கட்டுப்பாட்டு முகப்புகளில் வரிசை யாக இணைப்பு முளைகள் (mating plugs) அமைத் திருக்கும். ஓர் இணைப்பு முளையை வேறு ஓர் இணைப்பு முளையுடன் மின் கடத்தும் கம்பிகள் வழியாக இணைத்துக் குறியீடுகள் ஓர் உறுப்பிலிருந்து அடுத்த உறுப்புக்கு அனுப்பப்படுகின்றன. இலக்க வகைக் கணிப்பொறிகளில் தரவுகள் இரு (binary) இலக்கங்களாக மாற்றப்பட்டு உள்ளிடு குறியீடுகளாகவும் வெளியிடும் குறியீடுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் கணக்கிடு உறுப் புகள் மெய் அட்டவணைகளைப் பின்பற்றிப் பிரச்சி னைகளைப் பகுப்பாய்வு செய்கின்றன. பெரிய அங்காடிகளில் உள்ள பண வரவு செலவுக் கருவி, அலுவலகங்களில் உள்ள கூட்டல் கணக்கிடுங் கருவிகள், மேஜை மேல் பொருத்தப்பட்ட கணிப்பான் போன்றவை பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒற்றை நோக்கக்கணிப்பொறிகளாகும். இவற்றில் எந்திர வகைக் கருவிகளும் உண்டு; மின்னணு வகைக் கருவி களும் உண்டு. நவீன அலுவலகங்களில் மின்னணு வகைக்கருவிகளே அதிக அளவில் அறிமுகப்படுத்தப் பட்டு வருகின்றன. மின்னணு வகைக் கருவிகளில் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும், விரைந்து செய லாற்றும் திறனும் அமைந்துள்ளன. வணிகப் பொருள் களில் கோடுகளாகக் குறிக்கப்பட்டிருக்கிற குறியீடு களைப் படித்து அவற்றின் தரம், விலை. அளவு போன்ற விவரங்களைப் பதிவு செய்யும் கணிப்பொறி களும் உருவாக்கப்பட்டுள்ளன. கணிப் ஒரு மையக் பொறியுடன் தொடர்பு கொண்டு மொத்தச் சரக்கின் இருப்பு, வரவு, செலவு, கடன், ஊதியம் தரகுத் தாகை போன்றவற்றைக் கணக்கிட்டுப் பதிவு செய் யும் கிளைக்கணிப்பொறிகள் பெரிய வணிக நிறுவனங் களில் பணியாற்றி வருகின்றன.ஓர் எந்திரவகைப் பணப்பதிவு எந்திரம் ஒரு மணித்துளியில் ஐந்தாறு கணக்குகளையே போடும். சில மின் எந்திரங்கள் அதே நேரத்தில் சில நூறு நூறு கணக்குகள் வரையும், மின்னணுக் கணிப்பொறிகள் நொடிக்குப் பல மில்லி யன் கணக்குகள் வரை போடக் கூடியவையாக அமைந்துள்ளன. வை இலக்க வகைக் கணிப்பொறிகளில் மாறி அளவு கள் 0.1 ஆகிய இலக்கத் தொடர்களாக மாற்றப் பட்டுச் செயலுக்குட்படுத்தப்படுகின்றன. இத்தகைய கருவிகள் எண்களை எளிதாகத் தொகுத்து வைக் கவும், கையாளவும் கூடியவையாக உள்ளன. படங்களையும், வரைகோடுகளையும் கூட எண் குறி களாக மாற்றிக் கையாளவும், எண் குறிகளைப் படங் களாக அல்லது வரைபடங்களாக மாற்றி வெளியிட வும் வல்லவை. ஒரு பல நோக்கு மின்னணு வக்க முறைக் கணிப்பொறி தசம எண்கள். இரு இலக்க எண்கள் ஆகிய இருவகை எண் அமைப்புகளையும், எழுத்துக்களால் குறியீடுபடுத்தப்பட்ட தரவுகளையும் பயன்படுத்துகிறது. அதில் ஒரு கணக்கிடு பகுதியும் ஒரு நினைவுக்காப்பகமும் இருக்கும். அதனுள் செலுத்தப்படும் தரவுகளை அது செயல்படுத்தும் போது ஆணைத் தொடரில் குறிப்பிடப்பட்ட வரிசையில் கணித ஆணைகளையும் நிறைவேற்று கிறது. நினைவுக் காப்பகத்தில் மாறிகளின் மதிப்பு களும் அந்த மாறிகளைச் செயல்படுத்தும் ஆணைத் தொடரும் தேக்கி வைக்கப்படுகின்றன. இவை ஒரே வடிவத்தில் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் கணக் கிடும் பகுதி மாறிகளை அல்லது குறியீட்டுக் குறிப்பு களை அல்லது ரண்டையும் மாறி மாறிப் பயன் படுத்த முடியும். பயன்கள். கணிப்பொறிகளின் பயன்கள் இவ் வளவு தான் என வரையறுத்துச் சொல்ல முடியாது. நாட்பட அவற்றின் புதிய பயன்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன. பெரும்பாலான இலக்கமுறைக் கணிப் பொறிகள் வரவு செலவுக் கணக்குகளைப் பதிவு செய்தல், பொறியியல் வடிவமைப்பு, ஆய்வு தரவு களைத் தொகுத்தல் ஆகிய நோக்கங்களுக்குப் பயன் படுகின்றன. எந்திர மனிதர்களைக் கணிப்பொறிகள் மூலம் இயக்க ஒரு தொழிலக உற்பத்திச் செயல்களில் அவை பங்கேற்கின்றன. தொலை உணர் கருவிகளி லும், செயற்கை அறிவுக் கருவிகளிலும் உள்ள கணிப் பொறிகள் வாதிட்டு முடிவுகளை எடுக்கும் வகையில் ஆணைத் தொடர்கள் பொருத்தப் பட்டவையாக உள்ளன. புதிய விண்வெளிச் சாதனைகளுக்குக் கணிப் பொறிகளே முழு முதற்காரணம் எனலாம். சொல் செயலாக்க (word processing) முறைகள் முன்னேறும் போது ஒரு தொழிற்சாலையையோ அலுவலகத்தை யோ முழுக்க முழுக்கத் தானியங்கித் தன்மையுள்ள தாக்குவது எளிதாகிவிடலாம். கே.என்.இராமச்சந்திரன்