கணிப்பொறி 413
கணிப்பொறி நினைவு இலக்கமுறைக் கணிப்பொறிகளில் (digital computers) மிகவும் இன்றியமையாத உறுப்பு கணிப்பொறி நினைவகம் (computer memory) ஆகும். முதன்மை (primary) நினைவகம், (secondary) துணை நினைவகம் என இருவகைப்படும். கணிப்பொறி இயங்கும்போது கணிப்பொறிக்குத் தேவையான திட்டங்கள், செய்திகள் (data) முதலியன முதன்மை நினைவகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். கணிப் பொறியின் மையச் கணிப்பொறி வரைபட இயல் 413 செய்திகள் அழியா. இலக்கமுறைக் கணிப்பொறி களில் 1 அல்லது ) என்னும் துண்டுகள் கொண்டு செய்திகள் குறிக்கோடுகளாக மாற்றப்பட்டுச் சேகரித்து வைக்கப்படும். 0 அல்லது 1, துண்டுகள் எனப்படும். எட்டுத் துண்டுகள் சேர்ந்தது ஒரு துண்டம் (byte) எனலாம். நினைவகங்களின் காள்ளளவுத் தன்மையை ஆயிரம் துண்டங்கள் (kilobytes) மற்றும் கோடித் துண்டங்கள் (megabytes) என்னும் அளவுகளால் குறிப்பர். கணிப்பான்களின் வேகம் கொண்டே திறமை நினைவகங்களின் தன்மையைக் செயலகம் நினைவகத்துடன் தொடர்பு கொண்டு செயலாற்றும். ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது இடையில் வரும் பயன்களை யும் கணிப்பொறி நினைவகத்தில் சேகரித்து வைக்க லாம். வான் நியூமன் என்பாரின் திட்டங்களைத் தேக்கிவைத்துச் செயல்படும் முறையே இலக்க முறைக் கணிப்பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது. கணிப்பொறியின் நினைவகம் கணிக்கும் கணக்கின் திட்டங்களையும் பலன்களையும் தேக்கி வைக்க வேண்டிய அளவு இருக்க வேண்டும். கணிப்பொறியின் வேகம் நினைவகத்தின் வேகத் தைப் பொறுத்து அமையும். நினைவகத்தில் ஒரு செய்தியைத் தேக்கவும், வெளிக்கொணரவும் ஆகும் நேரத்தை நெருங்கும் நேரம் (access time) என்பர். இந்நெருங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்க வேண்டும். தற்காலக் கணிப்பொறிகள் மிகவும் குறைவான நெருங்கும் நேரத்தைக் கொண்டுள்ளன. துணை நினைவகங்கள் என்பன முதன்மை நினை வகத்தைவிட மிகுதியான நெருங்கும் நேரத்தைக் கொண்டிருக்கும். துணை நினைவகங்களில்தான் மிகுதியான செய்திகளைத் தேக்கிலைக்க முடியும். காந்த நாடாக்கள், காந்தக் தட்டுகள். வளையும் தட்டுகள் (floppy diskkettes) முதலியன துணை நினைவகங்களாகப் பயன்படும். கணிப்பொறிகளில் மிகுதியான செய்திகளைப் பயன்படுத்தும் போதுஅவற் றைத்தேக்கி வைக்க இவை பெரிதும் பயன்படும். தற்காலக் கணிப்பான்களில் வின்ச்ஸ்டர் அமைப்புகள் பயன்படுகின்றன. முதன்மை நினைவகத்தில், காந்த வளையங்கள் (magnetic cores). பகுதிக்கடத்திகளா லான நினைவகங்கள், காந்தக் குமிழ்கள் (magnetic bubbles), மின்னூட்டக் கருவிகள் (charge coupled devices), 'மின்னணுவியல் சுதிர்கள் (electronic beams) முதலியவை பயன்படுகின்றன. காண்டவை. பகுதிக் கடத்திகளான நினைவக வகங்கள் மிகு பயன்களைக் கொண்டவை. இந்நினைவகங்கள் மிகவும் குறைவான கன்அளவு மின்னாற்றல் தேவையும் மிகவும் குறைவு. ஆனால் மின்னாற்றல் உள்ள வரையில்தான் செய்திகளைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டிருக்கும். காந்த வளையங்களில் மின்னாற்றல் இல்லையென்றாலும் இவை மாறு பயன் படும். கணிப்பொறிகளில் நினைவகத்தின் கொள் திறனை உயர்த்த, பல்வேறு முறைகள் கையாளப் படுகின்றன. தோற்ற நி2ை} நினைவகம் (virtual memory ) தேக்கி வைக்கும் நினைவகம் (cache memory) போன்றவை கணிப்பொறிகளின் வேகத்தை மிகுதிப் படுத்துவதுடன் நினைவகத்தின் கொள்ள ளவையும் உயர்த்துகிறது. நினைவகத்திலிருக்கும் செய்திகள் அழியாமலிருக்க மின்கலத்தைப் படுத்தி மின்னாற்றல் தடைப்படும் நேரங்களில் மின் னாற்றல் அளிக்கப்படும். கணிப்பொறி ஒரு சிறந்த கருவியாக இருப்பதற்கு அதன் நினைவகமும் காரணமாகும். நினைவகத்தில் தேக்கி வைக்கப்படும் ஒவ்வொரு செய்தியையும் நினைவகப் பகுதிகளுக்குக் கொடுக்கப்படும் முகவரியை வைத்துப் பின்னர் திரும்பி வாங்கலாம். நினைவகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் முகவரிகள் உண்டு. கணிப்பொறி வரைபட இயல் -சு.அர. பழனிச்சாமி கணிப்பொறியில் வினாக்களுக்குக் கிடைக்கும் விடை எண்களாக, ஆங்கிலச் சொற்களாக அல்லது றியீடுகளாக இருக்கும், பெறப்படும் விடைகளின் எண்ணிக்கை பலவாக இருக்கும்போது அவற்றை ஒழுங்குபடுத்திச் செய்திகளை அறிவது கடின மாகி விடும். எடுத்துக்காட்டாக, ஐந்து ஆண்டு களின் மாத விற்பனைப் புள்ளி விவரங்கள் அல்லது வடிவமைக்கப்பட்ட ஓர் எந்திரத்தின் பல்வேறு அளவு கள் போன் பறவை நூற்றுக்கணக்கான எண்களைக் கொண்டிருக்கும். கணிப்பொறி, இந்த எண்களை மட்டும் கணித்துக் கொடுப்பதற்குப் பதிலாக, விற் பனைப் புள்ளி விவரங்களை ஒரு வரைபடமாகவோ எந்திரத்தின் உறுப்புகளை அவற்றின் அளவுகளுடன் வரைந்தோ கொடுத்தால் அவற்றைப் புரிந்து கொள்வது எளிதாகும். இதே போல், ஓர் எந்திர உறுப்பு அல்லது கட்டட அமைப்பின் தன்மைகளைக் கணிப்பொறி கொண்டு ஆராய வேண்டுமானால், அதன் விவரங்களைப்