பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 கணிப்பொறி

4/4 கணிப்பொறி வரைபட இயல் பட்டியல் போட்டுக் கொடுப்பதைவிட, அதன் வரை படத்தைக் கொண்டு கணிப்பொறியே தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளுமானால் நேரமும், முயற்சியும் மிஞ்சும், இவ்வாறு படங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன், படங்களை வரைந்து கொடுக்கும் திறன், அப்படங்களை ஆராயும் திறன் ஆகிய மூன்றின் சேர்க்கையே கணிப்பொறி வரைபட இயல் (computer graphics) ஆகும். காகிதத்தில் வரையப்படுபவை, திரையில் தெரிபவை என இ படங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். காகிதத்தில் வரையப்படும் படங்கள். பல வண்ணப் பேனாக்கள் டவலமாக, அவற்றின் கீழேயிருக்கும் காகிதம் மேலும் கீழும் நகர வசதிபெற்ற (graph plotter) கருவியின் மூலம் எந்த வரைபடத்தையும் நுட்பமாக வரைய முடியும். இறுதி செய்யப்பட்ட சுட்டட எந்திர வரைபடங்கள் போன்றவற்றைக் கணிப்பொறியின் நினைவகத்திலிருந்து பெற இம் முறை பயன்படுகிறது. ஒரு முறை வரைந்த படத்தை அழித்து எழுதுவது அல்லது மாற்றியமைப்பது யலாதென்பது இம்முறையின் குறையாகும். புள்ளிமுறை அச்சு எந்திரங்களைக் (dot matrix printers) கொண்டும் வரைபடங்களை உருவாக்கலாம். படம் முழுதும் தனித்தனிப் புள்ளிகளால் அமைக்கப் படுவதால், படத்தின் தரமும் குறைவு; நுட்பமாகவும் இருக்காது. எதிர் திரையில் தோன்றும் படங்கள். ஒளித் திரையில் (video screen) எழுத்துகள் அல்லது படங்கள் காண்பிக்கப்படும் முறைகளை இரு வகையாகப்பிரிக்க லாம். எழுத்துகள். + * போன்ற குறியீடுகளைக் காண்பிக்கும் முறையில் CRT எனப்படும் முனைக் கதிர்க் குழல்தான் படங்களைக் காண்பிக்கும் திரையாகப் பெரிதும் பயன்படுகிறது. தேக்கிக் காட்சிக் குழாய் (storage tube display), சவ்வுக்காட்சிக்குழாய் (plasma display) போன்ற கருவிகளும் பயன்படு கின்றன. இவை விலை குறைவானவையானாலும் லேகம் குறைந்தவை. இவற்றில் ஒரு மின்னணுக் கதிர் திரையில் உள்ள புள்ளிகளை வெவ்வேறு ஆற்றல் களுடன் தாக்குவதால் அப்புள்ளிகள் வெவ்வேறு அளவுகளில் ஒளிரும்போது திரையில் படங்கள் உருவாகின்றன, இந்த மின்னணுக்கதிர் திரையில் உள்ள புள்ளிகளை வரிசையாக ஒளிர வைப்பதால், வரிவரியாகத் திரையில் படம் தோன்றும். இவ்வாறு சாதாரணமாக 262 வரிகள் திரையில் உருவாகும். ஒவ்வொரு புள்ளியையும் நொடிக்கு முப்பது முறை ஒளிர வைப்பதால் கண்களுக்குப் படம் இடை டைவிடாது தொடர்ந்து தெரிகிறது. இம்முறைக்கு ராஸ்ட்டர் முறை (Ruster scanning) என்று பெயர். திரையில் எழுத்துக்களையும், +,- போன்ற குறிகளையும் உருவாக்கக் குறி உருவாக்கி (character generator) என்னும் அமைப்புப் பயன்படுகிறது. ஓர் 7X10 எழுத்து திரையில் தெரிய எந்தப் புள்ளிகளை ஒளிர வைக்க வேண்டும் போன்ற தகவல்களை இது எதிர் முனைக் கதிர்க் குழாய்க்குக் கொடுக்கிறது. ஒவ்வொரு எழுத்திற்கும் ஏறத்தாழ 7X8 அல்லது போன்ற அளவில் புள்ளிகளை ஒதுக்குகிறது (படம் 1). இதே முறையைப் பயன்படுத்தி, பல குறியீடுகளைத் (படம் - 2) திரையில் உருவாக்குவதன் மூலம் சில படம் 1 படங்களைத் திரையில் வரையலாம். இம்முறை இன்று பெரும்பாலான சிறிய கணிப்பொறிகளில் பயனாகிறது. இம்முறையில் உருவாக்கும் படங்களில் ஒரு சமயத்தில் பல புள்ளிகளை ஒட்டு மொத்தமாகக் கையாள வேண்டியிருப்பதால், கோடுகளாலான வரை படம் போன்ற நுண்ணிய படங்களை வரைய இய சமயத்தில் கையாளும் புள்ளிகளின் எண்ணிக்கை அல்லது அப்புள்ளிகள் குறிக்கும் பரப் லாது. படம் 2.