பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிப்பொறி வரைபட இயல்‌ 417

காட்டாக எந்தெந்தப் புள்ளிகளைச் சேர்த்து நேர் கோடுகளை உருவாக்க வேண்டும், எந்தெந்தக் கோடு கள் சேர்ந்து ஒரு பக்கத்தைக் கொடுக்கும், அவை எந்தெந்த வண்ணங்களில் இருக்கும் போன்ற விவரங் கள் இந்தப்பட அமைப்பில் இருக்கும். சில் ஒரு பொருளின் அளவைக் குறைப்பது, பெருக்கு வது, அதிலிருந்து சில பகுதிகளை நீக்குவது அல்லது அத்துடன் பகுதிகளைச் சேர்ப்பது. ஒரு பொருளின் வடிவத்தை வைத்து அப்பொருள் கொடுத்த படத்தில் உள்ளதா என்று பார்ப்பது போன்ற செயல்கள் படத்தை ஆராய்வது என்னும் பகுதியின் கீழ் வரும். படங்களைக் கையாளத் தேவையான சில ஆணைகளை உருவாக்கி அத் தொகுதிகளை இந்த மொழிகளுடன் சேர்த்து இம் மொழிகளை வளமுள்ளவையாகச் செய்யும் பணியும் நடைபெறுகிறது. அவற்றுள் LEAP, EX.GRAE. L', GRIP போன்ற தொகுதிகள் அடங்கும். பயன்கள். கணிப்பொறி உதவிய வடிவமைக்கும் முறையில் (CAD) தேவையான கணிப்புகளைக் கணிப் பொறி விரைந்து செய்து, அதன் விடைகளைப் படமாகவும் மாற்றிக் கொடுக்கிறது. வடிவமைப் பாளர் தம் அறிவையும் அனுபவத்தையும் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்யும்படிக் கணிப் பொறியைப் பணிக்க மீண்டும் கணிப்பொறி வேலையை விரைந்து செய்து விடைகளைக் கொடுக் கிறது. இவ்வாறு மனிதனும் கணிப்பொறியும் மாறி மாறிக் கணித்துக் கொடுத்தும், மாற்றியமைத்தும், ணைந்து செயலாற்றியும் ஒரு பொருளின் வடிவ மைப்பை இறுதி செய்கின்றனர். கணிப்பொறியின் வேகத்தையும், மனிதனின் அறிவையும் ஒருங்கி ணைத்துப் பயன்படுத்தும் இம்முறையால், ஒரு பொருளை வடிவமைத்து, அதன் தன்மைகளையும் தரத்தையும் ஆராய்ந்து இறுதி முடிவு செய்யும் காலம் பல மாதங்களிலிருந்து சில மணிகளாகக் குறைந்துள்ளது. தனால் செலவும் பெருமளவு குறைகிறது. பல உதிரி உறுப்புகளைப் பார்த்து அவற்றை எடுத்துத் தேவையான இடங்களில் பொருத்தும் எந்திர மனிதனுக்குப் (robot) பார்வையைக் கொடுப் பதும் வரைபட இயலேயாகும். கணிப்பொறிகளுக்குத் தேவையான மிகப் பெரும் அளவில் ஒருங்கிணைந்த மின்னிணைப்புகளை உருவாக்கத் தேவையான படங்களை நுட்பமாகத் தயாரிப்பதிலும் இவ்வியல் பயனாகிறது. செயற்கைக் கோள்கள், மிகுந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் முதலியன அனுப்பும் கோடிக் கணக்கான செய்தித் துகள்களை ஆராய்ந்து, அவற் றின் முடிவுகளை - நிலப்பரப்பின் தன்மைகள், பிட்ட டங்களில் விமானங்கள் அல்லது குறிப் ராணுவ கணிப்பொறி வரைபட இயல் 417 ஆயுதங்கள் உள்ளனவா என்னும் செய்திகள் போன்ற வற்றைக் கூறுவதிலும் பெரிதும் பயனாகிறது. படம் 5. தணிப்பொறியால் வரையப்பட்ட சில படங்கள் காட்டக் திரைப்படங்களை எடுக்கும்போது, காட்சிகளை உண்மையில் அமைத்துப் படம்பிடிக்காமல், வெறும் திரையிலேயே அக்காட்சிகளை உருவாக்கிப் படம் பிடிப்பதன் மூலம் செலவு குறைகிறது. இப்போது கார்ட்டூன் படங்களை உருவாக்குவதிலும் கணிப் பொறி உதவுகிறது. ஒருவருடைய ஓவியக் கலைத் திறனை, கற்பனை வளத்தைக் கணிப் பொறியில் வரைபடமாக, புதுமையான ஓவியங் உருவாக்கலாம். வளரத் தொடங்கியுள்ள இத்துறைக்குக் கணிப்பொறி வரைபடக் கலை என்னும் பெயரும் உண்டு. கறுப்பு-வெள்ளை வரை படங்கள் முதல் இருநூற்றுக்கும் மேற்பட்ட வண்ணக் கலவைகள் கொண்ட படங்களைக் கணிப்பொறி கொடுக்கிறது. களாக வெ.கிருஷ்ணமூர்த்தி