பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்காலிகள்‌ 419

ஒற்றைக்கிளையுடையன (uniramous). மேலும் இந்த ஒற்றைக்கிளை நிலையானது, இரட்டைக்கிளை நிலை யிலிருந்து தோன்றியது என்று கூறுதற்கும் சான்று களில்லை. கணுக்காவிகளின் உடல் அமைப்பையும் கரு வளர்ச்சியையும் ஆய்வு செய்யும்போது இந்த தனித்தனியாகப் படிமலர்ச்சியுற் உள்தொகுதிகள் றவை என்ற முடி சரியாகத் தோன்றுகிறது. தொகுதியை ஒரு பெரும் ஆதலால் கணுக்காலித் தொகுதியை தொகுதியாகப் கருதிப் பின்வருமாறு வகைப்படுத்த லாம். சில வே பல கண்டங்கள் கணுக்காலிகள் அனைத்தும் வளைதசைப் புழுக் களைப் போன்றே ஒன்றன் பின் ஒன்றாக அமைந்த பல கண்டங்களாலாகிய உடலைப் பெற்றுள்ளன. வளர்கரு இவற்றின் நிலையில் உடல் கண்ட அமைப்பை எளிதாகக் காண முடியும். நிறை உயிர் நிலையில் கணுக்காலிகளில் கண்ட அமைப்பு மறைந்து விடுகிறது அல்லது இணைந்த உடற்பகுதிகள் உண்டாகிவிடுகின்றன. பல்சுணைப் புழுக்களில் மருங்கு கால்கள் (para- podia) காணப்படுவது போன்றே இங்கும் ஒவ்வொரு கண்டத்துடனும் ஓர் இணை இணையுறுப்புகள் இணைந்துள்ளன. ஆனால் இணையுறுப்புகளுக்கும் புழுக்களின் மருங்கு கால்களுக்குமிடையேயுள்ள அமைப்பொற்றுமை பற்றி அறுதியிட்டுக் கூற முடிய வில்லை. இரண்டு தொகுதிகளைச் சேர்ந்த விலங்குகளிலும் கீழ்ப்பக்க இரட்டை நரம்பு வடமும், அதில் கண்ட நரம்பு செல்திரள்களும் உள்ளன. சில கணுக்காலிகளில் உட்குழிவுறும் அறுதியிடப்பட்ட முறைப் பிளவுப் பெருகல் (determinate cleavage) நடைபெறுகிறது. இடைப்படை (n:esoderm) 42 கருக்கோளச் செல்லி லிருந்து தோன்றுகிறது. கணுக்காலிகளில் வளைத்தசைப்புழுப் பண்புகள் பல் காணப்பட்டாலும் அவை தனிச்சிறப்புடைய பெரும் படிமலர்ச்சி மாற்றங்கள் பெற்றுத் தோன்றி யுள்ளன. கியூட்டிக்கிள் என்னும் புறச் சட்டகம் கணுக்காலிப் பண்புகளுள் குறிப்பிட்டுக் கூறத் தக்க தாகும். கணுக்காலிகளின் மற்ற பண்புகள் பலவும் இப் புறச் சட்டகத்தின் காரணமாகத் தோன்றின எனக் கூறலாம். உடலின் மேற்பரப்பு முழுதும் கடினமான இச்சட்ட புறச்சட்டகத்தால் மூடப்பட்டிருக்கிறது. கம் உடற் கண்டத்தகடுகளாக அமைந்துள்ளது. ஒரு கண்டத்தின் தகடும் அதனை அடுத்துள்ள தின் தகடும் ஒரு சவ்வினால் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் கணுக்காலியினால் உடற்பகுதிகளை எளிதாக அசைக்க முடிகிறது; இடப்பெயர்ச்சி செய்ய முடிகிறது. பொதுவாக ஒவ்வொரு கண்டத்திலும் டெர்கம் (tergum) எனப்படும் மேல்தகடு, ஸ்டெர்னம் (sternum) எனப்படும் கீழ்த்தண்டு, புளூரா (pleura) என்னும் இரண்டு மருங்குத் தகடுகள் ஆக நான்கு தகடு கண்டத் கணுக்காலிகள் 419 கள் உள்ளன. ஆனால் இத்தகடுகள் ஒன்றுடன் ஒன்று அணைவதால் இந்த அடிப்படை நிலை மாறக்கூடும். இணையுறுப்புகளின் புறச்சட்டங்களும், ஒவ்வொரு சுரணையிலும் ஒரு குழாய் போலவும் கரணைகளை இணைக்கும் கணுக்கள், சவ்வுகளால் இணைக்கப் பட்டும் உள்ளன. அதனால்தான் ணையுறுப் புகளை நீட்டி மடக்கி அசைக்க முடிகிறது. இணையு றுப்புக்களில் பல கணுக்கள் காணப்படுவதால்தான் இத்தொகுதிக்குக் கணுக்காலிகள் என்று பெயர் இடப்பட்டது. அகச்சட்டகம் எனப்படும் அமைப்பு களும் கணுக்காலிகளில் காணப்படுகின்றன. ஆதாரக் கியூட்டிக்கிள் (procuticle) பல இடங்களில் உள் மடிப்புகளாக அமைந்து தசையொட்டுப் பரப்பு களாகச் செயல்படுகிறது. பழுப்பு,மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களுள்ள மெலானின் துகள்கள் கியூட்டிக்கிளில் படிவதால் கணுக்காலிகளின் உடலில் நிறம் உண்டாகிறது. கியூட்டிக்கிளின் மேற்பரப்பிலுள்ள அவ்வரிகளின் மேல் ஒளி பட்டுச் சிதறுவதால் பச்சை, ஊதா போன்ற நிறங்களின் ஒளிர்தல் உண்டாகிறது. ஒளி ஊடுருவும் கியூட்டிகிள் பெற்றுள்ள கணுக்காலிகளின் நிறம் அவற்றின் இரத்தம் காரணமாகவும் பிற திசுக் களிலுள்ள நிறமிகள் காரணமாகவும் ஏற்படுகிறது. இணைப்புகளுள்ள இடங்களில் உடலை அசைத் துச்செயல்பட முடிந்தா லும் புறச்சட்டகம் தொடர்ச்சி யான வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது. பருவ நிகழ்வாக அவ்வப்போது புறச்சட்டகம் நீக்கப்பட்டுப் புதிய புறச்சட்டகம் உருவாக்கப்படுவதால் சுணுக் காலிகளில் உடல் வளர்ச்சி நடைபெறுகிறது. இதற்குச் சட்டையுரித்தல் என்று பெயர். புறச் சட்டகம் நீக்கப்படுவதற்கு முன் அதற்குக் கீழேயுள்ள கீழ்த்தோல் அதனின்று பிரிகிறது. புதிய புறக்கியூட் டிக்கிள் ஒன்றைச் சுரக்கிறது. இக்காலத்தில் தசை ஒட்டுதல்களும், நரம்பு இணைப்புகளும் சேதப்படு வதில்லை. மேலும் கணுக்காலி எப்போதும்போல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டும் இருக்கும். இப் போது புதிய சட்டகம் மென்மையாகவும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இக்காலத் தில் நடைபெறும் திசுவளர்ச்சியால் புதிய சட்டகம் விரிவடைந்து பெரிதாகிறது. • காலம் என்று இரண்டு தோலுரித்தல்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு வளர்ச்சி இடைப்படு பெயர். கணுக்காலி முதுமையுறுவற்கு ஏற்ப இடைக் காலத்தின் வளர்ச்சி அளவு அதிகமாகிறது. நண்டு, கூனிறால் போன்ற றவை தம் வாழ்நாள் முழுதும் சட்டையுரிக்கின்றன. ஆனால் பூச்சிகள், சிலந்திகள் போன்றவற்றில் இடைப்படு வளர்ச்சிக் காலம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமேயுள்ளது; இன முதிர்ச்சி நிலைக்கு முன்னர் ஏற்படும் சட்டையுரித்த லுக்குப் பின் சட்டையுரித்தல் நடைபெறுவதில்லை.