24 கட்டக ஆய்வியல்
24 கட்டக ஆய்வியல் பல்வேறு புறவிசைகள்(தாங்கிவினைகள் உட்பட) செயல்படும் கட்டகம் ஒன்று படம் 4 இல் காட்டப் பட்டுள்ளது. இக்கட்டகத்தில் X-X என்று குறிக்கப் பட்டுள்ள வெட்டுமுகத்தின் சமநிலை கணிக்கப்பட வேண்டும். இவ்வெட்டு முகத்தின் அண்மையில் சிறிய தொரு துண்டம் ( இதன் நீளம் dL எனக் குறிக்கப் பெறும் மிகச்சிறு நீளமே) சமநிலையில் இருக்கவேண்டு மாயின் அதன் வலப்புறக் கட்டகப் பகுதியின் மீது செயல்படும் விசைகளைத் தாங்கிக் கொண்டு, இடப் புறக் கட்டடப் பகுதியின் மீது அவற்றைச் செலுத்தி இரு பகுதிகளையும் சமநிலையில் அமைக்கிறது.அதா வது இரு பகுதிகளின் மீது செலுத்தப்படும் விசைக் கூறுகள் ஒன்றுக்கொன்று அளவில் சமமாகவும் திசை யில் எதிராகவும் இருக்க வேண்டும். எனவே, வெட்டு முகத்தின் ஏதாவதொரு பக்கக் கட்டகப் பகுதியில் செயல்படும் புறவிசைகளின் கூட்டை வெட்டு முகத்தின் குத்துத் தளத்திசைகளில் விசைக் கூறுகளாகவும், திருப்புமைக் கூறுகளாகவும் பகுத்துக் காணவேண்டும். இவ்வாறே அனைத்து வெட்டுமுகங்களின் விசைக் கூறுகளும் கணிக்கப்படுவதோடு ஆய்வு நிறைவு MA PA PB Pc PL a' P 2 13 DLE MA RG PH H K PR M' M'2 M2 PR K என்னும் பகுதியின் வரைபடம் படம் 4.உறுப்பு அகவிசைக் கூறுகள் C'