பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 கணுக்காலிகள்‌

420 கணுக்காலிகள் தோலுரித்தல் முடிந்தவுடன் கணுக்காலி முன்னை விடப் பெரியதாகவும் எடை கூடியதாகவும் காணப் பட்டாலும் தோலுரிக்கும்போது மட்டும் வளர்ச்சி நடைபெறுவதில்லை. தோலுரித்தல், ஹார்மோன்களின் கட்டுப் பாட்டில் நிகழ்கிறது. இரத்தச் சுற்றோட்டத்தினால் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படும் எக்டைசோன் எனும் ஹார்மோன் கீழ்த்தோலைச் செயல்படத் தூண்டுகிறது. எக்டை சோன் உண்டாக்கும் அளவு பிற ஹார்மோன்களால் முறைப்படுத்தப்படுகிறது. கணுக்காலிகளின் உடல் அசைவு புறச்சட்டக ணைப்புகளையும் தகடுகளையும் குழல் போன்ற பகுதிகளையும் அசைக்கும் அளவுடன் நின்றுவிடு கிறது. அதற்கு ஏற்பத் தசைகள் வரித்தசைக் கட்டு களாக அமைந்து ஆதாரக் கியூட்டிக்கிளின் நீட்சி களுடன் இணைந்து ஒட்டிக்கொண்டுள்ளன. உடல் தகடுகளை மடக்குவதும். நீட்டுவதும் தசைகள் சுருங்கி விரிவதால் நடைபெறுகின்றன. தசைகளும் புறச்சட்டகமும் இணைந்து இடப்பெயர்ச்சி நடை பெறுதலும், உடல் அசைவுகள் ஏற்படுவதும் முது கெலும்புடைய விலங்குகளின் இத்தகைய செயல்களை நினைவிற்குக் கொண்டு வருகின்றன. ஏ கணுக்களுள்ள ணையுறுப்புகள், இவ்விலங் கினங்களின் இடப்பெயர்ச்சி உறுப்புகளாகும். இணையுறுப்புகள் நீர்வாழ் கணுக்காலிகளில் தட்டை யாகவும் அகலமாகவும் உள்ளன. நிலவாழ்வனவற்றில் வை உருண்டு நீண்டு கால்கள் போலவுள்ளன பல் சுணைப் புழுக்களில் காணப்படும் மருங்கு நீட்சிகள் போலன்றி இவை உடலின் கீழ்ப்பக்கத்தில் அமைந்து இடப்பெயர்ச்சிக்கு ஏற்றவாறு உள்ளன. அடிவைத்த காலைவிட (effective stroke) அடிஎடுக்கும் காலின் (recovery stroke) நுனி உடலைவிட்டு அதிக தூரத்தில் இருக்கிறது. அதனால் பல இணைக்கால்சுளால் நடக்கும்போதும் கால்களின் அசைவுகளினால் கால் கள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொள்வதில்லை. பின் கால்களைவிட முன்கால்கள் சற்று முன்னதாகத் தரையில் வைக்கப்படுகின்றன. இருமருங்கின் களும் ஒரே காலத்தில் எடுத்து வைக்கப்படுவதில்லை. ஒரு மருங்கின் கால்களும் அடுத்த மருங்கின் களும் மாற்றி மாற்றி வைக்கப்படுகின்றன. பொது வாகக் கணுக்காலிகள் சிறியனவாக இருப்பதால் புறச்சட்டகம் சிறந்த பாதுகாப்பு அமைப்பாகவும், இடப்பெயர்ச்சிக்கு உதவும் வகையிலும் உள்ளது. ஆனால் பெரிய விலங்குகளுக்கு இத்தகைய அமைப்பு பெரும் சுமையாகவும் தொல்லையாகவும் இருக்கும். கால் கால் ஒரு விலங்குத் தொகுதியின் சிறப்பிற்கு உள்ள காரணங்கள். அந்தத் தொகுதியின் வகைதொகை எண்ணிக்கை, அந்தத் தொகுதியைச் சேர்ந்த உயிரி கள் புவியில் பரவி இருக்கும் பரவல் அளவு, அதனைச் சேர்ந்த உயிரிகளின் பல்வேறு று வகையான பழக்க வழக்கங்கள். அந்த உயிரிகளால் உண்ணப்படும் உணவுப் பொருள்களின் வகையும் அளவும், அந்த உயிரிகள் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வழிவகைகள் ஆகிய காரணங்கள் குறிப்பிடப்படு கின்றன. வான வகைதொகை எண்ணிக்கை. கணுக்காலிகளில் எத்தனை வகைகள் உள்ளன என்பது பற்றி முடி கணக்கு இன்னும் முழுமையாகத் தெரிய வில்லை. ஆயினும் இதுவரை பத்து லட்சம் வகைகள் சுணக்கிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாகக் காணும் போது இது விலங்கின வகைகளுள் ஏறத்தாழ எண்பது விழுக்காடாகும். புவிப்பரவல் அளவு. பொதுவாக விலங்குகள் அவற்றின் வாழிடத்தின் அடிப்படையில் நீர்வாழ்வி கள். நிலவாழ்விகள், வான்வாழ்விகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. கணுக்காலிகள் இந்த மூன்று வகை வாழிடங்களிலும் வாழ்கின்றன. நன்னீரில் நீர்வண்டு, நீர்த்தேள் போன்றவையும், கடல்நீரில் இறால், பலானஸ், அரச நண்டு போன்ற வையும்,உவர்நீரின் மேற்பரப்பில் மிதவை உயிரி களாக கலானஸ் போன்றவையும் வாழ்கின்றன. கடற் கரைகளில் கரைநண்டுகள் போன்ற கணுக்காலிகள் வாழ்கின்றன. கடல் நீருக்குள் ஏறத்தாழ 8 கி.மீ. ஆழம் வரை சில கணுக்காலிகள் வாழ்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆறு, ஏரி, குளம், குட்டை, கிணறு போன்ற எல்லா நீர் நிலை களிலும், எண்ணெய்க் கிணறுகளிலும் கணுக்காலிசுள் வாழ்கின்றன. நிலவாழ்விகளுக்கு எடுத்துக்காட்டாக, தேள் மரவட்டை போன்றவற்றையும், நிலத்துள் துளை போட்டு வாழ்வனற்றிற்குப் பிள்ளைப்பூச்சி, கறையான் போன்றவற்றையும் கூறலாம். ஈ, கொசு, வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவை வான் வாழ்க்கணுக்காலிகள் ஆகும். கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடி உயரம் வரை மலைப்பகுதிகளில் கணுக்காலிகள் காணப்படுகின்றன. . , பல்வேறு விதமான பழக்கவழக்கங்கள். உயிரிகள் பெரும்பாலும் தன்னிச்சையாக அலைந்து திரிந்து வாழ்கின்றன.சில கணுக்காலிகள் பிற உயிரிகளைச் சார்ந்து ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. கரப்பான் பூச்சி, பூரான், சிலந்தி போன்றவை தன்னிச்சையாக வாழ்பவை. பேன், தெள்ளுப்பூச்சி போன்றவை ஒட்டுண்ணிகளாகவே வாழ்கின்றன. கொசு தற் காலிக ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மூட்டைப்பூச்சி புற ஒட்டுண்ணியாக வாழ்கிறது. ஸ்ட்டைலோப்ஸ் (stylops) அக ஒட்டுண்ணியாக வாழ்கிறது. உயிரி கள் பெரும்பாலும் தனித்து வாழ்வன என்றாலும் சில் கணுக்காலிகள் கூட்டு வாழ்க்கை நடத்து கின்றன. குச்சிப்பூச்சி, தேள், பூரான் போன் போன்றவை