பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணைய நீர்‌ 423

படர்ந்திருக்கும். போலிச் சிறைப்பை என்பது சிறு பரியாந்தாரப்பையில் (lesser sac) நீர் சேர்ந்து சுற்றி யுள்ள திசுக்கள் அரணமைத்து உருவாவதாகும். பொதுவாக இது கணைய அழற்சியில் ( pancreatitis) உண்டாகும். எல்லாச் சிறைப்பைகளிலும், கணையப் போலிச் சிறப்பைதான் பெருமளவில் உண்டாகிறது. கணையப்போலிச்சிறைப்பை. மிகு ஒலி ஒளிப்படக் கருவி (ultrasonogram) போன்ற கண்டுபிடிப்பிற்குப் பின் கணைய நோய்களின் கண்டுபிடிப்பும் பெருமளவில் அதிகரித்துள்ளது. கணையப் போலிச்சிறை என்பது சிறு பரிவிரி அறையில் நீர் சேர்ந்து, சுற்றியுள்ள திசுக்களின் அழற்சியால் நார்த்திசு (fibrous tissue) உருவாகி ஒரு சிறைப்பை போன்று ஆகிவிடுகிறது. இதில் எபிதீலியல் செல்கள் இல்லாததால் இதற்குப் போலிச்சிறைப்பை என்று பெயர். கணைய் வயிற்றில் மழுங்கிய அடிபடுதல், அறுவையின்போது கணையத்திற்குக் காயமேற்படல், முனைப்பான அழற்சி (acute pancreatitis) போன்ற காரணங்களால் போலிச்சிறைப்பை உருவாகிறது. இப்போலிச்சிறைப்பை கணைய நாளத்துடன் பெரும் பாலும் தொடர்புடையதாக இருக்காது. இதிலுள்ள நீரிலும், கணைய நீரைப் போன்றே நொதிகள் நிறைந்து இருக்கும். மிகு ஒலி ஒளிப்படக் கருவியைக் கொண்டு கணையப்போலிச்சிறைப்பையை மிக எளிதில் கண்டு பிடிக்கலாம். கணிப்பொறிவழி டோமோகிராமின் உதவியாலும் இதன் வளர்ச்சியைக் கண்டறியலாம். இது முழுமையாக வளர்ச்சி பெற்று இழைச்சுவர் முதிர்ந்திருந்தால் அறுவை செய்துதான் நலப்படுத்த இயலும். சுமார் 20 .30% போலிச் சிறைப்பைகள் தாமாகக் குறைந்து மறைந்துவிடும். இது நோய் உண்டாகி 6 வாரத்திற்குள் நிகழும். அதற்கு மேலும் போலிச்சிறை அளவில் குறையாமல் அப்படியே இருக்குமானால், அறுவை தேவை. கள். கணையப்போலிச்சிறைப்பையால் வரும் கோளாறு மற்ற உறுப்புகள் மீது அழுத்தம், கணையப்போலிச் சிறை பெரியதாகி அருகிலுள்ள இரைப்பை,டியோ டினம் (முன்சிறுகுடல்) பெருங்குடல், பித்தநாளங்கள் இவற்றின் மீது அழுத்தம் உண்டாகி அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நுண்ணுயிர்த் தாக்குதல் நோயுற்றவருக்குக் காய்ச்சலும், நாடித்துடிப்பு அதிகமாதலும், மூச்சு அதிகரிப்பும் உண்டானால், கணையப்போலிச் சிறைப்பைக் கிருமிகளின் தாக்குதலினால் சீழ்க் கட்டியாக மாறுகிறது என்று பொருள். இரத்தக்கசிவு. கணையப்போலிச் சிறைப்பையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு நோயாளியின் உடல்நிலை திடீரெனத் தாக்கமுறலாம். சில சமயங்களில் கணையப்போலிச்சிறையால் இரத்தக்கசிவு ஏற்படும். கணைய நீர் 423 உணவுப்பாதையில் போலிச்சிறைப்பை அழுத்தத் தினால் துளை ஏற்பட்டு இந்த இரத்தக்கசிவு ஏற் படும். கல்லீரல் சிரையில் அழுத்தம் ஏற்பட்டு அதனால் உணவுக்குழாயில் இரத்தநாளங்கள் விரிவடைந்து இரத்தக்கசிவு ஏற்படலாம். போலிச்சிறைப்பைத்துளை. கணையப்போலிச் சிறைப்பையில் துளை விழுந்து பரிவிரி பெரும்அறையில் நீர் கசியும். உணவுப்பாதையில் துளை ஏற்பட்டு நீர் கசிந்து போலிச் சிறை மறைந்துவிட வாய்ப்புண்டு. தால் தான் மருத்துவம்.30% போலிச்சிறைப்பைகள் தாமாக மறைந்துவிட வாய்ப்புண்டு. அப்படி மறையாதிருந் அறுவையால் நலமாக்கவேண்டும். இதற்கு i வாரம் வரை பொறுத்திருக்கவேண்டும். காரணம், சுற்றியுள்ள இழைச் சுவர் முதிர்ச்சி பெற்றால் போலிச் சிறைப்பையை இரப்பையுடனோ அல்லது முன்சிறுகுடல் பகுதியுடனோ இணைத்துத் தைக்கமுடியும். இப்படி இணைத்துவிட்டால் சேரு கின்ற நீர் உணவுப் பாதையின் மூலம் வடிந்துவிடும். போலிச்சிறைப்பையும் சுருங்கிவிடும். இதுபோன்று தைக்கமுடியாத நிலையில் போலிச்சிறைப்பையைத் திறந்து ஒரு சிறுகுழாய் மூலம் வயிற்றின் வெளிப்புற மாக வடித்துச் சுருங்கச் செய்யலாம். கணைய நீர் சு -ஆர்.பி.சண்முகம் கணையச் சுரப்பி, நாளத்தின் வழியாக (exocrine) வெளியேற்றும் சுரப்புப்பணியையும், நாளமில்லாச் (endocrine) சுரப்புப்பணியையும் செய்கிறது. லாங்கர் ஹான் நுண்திட்டுகள் என்று குறிப்பிடப்படும் செல் கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன. இதில் பீட்டாசெல்கள் ன்சுலினையும், ஆல்ஃபா செல்கள் குளுக்கான் என்னும் ஹார்மோனையும் உற்பத்தி செய்கின்றன. இங்கு கணையநாளச் சுரப்பு நீரைப் பற்றி அறிய வேண்டும். 4 சில கணையச் சுரப்புநீரில், தண்ணீர், மின்பகுளிகள், நொதிகள், புரதச் சத்துகள் அடங்கி யிருக்கின்றன. கணையச்சுரப்பு, செரிமானத்தோடு தொடர்பு கொண்டுள்ளதால் உணவு உட்கொண்ட வுடன் சுரப்பு மிகுதியாகிறது. இது காரத்தன்மை கொண்டது, கணைய நொதிகள் உணவிலுள்ள புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மூன்றையும் செரிக்கச் செய்யும் டிரிப்சின், அமைலேஸ், லைபேஸ் என்னும் முக்கிய நொதிகளோடு வேறு பல நொதி களையும் உற்பத்தி செய்கின்றன. டிரிப்சின் உற்பத்தியாகும்போது டிரிப்சினோஜன் என்னும் மூலப்பொருளாக வெளிவந்து குடலில் சென்