கணைய மாற்றம் 427
கணைய மாற்றம் 427 கயை நொதிகளையும் இன்கலினையும் நோயா ளிக்குத் தவறாது கொடுத்து வரவேண்டும். கணைய மாற்றம் ஆர்.பி.சண்முகம் இந்த அறுவை மருத்துவம் புதிதாக உருவாக்கப்பட்டு மேலும் பலரால் மேற்கொள்ளப்படாத இன்னமும் பரவலாகச் செய்யப்படாத முறையாகும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோர் கணையத்தில் சுரக்கும் இன்சுலினை ஊசிமூலம் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாகக் கணைய மாற்றம் செய்து கொண்டால் நிலையாக இன்சுலின் உடலி லேயே இம்முறை உற்பத்தியாகிவிடும். ஆனால் பரவலாகச் செய்யப்படுவதற்குப் பல் தடைகள் இருப்பதால் அனைத்து இடங்களிலும் இதைச் செய்ய யலவில்லை. கணையம் ஒரு செரிமான உறுப்பு என்றாலும், நாளமில்லாச் சுரப்பியாகவும் பணி செய்து இன்சுலின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இன்சுலினை உற்பத்தி செய்யும் ஐலெட்ஸ் என்னும் செல்களை மட்டும் கணையத்திலிருந்து தனியாக எடுத்து நோயுற்றோருக்குச் செலுத்தும் முறையும் முயன்று பார்க்கப்பட்டது. போதுமான அளவு ஐலெட்செல் அல்லது பீட்டாசெல்களைப் பிரித் தெடுப்பது இயலாமலிருப்பதாலும் முழுக்கணை யத்தைவிட ஐலெட்செல்கள் ஒவ்வாமையால் தள்ளு படியாகும் நிலையாலும் இம்முறை தலிர்க்கப்பட்டு, முழுக் கணைய மாற்றம் பெருகி வருகிறது. கணைய மாற்றத்தில் மற்றொரு சிக்கல், நெருங் கிய உறவினர்களுக்குள் சர்க்கரை நோய் மிகுதியாகக் காணப்படுவதால் பிற உறுப்பு மாற்றத்தைப்போல், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் எடுத்து மாற்ற இயலுவதில்லை. கணையம் ஒரே உறுப்பாக இருப்ப தால் உயிருடன் இருப்பவர்களிடமிருந்து எடுத்து மாற்றுவது இயலாததாகும். அச்சத்தால் உயிர்விட நேரிடுவோரிடமிருந்துதான் கணையமெடுத்து மாற்றி யமைக்க இயலும். ஒவ்வாமையைத் தடுக்க முன்பு கார்ட்டிசோன் மருந்து கொடுக்கப்பட்டது. கார்ட்டி சோனை மிகுதியாகக் கொடுத்தால் சர்க்கரைநோய் மிகுதியாகும். தற்போது சைக்ளோஸ்போரின் என்னும் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இத் தொல்லையைத் தவிர்க்க முடிகிறது. கணையத்தை மாற்றியமைக்கும்போது, கணைய நீர்க்கசிவு ஏற்பட்டு இரத்தக் குழாய் இணைப்பு களும் தாக்கமடைய வாய்ப்புண்டு. மாற்றியமைக்கப் பட்ட கணையமும் அழற்சியால் தாக்குண்டு அதன் பணி குறையவும் செய்கிறது. இத்தகைய காரணங்கள் கணையமாற்றம் முழு வெற்றி பெறத் தடைகளாக உள்ளன. கணையக்கொடை, தலையில் அடிபட்டு தோர் அல்லது மூளையிலுள்ள இரத்தக் குழாய் களின் அடைப்பாலோ, இரத்தக்கசிவாலோ இறக்க நேரிடுவோரிடமிருந்து கணையமெடுக்கலாம். முன் னரே கணையமளிக்க அவர்கள் ஒப்புதல் தந்திருக்க வேண்டும் அல்லது அவர் உறவினர்கள் அனுமதியளிக்க க வேண்டும். அவர்களுக்குச் சர்க்கரை நோய் இருந் திருக்கக்கூடாது. கணையத்தை அசுற்றும்போது அத்துடன் . ணைந்துள்ள கல்வீரல், தமனி, சிரை இரண்டை யும் சேதமுறாமல் சேர்த்து எடுக்க வேண்டும். கணை யத்தைத் தலைப்பகுதிக்கும் உடற்பகுதிக்கும் இடைப் பட்ட பகுதியில் வெட்டி எடுக்க வேண்டும். இரத்தக் குழாய்களைக் கட்டிவிட வேண்டும். எடுக் கப்பட்ட கணையத்தைக் குளிர்ந்த உப்புநீரில் வைக்கவேண்டும். சிறு கணையத்துடன் கூடிய கல்லீரல் தமனியில் நெகிழிக் (plastic) குழாய் வழியாகக் குளிர்ந்த சிட்ரேட் நீர்மத்தைச் செலுத்தி இரத்தம் உறையாமல் தூய்மை செய்யவேண்டும். கணைய நாளத்தில் பல துளைகள் உள்ள ஒரு நெகிழிக் குழாயைச் செலுத்தி, அது நழுவி விடாமல் தைத்துவிட வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட கணையத்தை நுண் ணுயிரற்ற ஒரு பாலித்தீன் பையில் பனிக்கட்டி கலந்த குளிர்ந்த நீரில் வைக்க வேண்டும். இங்ஙனம் பத்து மணிநேரம் வரை கணையத்தைப் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு மேலும் வைத்திருந்தால் கணையத்திலுள்ள நொதிகள் வெளியேறி அதைச் சேதப்படுத்தி விடும். கணையத்தைப் பொருத்துவதற்கு இரண்டு முறைகள் உண்டு. நோயுற்ற சுணையத்தை நீக்கி அந்த இடத்திலேயே மாற்றுக் கணையத்தைப் பொருத்துவது ஒரு முறையாகும். நோயுற்றதை நீக்காமல் மாற்றுக் கணையத்தை வேறோர் இடத்தில் பொருத்துவது இரண்டாம் வகையாகும். முதல் வகையே சிறந்தது. இதில் கணையத்தைப் பொருத்தும் போது அதன் நாளத்தை இரைப்பையுடன் இணைத்துவிடலாம். சிறுகுடலில் இணைத்தால் கணையநீர்க் கசிவு மிகுதியாகும். மேலும், வலக்கீழ்ப் புற வயிற்றுப்பகுதியில் கணையத்தைப் பொருத்து வது எளிதென்றாலும் சிறுநீரகமாற்றம் பின்னால் செய்யவேண்டிருப்பின் அந்த இடத்தை அதற்கென ஒதுக்கி வைப்பது நல்லது. சர்க்கரைநோய் உள்ளோ ருக்குச் சிறுநீரகக் கெடுதலும் பின்விளைவுகளில் ஒன்றாகும். அதனால் இந்த முற்காப்புத் தேவைப் படுகிறது. -ஆர்.பி.சண்முகம்