கத்தரிக் குடும்பம் 430
430 கத்தரிக் குடும்பம் நூலோதி. S.L.Kochhar, Economic Botany in the Tropics, Macmillan India, Madras, 1981. கத்தரிக் குடும்பம் சோலனேசி எனப்படும் சுத்தரிக் குடும்பம் இருவித் திலைக் குடும்பமாகும். இதில் பொருளாதாரச் சிறப்பு உள்ளன. னங்கள் துருவப் பகுதி வாய்ந்த பல களைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் இது பரவி யுள்ளது. இக்குடும்பத்திலுள்ள இனங்கள் 90. சிற்றி னங்கள் 2000 ஆகும். மொத்த இனங்களில் 50% மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் உள்ளன. வளரியல்பு. இக்குடும்பத் தாவரங்கள் ஒரு பருவ அல்லது பல பருவ இனங்களாகக் காணப்படும். பொது வாகச் சிறு செடி, செடி, மரம், கொடி ஆகியவை இக்குடும்பத்திலுண்டு. சொலானம் என்னும் ஒரே இனத்தில் இவ்வேறுபாடுகளைக் காணலாம். சில னங்களின் தண்டுகளில் முள்கள் காணப்படும். இலைகள் பொதுவாகத் தழைப்பகுதியில் மாற்றிலை யடுக்கு அமைப்பிலும், பூக்கும் பகுதி எதிரிலையடுக்கு முறையிலும் இருக்கும். இலையடிச் செதில்கள் இல்லை. இலைகள் தனித்தவை; முழுமையானவை: பிளவுபட்டிருக்கும். சில இனங்களில் காணப்படும் இலையமைப்பிற்கும் மஞ்சரியின் அமைப்பிற்கும் ஒட்டுதல் (adnation) என்னும் பிறவி நிகழ்ச்சியே காரணமாகும். இந்த இனங்களில் இலைக்காம்பும் மஞ்சரிக்காம்பும் தண்டுடன் இணைந்து விடுகின்றன. சால்பிக்ளாசிஸ் டாடூரா வகை ஒட்டுதல் சொலானம் அல்ரோபா சைம்ஷந்தஸ் மவர், தடைப்பட்ட மொட்டு,க,க', து, ஒரே கணுவைச் சேர்ந்த மலர்கள். அகலக்கறுப்புக் கோடுகன் ஒட்டுதல் பகுதிகளைக் குறிக்கின்றன.