பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/451

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கத்தரிக்‌ குடும்பம்‌ 431

வை அதாவது ஒரு கணுவில் காணப்படவேண்டிய இ ஓட்டுதல் காரணமாக அடுத்த மேற்கணுவுக்குச் செல் கிறது. இக்குடும்பத்தில் 3 வகை ஒட்டுதல்கள் பெறுகின்றன. களின் நடை டாட்டூரா ( Datura) வகை. இந்த வகைத் தாவரங் பூக்கும் பகுதியில் மாற்றிலையடுக்கை யும், இரட்டைக் கிளைத்தலையும் காணலாம். இங்கு இரட்டைக்கிளைத்தலால் ஒரு கணுவில் இரண்டு லைகள் எதிரிலை அடுக்குமுறையில் இருக்க வேண்டும். ஆனால் ஒட்டுதல் காரணமாக இரண்டு இலைகளுமே வேறுபட்ட அடுத்த கணுக்களுக்குச் செல்கின்றன. அக் அட்ரோப்பா (Atropa) வகை. இந்த இனத்தில் ஒவ்வொரு கணுவிலும் வேறுபட்ட அளவுள்ள இரண்டு இலைகளையும் ஒற்றைக் கிளைத்தலையும் காணலாம். இவ்விரு இலைகளில் சிறியது கணுவையும், பெரியது முந்தைய கணுவையும் சேர்ந் தவை. அதாவது வேறு இரண்டு கணுக்களைச் சேர்ந்த இலைகள் ஒட்டுதல் காரணமாக ஒரே கணுவில் காணப்படுகின்றன. மேலும் கணுவில் தோன்றும் இரண்டு குருத்துகளில் ஒன்றின் வளர்ச்சி தடைப்பட்டு விடுகிறது. வகை சொலானம் வகை. இதில் அட்ரோப்பா போல் இலை ஓட்டுதல் நடைபெறுவது மட்டுமல்லா மல் மஞ்சரி ஒட்டுதலும் நடைபெறுகிறது. ஆனால் மஞ்சரி ஒட்டுதல் முழுமையற்ற ஒட்டுதலானதால் மஞ்சரி, இலைவெளிக் கோணத்தில் (extra axillary) காணப்படுகிறது. இக்குடும்பத்தின் உள்ளமைப்பியல் சிறப்புப் பண்பு, சாற்றுக் குழாய்க் கற்றைகள் ஆகும். இங்கு இருபக்க ஒழுங்கு (icollateral) சாற்றுக்குழாய்க் (vascular) கற்றைகளைக் காணலாம். மஞ்சரி. இது தனித்த மலராகவோ சைம் வகை யாகவோ அமையும். மலர்கள். பூவடிச் செதில், பூக்காம்புச் செதில் கொண்டவை. இருபால் தன்மையுடையவை, முழுமை யானவை. ஒழுங்கானவை. ஆனால் சூலிலைகள் கோணலாக அமைந்துள்ளமையால் மலர்கள் ஒழுங் கற்றவை எனலாம். புல்லிவட்டம். 5 புல்லிகள் கொண்டவை. இணைந் தலை, நிலைத்தவை; ஃபைசாலிஸ் நைகேண்ட்ரா வைதேனியா முதலியவற்றில் தொடர்ந்து வளர் பவை. கனியே புல்லியால் சூழப்பட்டு விடும். 5. ஒழுங்கான அல்லிவட்டம். பொதுவாக ணைந்த அல்லிகளைக் கொண்டது. ஆனால் துணைக்குடும்பம் சால்பிக்ளாஸிடேயில் ஒழுங்கற்ற அல்விகளையும், அல்லிக்குழலின் பல வகைகளையும் காணலாம். குழல் வடிவம் நிகோடியானாவிலும் மணிவடிவம் பைசேலிஸ், அட்ரோப்பா ஆகியவற்றி கத்தரிக்குடும்பம் 431 லும் புனல்வடிவம் டாடூரா பெடூனியா ஆகியவற்றி லும் சக்கரவடிவம் சொலானத்திலும் ஈருதடு வடிவம் சால்பிக்ளாஸில், சைஷேந்தஸ் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. அல்லிக்குழல் நீளவாக்கில் மடிக்கப்பட்டு முறுக்கியிருக்கும். (எ.கா) ஊமத்தை. மகரந்தத்தாள்கள், 5 அல்லியிணைந்தவை; பொது வாசு அல்லிக்குழலுக்குள் அடங்கியிருக்கும்: சில இனங்களில் நீட்டிக்கொண்டிருக்கும். ஒழுங்கானவை. சால்பிக்ளாசிஸிலும் அதைச் சேர்ந்த இனங்களிலும் 4 அல்லது 2 மகரந்தத்தாள்கள் உண்டு. மகரந்தப் பைகள் நீள்போக்கில் அல்லது நுனியில் வெடிக்கும். சூலகம். இதில் சூவிலைகள் 2, சூலறைகள் பொதுவாக 2 இருக்கும். டாடூராவில் போலித் தடுப் புச் சுவரால் 4 அறைகளும் நைகேண்ட்ராவில் 3-5 அறைகளும் உள்ளன. கி யூபாவைச் சேர்ந்த ஹீனோ னியாவில் ஒரு சூல் கொண்ட ஓர் அறை உண்டு. சூலிலைகள் முக்கிய அச்சைப் பொறுத்துத் திருகி அமைந்திருப்பது இக்குடும்பத்தின் சிறப்புப்பண்பாகும். சூல்கள் எண்ணற்றவை. அவை அச்சொட்டு முறை யில் இருக்கும். பருத்த சதைப்பற்றான சூலொட்டுப் பகுதி (placenta) உள்ளது. கனி. சதைப்பற்றுடன் (berry) உள்ளது. உலர் வெடிகனிவகைகளும் காணப்படுகின்றன. சில வகை களில் ஒழுங்கற்ற வெடிக்கக்கூடிய சதைப்பற்றுக் கனி உண்டு. நிலைத்து, தொடர்ந்து வளரும் புல்லிகள் கனிகளுக்குப் பாதுகாப்புத் தருவதோடு கனி பரவுத லுக்கும் உதவி செய்கின்றன. முள்களோடு கூடிய புல்லிகள் கனிப்பாதுகாப்பில் பங்கு கொள்கின்றன. மகரந்தச் சேர்க்கை. பொதுவாக, அயல் மகரந்தச் சேர்க்கை பூச்சிகள் மூலம் நடைபெறும். மகரந்தத் தாள்கள் - சூலகத்தின் அடியில் காணப்படும். தேன் சுரப்பிகள் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய் கின்றன. நிகோடியானாவில் தன் மலட்டுத்தன்மை யால் தன் மகரந்தச் சேர்க்கை தவிர்க்கப்படுகிறது. சால்பிக்ளாஸிஸ் பூக்கள் மலர்வதற்கு முன்பே மொட்டு நிலையில் தன் மசுரத்தச்சேர்க்கை நடந்து விடும். தைக் கிளீஸ்டோகமி என்பர். வகைப்பாடு. துணைப் பிரிவு பைகார்பில்லேடே யில் இக்குடும்பம் ஒரு முக்கிய இடத்தைப் பெறும். படிமலர்ச்சி வகைப்பாட்டு வரிசையில் இக்குடும்பத் திற்கு முன்னால் அமைந்திருக்கும் குடும்பங்களின் மலர்கள் ஒழுங்கானவை; 5 மகரந்தத் தாள்களைக் கொண்டவை. ஆனால் இதை அடுத்து வரக்கூடிய குடும்பங்களின் மலர்கள் ஒழுங்கற்றவை. 4 மகரந்தத் தாள்களைக் கொண்டவை. செ சாலனேசி குடும்பத் தில் இவ்விருவகை மலர்களும் இருப்பதால் இதைப் படிமலர்ச்சியின் இணைப்பாகத் தாவரவியலார் கருது கின்றனர். வெட்ஸ்சீன். இக்கும்ப இனங்களை இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர். முதல் பிரிவில் கரு