பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 கத்தரிச்‌ செடி

432 கத்தரிச் செடி அரை வட்டமாக வளைந்திருக்கும். 5 மகரந்தத் தாள்களும் செயல்படும். அவை ஏறத்தாழ ஒரே உயரம் இருக்கும். இரண்டாம் பிரிவில் கரு சற்றே வளைந்திருக்கும். 8. 4 (அல்லது) 2 மகரந்தத்தாள் கள் : 4 ஆக இருந்தால் மாறுபட்ட உயரம் கொண் டவையாக இருக்கும். பொருளாதாரச் சிறப்பு இனங்கள். இக்குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய இனங்கள் நைகேண்ட்ரா. அட்ரோப்பா, ஹயோசிபேமஸ் ஃபைசேலிஸ், காப் சிகம். சொலானம், லைகோபெர்சிகான், மாண்ட்ர கோரா டாடூரா, செஸ்ட்ரம். நிகோடியானா, பெடூனியா சால்பிக்ளாஸ்சஷேந்தஸ் என்பவை. சொலானம் பெருவாரியான சிற்றினங்களைக் கொண்ட முக்கிய இனமாகும். சொ. நைக்ரம் (S. nigrum), மணித்தக்காளி; சொ. டார்வம் (S. torvum) கண்டைக்காய்; சொ. மெலஞ்ஜினா (S. melangina) கத்தரி ; சொ. சுரடென்சி (S, surat - tense) கண்டங்கத்தரி; சொ. டுபரோசம் (S. tubero- sum) உருளைக்கிழங்கு; சொ. டிரைலோபேட்டம் (S. trilobatum) தூதுவேளை, உணவாகவும், மருந் தாகவும் பயன்படும் செடிகள். பிரக்மான்சியா. ( Brugmansia Sp.) இதை மர ஊமத்தை என்பர். கோடை, நீலகிரி முதலிய மலை களில் தன்னிச்சையாக வளரும். இது ஆஸ்திரேலியா விலிருந்து புகுத்தப்பட்ட செடியாகும். ஊமத்தை போல் பூக்கள் காணப்பட்டாலும், தொங்கு நிலையி லிருக்கும். கேப்ஸிகம் ஃபுருடீசென்ஸ் (Capsium frutescens). மிளகாய். கே.ஆன்னுவம் (c.annum) ஊசிமிளகாய்: கார்ப்புச் சுவை மிக்கது. செஸ்ட்ராம் (Cestrum). இதை ஆங்கிலத்தில் இரவுராணி என்பர். இதன் பூக்கள் மணமுள்ளவை. சைபோமேண்ட்ரா பீடேசியா Cypomandra betacea}. மரத்தக்காளி டாடூரா மெட்டல் (D. meral). கரு ஊமத்தை லைகோபெர்சிகான் எஸ்குலெண்ட்ம் (L. escu- fantum). தக்காளி, தென் அமெரிக்காவைத் தாயக மாசுக் கொண்டது. நிகோடியானா டபேகம் (N. tabacum). யிலை; இது தென் அமெரிக்க இனமாகும். சைகாலிஸ் மினிமா (P. minima). தக்காளி. புகை சொடுக்குத் வைதேனியா சோம்னிஃபெரர (Withania Somnifera) . அசுவகந்தி அல்லது அமுக்கிராங்கிழங்கு. அட்ரோபா பலடோனா (Atropa belladona). இது ஐரோப்பிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டு இந்தியாவில் மயமலைச் சரிவில் பயிராகும் மருந்துச் செடியாகும். கண் மருத்துவத்தில் பயன் படும். இத்தாலி, ஸ்பெயின் நாட்டுப் பெண்கள் செடியின் இலைச் சாற்றைக் கண்ணில் இட்டுக் கொள்வதால் ஆண்களைக் கவரும் தன்மை கூடுகிறது என்று கருதினர். பெடூனியா சைஷேன்ந்தஸ், இவை தோட்ட அழகு செடிகளாகும். பிந்திய இனத்தை ஏழை களின் ஆர்க்கிட் என்பர். தி. ஸ்ரீகணேசன் கத்தரிச் செடி இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட கத்தரிச் செடி தொன்றுதொட்டு இந்தியாவில் பயிரிடப்பட்டு வருகிறது. சாதாரணமாகச் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிப் பயிர்களில் இதுவும் ஒன்றாகும். இது சமவெளிப் பகுதிகளில் ஆண்டு முழுதும் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. இளம் பிஞ்சும் முற்றிய காய்களும் சமைத்து உண்ணப் பயன்படும். ஆயுர்வேத முறைப்படி கத்தரி ஒரு நல்ல மூலிகை. நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு இது மிகவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. னவழி வகைகள்.கத்தரிச்செடி சொலனேசி என்னும் கத்தரிக் குடும்பத்திலுள்ள சொலேனம் என்னும் இனக்குழுவைச் சேர்ந்தது. இக்குழுவிலுள்ள மெலஞ்சீனா என்பது கத்தரியாகும். இந்தியாவில் சாகுபடியாகும் கத்தரியில் மிகுதியான இனம் உண்டு. காயின் வடிவமைப்பு, நிறம், செடியின் வளர்ச்சிப் போக்குப் போன்ற பண்புகளில் இவை வேறுபடு கின்றன. உருண்டை அல்லது முட்டை வடிவமான இனங்களை எஸ்குவாண்டம் என்றும், நீண்டு மெலிந்த காய்களையுடைய இனத்தைச் செர்பன்டைனம் என்றும், குறுகிய வயதுடைய குட்டையான இனத்தை டெப்ரஸ்ஸம் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தில் பயிரிடப்பட்ட னங்களில் பூசா ஊதா உருண்டை (pusa purple round), பூசா ஊதா நீளம் (pusa purple long), வெள்ளைக் கத்தரி (white brinjal), வரிக் கத்தரி (striped brinjal), கோ.1 கத்தரி, மதுரை 1 கத்தரி, அண்ணாமலைக் கத்தரி என்பவை பரிந்துரைக்கப் பட்டவையாகும். கோடை தட்பவெப்பநிலையும் மண்வளமும். கத்தரி ஒரு க்காலப் பயிராகும். உறைபனி, செடியை அழித்து விடும். உறைபனி இல்லாமல் நீண்ட நாள் குளிர் தொடர்ந்து இருந்தாலும் செடிகள் தாக்க முறும். நீண்ட வயதுடைய இனங்கள் குறைந்த உறைபனியைத் தாங்கக்கூடியவை. செடிகள்