பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 கத்தி மீன்‌

436 கத்தி மீன் பென்னாபியா மேக்ரோல்தால்மஸ் (penabia macroph thalmus) ஆகும். இம்மீன்கள் 30 செ.மீ வரை வளரக் கூடும். ஒரு மீட்டர் நீளம் வரை வளரக்கூடிய கூரல் புரோட்டோனிபியா'டைகாந்தஸ் (protonmibea diacan- thus) எனப்படும் கத்தாளை வகையைச் சேர்ந்த மீன் களும் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. கோத் எனப்படும் ஒட்டோலிதாப்டஸ் பையாரிட்டிஸ் Otolithoides Biaritis) என்னும் மீன்கள் மகாராஷ்ட் ரம், குஜராத் கடற்கரைப் பகுதிகளில் காணப்படு கின்றன. பெரிதாக வளரும் கத்தாளை மீன்களின் காற்றுப்பையை எடுத்துக் காயவைத்து அதை அயல் நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்தக் காற்றுப் பைகள் மதுவைத் தூய்மை செய்யப் பயன்படு கின்றன. மலேஷியா, இவை இந்தோனேஷியா. சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. சென்டிரிசிடே குடும்பத்தைச் சார்ந்தவையாகும். வை ஆம்ஃபிசைல் என்னும் பேரினத்தில் ஸ்குடேட்டா என்னும் இனத்தைச் சார்ந்தவையா கும். பொதுப் பண்புகள். இவற்றில் உண்மையான செவுள்களுக்குப் பதில் மாறுபட்ட போலிச் செவுள் களே (pseudobrancheae} காணப்படுகின்றன. செவுள் துளைகள் சற்று அகலமானவை. இம்மீன்களின் உடல் நீண்டு அகலக் கட்டையாகவோ மிக அழுத்த மாகவோ காணப்படும். மண்டையோட்டின் முன் எலும்புகள் நீண்ட குழாய் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளன. இதன் நுனியில் சிறிய வாய், பற் களின்றிக் காணப்படுகிறது. மார்பின் ஒரு பகுதி கடினமான அமைப்புகளாக விளங்குகிறது. இரண்டு முதுகுத் துடுப்புகளில் முதல் துடுப்புச் சிறியதாகவும், கடின முன் கொண்டதாகவும் காணப்படும். இரண்டு முதுகுப்புறத் துடுப்புக்களும் மிகவும் பின்னோக்கி அமைந்தவாறு காணப்படுகின்றன. வயிற்றுப்புறக் கீழ்த்துடுப்புகள் நன்கு வளர்ச்சியில்லா நிலையில் முள்ளற்றுக் காணப்படுகின்றன. உடலின் மேற்பரப் பில் செதில்கள் காணப்படுவதில்லை; செதில்கள் இருப்பினும் அவை சிறியனவாக உள்ளன. உடற் பரப்பு, சாதாரணமாகவே எலும்புத்தன்மை கொண் டுள்ளது. உடலில் பெரிய காற்றுப்பைகள் உள்ளன. இந்த மீன்களைப் பெருமளவில் எந்திரப் படகு களைக் கொண்டு இழு வலை (uraw net) மூலம் பிடிக்கின்றனர். இம்மீன்கள் கடலில் காணப்படும் சிறு மீன்களையும் இரால் மீன்களையும் உணவாகக் கொண்டு வளரும். இவை ஓர் ஆண்டில் கருத்தரித்து ஏறக்குறைய நாற்பது ஆயிரம் முட்டைகளையிட்டுத் தன் இனத்தைப் பெருக்குகின்றன. இவை இனப் பெருக்கம் செய்யும் காலம் மார்ச்- ஏப்ரல் மாதங் களாகும். கத்தி மீன் ஆர்.எஸ்.லால்மோகின் இம்மீன்கள் கத்திபோல் காணப்படுவதால் இப்பெயர் பெற்றன. இவை கடல்நீரில் வாழ்வன. கத்திமீன்கள் வாழிடம். கத்திமீன்கள் இந்தியக் கடல்களிலிருந்து சீனக் கடல் வரை காணப்படுகின்றன. தமிழகத்தில் சன்னைப் பகுதியில் வங்காள விரிகுடாவில் இம்மீன்கள் வாழ்கின்றன. உடல் அமைப்பு. வலிமையான மருங்கில் அமுக்கப் பட்ட உடலைக் கொண்டுள்ளது. தலையின் முற் பகுதி நீண்ட குழல் போன்ற மூக்காக மாறுபட் டுள்ளது. உடல் மேல் பகுதியின் கடின அமைப்புகள் பின்னோக்கி நீண்ட முள்களாக முடிவடைகின்றன.