கதம்ப உரு 437
முதல் முதுகுத் துடுப்பிற்குப் பின் மூன்று முள்களும் இரண்டாம் முதுகுத் துடுப்பிற்குப் பின் மூன்று முன் களும் காணப்படுகின்றன. வால் துடுப்பு மலப் புழைக்குப்பின் காணப்படுகின்றது. வயிற்றுப் பகுதி யின் மூன்றாம் விலா எலும்பிற்குக் கீழ்ப்பகுதியில் நன்குவளரா நிலையில் வயிற்றுத்துடுப்புகள் காணப் படுகின்றன. உடல் நிறம், வெளுத்த அல்லது வெள்ளி ரசம் பூசப்பட்டது போன்ற நிறத்தையோ வெண்மை உடலில் ஆங்காங்கே ஊதா நிறத்தையோ யான கொண்டிருக்கும். பெற்றோர் பாதுகாப்பு. சுத்தி மீன்கள் தங்கள் முட்டைகளைப் பாதுகாக்கச் சிறப்பான உருவ மாறுபாடுகளைப் பெற்றுள்ளன. ஆண் சுத்தி மீன் களே பாதுகாப்பமைப்பினைக் கொண்டுள்ளன. வால் பகுதியில் நீண்ட பை காணப்படுகிறது.வால் பகுதியின் இருமடிப்புத் தோல்கள் நடுக்கோட்டில் இணைவதன் மூலம் இப்பைகள் உருவாகின்றன. இப்பைகளில் முட்டைகள் செல்லும் விதத்தை அறிய இயலவில்லை. இப்பைகளுக்குள் பொரித்த குஞ்சுகள் சிறிய விலாங்கு மீன்களைப் போன்று காணப்படு கின்றன. இவை பை மடிப்புகளைப் பிரித்துக் கொண்டு வெளி வருகின்றன. பொதுவாக இச்சிறிய சுத்தி மீன்கள் மிசுக் குறைவாகவே நிந்தவல்லவை. கி. வாசுதேவன்- - கதம்ப உரு உயிரினங்களின் உறுப்புகளில் உள்ள சில பகுதிகளில் திடீரென்று சில மாற்றங்கள் நிகழும். இதற்கு உடல் சடுதிமாற்றம் (somatic mutation) என்று பெயர். இதன் விளைவாக ஒரு சிறு பகுதி ஏனைய பகுதியை விட மாறுபட்டுக் காணப்படும் நிலையே கதம்ப உரு விளிம்பு வட்டக் கதம்பஉரு கதம்ப உரு 437 படம் 1. பகுதிக் கதம்பஉரு