பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 கதம்ப உரு

438 கதம்ப உரு (chimera) எனப்படும். கதம்ப உரு இது பகுதிக் வட்டக் கதம்பஉரு sectoral chimera), விளிம்பு (periclinal chimera), மிகைக் கதம்பஉரு (hyper chimera), குரோமோசோம் கதம்பஉரு (chromosome chimera) என நான்கு வகைப்படும். பகுதிக் கதம்ப உரு. ஓர் உறுப்பில் மரபியலால் மாறுபட்ட திசுக்கள் காணப்படுகின்றன. நெல்லின் சில பூ வகைகளில் இளஞ்சிவப்பு உமியும், பச்சை நிற உமியும் உள்ளன. இவற்றைக் கலப்புச் செய்து பார்த்தபோது ஒரே மஞ்சரியில் சில பூக்கள் இளஞ் சிவப்பு நிறமாகவும், வேறு சில பச்சையாகவும் இருந்தன. நெல், சோளம், கம்பு ஆகியவற்றின் தண்டு. இலைகளில் பச்சை, வெள்ளைப் பகுதி போன்றவற்றில் கதம்ப உருக்களைக் காணலாம். கண்டங்கத்தரி, மணித்தக்காளி ஆகியவற்றைக் கலந்த போது அவ்வின இலையில் ஒரு பகுதி கண்டங்கத் தரியைப் போலவும், மறுபகுதி மணித்தக்காளியைப் போலவும் இருந்தது. விளிம்பு வட்டக் கதம்ப உரு. மரபியலால் மாறு பட்ட இரு திசுக்கள் ஒன்றையொன்று அடுத்து இரு வட்ட வடிவத்தில் காணப்படுகின்றன. தக்காளி, மணித்தக்காளிகளைக் கலந்தபோது, தக்காளியைப் போலப் பூக்களும் கனிகளும் மணித்தக்காளியைப் போல் இலைகளும் மயிரும் காணப்பட்டன. பெலார்கோனியம். இலையின் விளிம்பு வெள்ளை யாகவும், உள்பகுதி பசுமை நிறமாகவும் காணப் படுவது மற்றோர் எடுத்துக்காட்டாகும். மிகைக் கதம்ப உரு. மேலே கூறிய இருவகைக் கதம்ப உருக்களிலும் மரபியலால் மாறுபட்ட திசுக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தனித்தனியாகக் காணப்படு கின்றன. ஆனால் மிகைக் கதம்பஉருவில் மரபியலால் மாறுபட்ட திசு வகைகள் பிரித்துணர முடியாதவாறு ஒன்றுடன் ஒன்று விரலிக் காணப்படுகின்றன. குரோமோசோம் கதம்பஉரு. வேர் நுனியிலுள்ள செல் சிலவற்றில் இருமயச் (diad) செல்களும், வேறு சிலவற்றில் நான்குமயச் (tetrad) செல்களும் கலந்து காணப்படுகின் றன. ஆய்வு முறையில் உண்டாக்கப்பட்ட சில கிளை முழுதும் இருமயமாகவும் நான்கு மயமாகவும் அல்லது சோர்கம் இருமய ஒருமயமாகவும் காணப்பட்டன. ஹேலெபென்ஸ் என்னும் 40 குரோமோசோம் 20 சோளப்பயிரில் குரோமோசோம் களுடைய கிளை உண்டாயிற்று. 40 குரோமோசோம் கிளைகள் மெல்லியவை; இவைகள் குறுகலானவை. 20 குரோமோசோம்கள் உள்ள கிளைகள் தடித்த தண்டுகளுடன் அகன்ற இலைகளைப் பெற்றிருக்கும். களுடைய மிளகாய் விதைகளில் பல மயங்களை உண்டாக்கு வதற்காகக் கால்சிஸின் (colchicine) பயன்படுத்தப் பட்டது. இவ்விதைகளை முளைக்க விட்டதில் 244 செடிகள் உண்டாயின: அவற்றுள் 54 நான்குமயங் களாகவும், 4 செடிகள் விளிம்பு வட்டக் கதம்பஉரு வுடனும் காணப்பட்டன, இந்த நான்கு செடிகளின் புறத்தோல் செல்கள் நான்குமயமாகவும், மகரந்தங் கள் இருமயமாகவும் இருந்தன. விளிம்பு வட்டக் கதம்பஉருப் பெற்ற செடிகளின் புறத்தோல் செல்கள் நான்குமயமாகவும், மகரந்தங்கள் இருமயமாகவும் இருந்தன. விளிம்பு வட்டக் கதம்பஉருப் பெற்ற செடிகளின் புறத்தோல் செல்களில் மட்டும் நான்கு மயக் குரோமோசோம்கள் அமைந்திருந்தன. அதற்குக் கீழேயுள்ள செல்கள் (sub-epidermal cells} இருமயங்களாக இருந்தமையால் அவை இயல்பான செடிகளாகவே காணப்பட்டன. இவற்றிலிருந்த பெலார்கோனியம்