440 கதிர்க்குருவி
440 கதிர்க்குருவி ரெஸீம் பனேக்கீள் எனப் புல் குடும்பத்தின் சிறு கதிர் மஞ்சரி. இக்குடும்பத் தில் உள்ள சிறுகதிர் மஞ்சரியில் உள்ள மஞ்சரித்தண்டு ராச்சில்லா (rachilla) எனப்படும். இதன் தொடக்கத் தில் உள்ள சில பூவடிச் செதில்கள் வளமற்றவை. அவை வளமில்லா குளும்கள் (sterile glumes) படும். கதிர் சிறு மஞ்சரியின் நுனியில் உள்ள சில குளும்களும் பூக்களில்லாமல் வளமற்றவையாக இருக் கும். இடையில் உள்ள சில குளும்களும் வளமுடை யவை அதாவது அவற்றின் கோணத்தில் பூக்களைப் பெற்றிருக்கும். அவை லெம்மா எனப்படும். லெம்மா பின் கோணத்தில் சிறு காம்பற்ற ஒரு பூ உண்டு. இதற் குப் பேலியா (pala) என்னும் பூக்காம்புச் செதில் உண்டு பேலியாவின் கோணத்தில் பூ உள்ளது. பூவில் இதழ்கள் உருவிலும், அளவிலும், எண்ணிக்கையிலும் குறைந்து காணப்படும். பொதுவாக இரு பிசிறு களாகவோ, இரு சிறு புள்ளிகளைப் போன்ற உருவம் உடையவையாகவோ இருக்கும். இவற்றிற்கு லாடி கூல்கள் என்று பெயர். பூவில் 3 மகரந்தக் குழாய்களும், ஒரு சூலகமும் காணப்படும். சூலகத்தில் நீண்ட சூலகத்தண்டு, தூவிகளுடைய தூரிகை போன்ற கிளைத்த சூலகமுடி ஆகியவை காணப்படும். சைப்பிரேசீக் குடும்பத்தின் சிறுகதிர் மஞ்சரி: இக் குடும்பத்தில் உள்ள சிறு கதிர் மஞ்சரிகள் கூட்டுச் சிறுகதிர் மஞ்சரிகளாக உள்ளன. அதாவது மஞ்சரிகள் கிளைத்த நுனிவளர் மஞ்சரியாகவோ (panicle), கிளைத்த கதிர்வகை மஞ்சரியாகவோ அமைந்து அத்தகைய கிளைகளின் நுனியில் சிறுகதிர் மஞ்சரி களைப் பெற்றுள்ளன. எ.கா. சைபிரஸ். சிலவற்றில் ஸ்பேடிக்ஸ் கூட்டு மஞ்சரிகள் நுனிவளரா மஞ்சரி ஆகவும் (cymose type) இருக்கும். எ. கா: ரின்கோஸ்போரா. மடல் கதிர் மஞ்சரி (spadix). கதிர் வகை மஞ்சரி யில் உள்ளதைப் போன்ற காம்பற்ற பூக்கள் சதைப் பற்றுள்ள மஞ்சரித்தண்டில் அடிமுதல் நுனிநோக்கிய வரிசையில் பதிக்கப் பெற்றிருக்கும். மஞ்சரியில் உள்ள தனிப்பூக்களில் இதழ்கள் இல்லை. எனவே கவர்ச்சிக் கும், பாதுகாப்பிற்கும் மஞ்சரித்தண்டை முழுது மாகவோ, குறைவாகவோ ஸ்பேத் (spathe) என்ற மடல் பூவடிச்செதில் மூடியிருக்கும். எ.டு. ஏராய்டேக் குடும்ப மஞ்சரிகள். கதிர்க்குருவி ண கே.ஆர்.பாலசந்திர கணேசன் இக்குருவி, பறவைகளில் மியூசிகபிடே குடும்பத்தின் உட்குடும்பமான சைல்வீனெ குடும்பத்தைச் சேர்ந்தது. வீட்டுத் தோட்டங்களிலும் வேலிச் செடிகளிடையே யும் 'ட்டீ... ட்டீ... ட்டீ...' எனக் குரல் கொடுத்தபடி தாவித் தாவிப் பறந்து இரை தேடும் தையல் சிட்டும் இக்குடும்பத்தைச் சேர்ந்ததே. கதிர்க்குருவி கள் (warblers) தையல் சிட்டைப் போன்ற மெலிந்து நீண்ட உடலும் கூரிய அலகும் தனியே இணைத்து வைத்தது போன்ற மேலும் கீழும் அசைந்தாடியபடி இருக்கும் குறுகிய நீண்ட வாலும் கொண்டவை. முகத்தில் சில குருவிகள் முள் மயிர்களைப் பெற் றிருக்கும். இந்தியாவில் காணப்படும் கதிர்க்குருவி