442 கதிர்க்குருவி
442 கதிர்க்குருவி மற்ற ரென்களைவிடச் சற்றுப் பெரியது. உடலின் மேற்பகுதி பழுப்பு நிறமாகவும் மார்பும் வயிறும் இள மஞ்சள் நிறமாகவும் இருக்கும், இனப்பெருக்க காலத் தில் "பிட் பிரெட்டி... பிட் பிரெட்டி... பிட் பிரெட்டி... என மூன்று அசையில் பாட்டு இசைக்கும். தென்னிந்தியாவில் பரக்கக் காணப்படும் இக்கதிர்க் குருவிகளின் வேறுபாட்டை அறிய மிகவும் உதவியாக இருப்பது இனப்பெருக்க காலத்தில் உயர அமர்ந்து இவை பாடும் பாட்டே எனலாம். அகன்ற வால் கதிர்க்குருவி (schoenicola platyura) உடலின் மேற்பகுதி சிவப்புத் தோய்ந்த பழுப்பு நிற மாக இருக்கும். தெளிவற்ற குறுக்குப் பட்டைகளோடு கூடிய கரும் பழுப்புநிற வால் அகன்று, நுனி வட்ட விளிம்புடையதாக இருக்கும். சிட்டுக் குருவி அளவின் தான இதைத் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த கொடைக்கானல், நீலகிரி, தென் கேரளம் ஆசி கிய பகுதிகளில் 900 மீட்டர்-200 மீட்டர் உயரம் வரை காணலாம். காலை மாலை அந்தி களில் மட்டும் புல்புதர்களிடையே 'பிங்... பிங்' எனக் குரல் கொடுத்தபடி தனித்து இரைதேடும் இது அரி தாகவே காணப்படும். புல் கதிர்க்குருவி (chactorni's striaius) கதிர்க்குருவி களுள், உருவில் பெரியதான இது பார்வைக்குவேலைக் காரக் குருவியை ஒத்தது.உடலின் மேற்பகுதி இளம் பழுப்பாக ஆழ்ந்த பழுப்புக் கோடுகள் கொண்டதாக இருக்கும்; வால்நீண்டு கறுப்பும் வெள்ளையுமான நுனியைப் பெற்றிருக்கும்.மார்பும் வயிறும், மங்கிய வெளிர் நிறங்கொண்டவை. இரண்டு கண்களின் முன் பகுதியிலும் இது ஐந்தைந்து முள் முடிகளைப் பெற்றுள்ளது. புல்புதர்களிடையே விரைந்து தாவிப் பறக்கும்போது இந்த முடிகள் நெகிழ்ந்து கண்ணை மறைத்துப் பாதுகாக்கின்றன. முட்காடுகளைச் சுற்றிப் பரந்து கிடக்கும் சதுப்பான புல்வெளிகளில் தனித்தும் இணையாகவும் மறைந்து திரியும் இது அரிதாகவே கண்ணில்படும். இனப்பெருக்கக்காலமான மே - செப்டம்பர் வரையான பருவத்தில் ஆண் மட்டும் பாடியபடியே சற்றே உயரப் பறந்து வட்டமிடும். பெரிய நாணல் கதிர்க்குருவி (Acrocephalus Stentoveus). கொண்டைக்குருவி அளவினதான இதன் உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பழுப்பு நிற மாகவும், தொண்டை வெண்மையாகவும், மார்பும் வயிறும் மங்கிய வெளிர் நிறமாகவும் இருக்கும்.