பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்க்குருவி 443

குளிர் காலத்தில் தென்னிந்தியா முழுதும் வலசை வரும் இது கேரளத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. இவை தனித்தோ இணையாகவோ நீர் நிலைகளை அடுத்து வளர்ந்துள்ள நாணல் புதர்களில் மறைந்து திரியும். இது ஒரு புதரில் இருப்பதை இடைவிடாது ஒலிக்கும் கே... கே' அல்லது 'சுர்ர்...சுர்ர்' என்ற குரலிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உருவில் இதை யொத்த ஆனால் அளவில் சிறிய பிளைத் நாணல் கதிர்க்குருவி (A. dumentorum) தென்னகத்திற்குப் பெருமளவில் குளிர்காலத்தில் வலசைவரும். 'சக்' எனச் சில வினாடிகளுக்கு ஒருமுறை ஒற்றைக் குரல்கொடுத்த படி புல் புதர்களிடையே தனித்தே தாவித்தாவிப் பறந்தபடி இரை தேடும். மத்திய ஆசியாவில் இனப் பெருக்கம் செய்யும் இது ஆகஸ்ட் -அக்டோபர் வரை யுள்ள காலத்தில் பெரும் எண்ணிக்கையில் கோடியக் கரை வழியாக இலங்கைக்குச் சென்று பின் மீண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அங்கிருந்து அதே வழியாக வடக்கு நோக்கிப் பயணம் மேற்கொள்கிறது. இலைக் கதிர்க்குருவி (Phylloscopus affinis). சிட்டுக்குருவியைவிட உருவில் சிறியதான இதன் உடலின் மேற்பகுதி பசுமை தோய்ந்த பழுப்பு நிற ண மாகவும் மார்பு, வயிறு கதிர்க்குருவி 443 ம் ஆகியவை மஞ்சளாகவு இருக்கும். இது குளிர்காலத்தில் மிகுந்த எண்ணிக்கை யில் தென்னிந்தியாவிற்கு வலசை வருகிறது. இலை, தழை களிடையே தரையை ஒட்டிய புதர்களில் தாளிப் பறந்தும், தலைகீழாகத் தொங்கியபடியும் பூச்சி களைப் பற்றி உண்ணும். தென்னிந்திய மலைப்பகுதி களுக்கு வலசை வரும் பருத்த அலகுக் கதிர்க் குருவி (P. magnirostris) உருவில் சற்றுச் சிறியது. இதைப் போன்றே பழுப்பும் மஞ்சளுமான வண்ணமும், மஞ்சள் நிறக் கண் புருவ அமைப்பும் கொண்டது. மரங்களில் உயரே உள்ள இலை தழைகளிடையே தாவிப் பறந்து இரை தேடும் பழக்கம் உடையது. ஆகையால் எளிதில் கண்ணில் படாது. குளிர் காலத் தில் 'யா-வீ-வீ என எழுப்பும் சீழ்க்கைக் குரலி லிருந்தும், 'டிர் -டீ' அல்லது 'வீஇ - சீ' எனக் சுத்தும் கூப்பிடு குரவிலிருந்தும் இது இருப்பதை அறிந்து கொள்ளலாம். வெண்தொண்டைக் கதிர்க்குருவி ( Sylvia hortensis). சிட்டுக்குருவி அளவினதான இது கருத்த தலை யும். வெண்தொண்டையும் கொண்டது. உடலின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், மார்பு, வயிறு