444 கதிர்கள்
444 கதிர்கள் மங்கிய வெளிர் நிறமாகவும் இருக்கும். தென்னிந்தி யாவிற்குக் குளிர்காலத்தில் வலசை வரும் இது வடமேற்கு இந்தியா, ஈரான், துருக்கி ஆகிய பகுதி களில் இனப்பெருக்கம் செய்கிறது. நீர்வளமிக்க பகுதிகளைச் சார்ந்த புதர்வெளிகளிலும் மரங்களிலும் மறைந்து இரைதேடித் திரியும் இது புழுபூச்சிகளோடு மலர்களில் தேன், காய், கனி ஆகியவற்றையும் உண வாகக் கொள்ளும். உருவில் இதைவிடச் சற்றுச் சிறியதான ஆனால் தோற்றத்தில் இதைப் பெரிதும் ஒத்த சைபீரியா வெண்தொண்டைக் கதிர்க்குருவி (Syivia curraca) குளிர்காலத்தில் மிகுந்த எண்ணிக்கை யில் சைபீரியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வலசை வருகிறது. வறள் நிலங்களில் முள்மரக் காடுகளில் மரக்கிளைகளில் தொத்தியும் தாவிப் பறந்தும் பூச்சி களைப் பிடிக்கும். வெண்தொண்டை மற்றும் இலைக் கதிர்க்குருவிகளிடம் அலகு எட்டாத தொலைவி லிருக்கும் பூச்சிகளைக் கால்களை நீட்டி எட்டிப் பிடிக்க மேற்கொள்ளும் முயற்சியில் குப்புற விழும் படியான நிலையை அடைந்து, பின் இறக்கைகளை விரித்துச் சமாளித்துக்கொள்ளும் வேடிக்கையான பழக்கம் உள்ளது. வெண்தொண்டையன்கள் பொது வாக அமைதியாக இரை தேடினும் குளிர்காலம் முடிந்து வடக்கே திரும்பும் காலம் நெருங்கும்போது 'சிவ்வி,சிர்ரி சிவ்வி சிர்ரி' எனக் குரலெடுத்து மெல்லக் கத்துவதைக் கேட்கலாம். க. ரத்னம் நூலோதி. Salim Ali and Ripley. S. Dillon, Hand Book of the Birds of India and Pakistan, Vol. VIII, Oxford, 1973. கதிர்கள் ஒளியியலில் கதிர் (ray) என்பது ஒளிக்கற்றை செல் லும் திசையைக் குறிக்கும். ஒளி ஒருவகை ஆற்றல் என்பதால் அது பாயும்போது. ஆற்றல் ஓரிடத்தி லிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றம் பெறுகிறது. இவ்வாற்றல் செல்லும் திசையே ஒளிக்கதிர் எனப் படுகிறது. பரவுவது நியூட்டனின் நுண்ணிமக்கொள்கையும்(Newton's corpuscular theory), ஹைகென்ஸின் அலைக்கொள்கை யும் (Huygens wave theory) ஒளியாற்றல் பற்றி விளக்குவன. எனவே ஒளிக்கதிர் பற்றி அறிதல் இன்றியமையாததாகிறது. நியூட்டனின் கொள்கைப் படி,ஓர் ஒளிமூலம் (Source) உமிழும் நுண்ணிமத் துகள்கள் நேர்கோட்டுப்பாதையில் செல்கின்றன. இப்பாதையில் செல்லும் ஒளிக்கற்றை ஒளிக்கதிர் களால் ஆனது, இக்கதிர்கள் மூலம் ஒளியின் நேர்க் கோட்டு இயக்கம், எதிரொளிப்பு, ஒளி விலகல், முழு அக எதிரொளிப்பு போன்ற முக்கிய பண்புகள் விளக்கம் பெறுகின்றன. ஹைகென்ஸ் கொள்கை, ஒளியாற்றல் அலை யியக்கத்தால் (wave motion) பரவுகிறது என்பதாம். இங்கு ஒளிக்கதிர் என்பது அலையியக்கம் செல்லும் திசையைக் குறிக்கும் ஒரு கற்பனைக்கோடு என வரையறுக்கப்படுகிறது. எதிரொளிப்பு, ஒளிவிலகல் போன்ற நிகழ்வுகளில் ஒளியாற்றல், அலைக்குத்துகள் (wave normals) வழியாகப் பரவுகிறது. இந்த அலைக்குத்துக்களே கதிர்கள் எனப்படுகின்றன. எனவே அலைகள் செல்லும் திசையைக் குறிக்கும் இக்கதிர் கள் அலை முகப்புக்கு '(wave front) நேர்குத்தாக அமைந்தவை என்பது புலனாகும். கதிர்ப்பு மூ.நா.சீனிவாசன் ஒரு பரப்பின் பொலிவைக் (brightness) குறிக்கும் இயற்பியல் பண்பு கதிர்ப்பு (radiance) ஆகும். அகச் சிவப்புக்கதிர்கள், கட்புலன் ஒளி, புறஊதாக் கதிர்கள் ஆகிய கதிர்வீச்சுகளின் சராசரி கதிர்ப்பை ஓர் எளிய கதிர் வீச்சளவி (radiometer) கொண்டு அளக்கலாம். இக்கருவியின் ஒவ்வொரு முனையிலும் சிறு துளை காண்ட உருளை வடிவக் குழாய் உள்ளது. இரு துளைகள் மூலம் கருவியை வந்தடை யும் ஒளிக்கற்றையின் முழுக் கதிர்வீச்சுத்திறனை அளக்க ஒரு முனையில் ஒளிமின்கலம் (photo cell} ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சராசரி பாயத்தை அளக்கும் ஒளி மின்சுலம் குழாய் கதிர்ப்பு கொண்ட விழுகதிர்கள் D D கதிர்வீச்சு 01 கதிர் வீச்சளவி என்பது இருதுளைகளுக்கிடைப்பட்ட தொலைவு (அதாவது உருளையின் நீளம்) எனவும், Aj, A, என்பன ஒளிமின்கலத்தால் அளக்கப்படும் கதிர்ப்புப் பாயம் (flux) எனவும் கொண்டால்