பக்கம்:அறிவியல் களஞ்சியம் 7.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 கதிர் வீச்சளவியல்‌

448 கதிர்வீச்சளவியல் வெப்பவியல் அவை உணர் கருவிகள் பொதுவாக அனைத்து அலைநீளங்களிலும் செயல்படும். ஆனால், சற்று மெதுவாகவே கதிர்களை உணரும் (response ). ஏனெனில், பயன்படும் பொருள் முழுதும் குடாக்கப்படவேண்டும். மாறாக, ஒளி மின்கடத்தி உணர்கருவிகள் கதிர்களைச் விரைவாக சற்று உணரும். ஆனால், அதன் உணர்வு நுட்பம் (sensiti- vity) கதிர்களின் அலைநீளத்தைச் சார்ந்து இருக்கும். ஏனெனில், குறிப்பிட்ட ஆற்றல் கொண்ட கதிர்கள் மட்டுமே உணர் பொருளின் எலெக்ட்ரான் பரவலில் மாற்றத்தை உண்டாக்க முடியும். சர் வில்லியம் ஹெர்ஷெல் பாதரச க்ரூக்ஸ் பயன்படுத்திய வில்லியம் அளவியும் சர் வெப்பநிலை பயன்படுத்திய தொங்கும் கருந்தகடும் வெப்பப் பகுப்பான்களின் முன்னோடிகள் ஆகும். 1947 இல் கோலே உருவாக்கிய கோலே காற்றழுத்த உணர்வானே (golay pneumatic detector) பரவலாகப் பயன்படும் வெப்பம் உணர்கருவியாகும். அதன் அமைப்பு வரைபடம் 3 இல் காட்டப்பட்டுள்ளது. காற்றழுத்த அறையில் (pneumatic chamber) குறைந்த வெப்பக் கடத்தல் கொண்ட வளிமம் (எ.கா.செனான்) இருக்கும். வெப்பக் கதிர்களை உட்கவர்வதால் இவ்வளிமம் சூடாகி விரிவடையும். அதனால் மெல்லிய கண்ணாடியின் வளைவில் மாற் றம் ஏற்படும். கண்ணாடி மெல்லிய நெகிழி (plastic) ஏட்டால் ஆனாது. அதன் மீது மெல்லிய ஆன்ட்டி மனி பூச்சுப் பூசப்பட்டு இருக்கும். மற்றொரு மூலத்திலிருந்து இக்கண்ணாடி மீது படும் ஒளிக்கற்றை எதிரொளிக்கப்பட்டு ஒளிக் கலத்தில் (photo cell) விழுகிறது. வெப்பத்தால் கண்ணாடியின் வளைவில் ஏற்படும் மாற்றம், எதிரொளிக் கற்றையிலும் மாற்றத்தை உண்டாக்கும். இதை ஒளிக்கலம் கணக்கிடுகிறது. கோலே உணர்வான் நம்பத்தக்கது. எளிதில் செய லாக்க வல்லது சாதாரண வெப்பநிலையிலேயே இதைச் செயல்படுத்தலாம்; நீண்ட காலம் பயன்படுத் தலாம். இது கதிர்வீச்சளவியலில் ஒரு செந்தரமான உணர்கருவியாகப் பயன்பட்டு வருகிறது. வெப்ப மாற்றம் நிகழும்போது டிரைகிளைசின் சல்ஃபேட், பேரியம் டைடனேட், லித்தியம் நியோபேட் போன்ற பொருள்களின் இருமுனைத்திருப்புத் திறன் (dipole moments) மாறுகிறது. இவ்வியல்பு வெப்ப விளைவு (pyro electric effect) எனப்படும். இவ்வியல்பு வெப்ப மின்பகுப்பானில் (pyro-electric detector) பயன் படுகிறது. மின் இரு வேறு உலோகங்களின் (எ.கா. பிஸ்மத், ஆன்ட்டிமனி) சந்திகளுக்கு (junctions) இடையே வெப்பநிலை வேறுபட்டு இருக்குமானால் அச்சந்தி களுக்கிடையே சிறு மின்னழுத்தம் தோற்றுவிக்கப் படுகிறது. இவ்வியல்பு கொண்ட வெப்பமின் இரட்டை கள் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறியப் பயன் படுகின்றன. பல இரட்டைகள் கொண்ட பகுப்பான் கள் வெப்பமின் இரட்டை அடுக்கு எனப்படும். வெப்பக் கதிர் அளவி அல்லது போலோமீட்டரில் (bolometer) உள்ள உணர் உறுப்பு (detecting element) உலோகம் அல்லது குறை கடத்தியால் ஆனது. வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும்போது, இவ்வுறுப் பின் மின்தடையில் மாற்றம் ஏற்படுகிறது. வெப்ப நிலை சார்தடை (thermistor) இயல்பு கொண்ட இவ்வுறுப்புகளின் உணர் திறன் குளிர்ந்த வெப்ப நிலையில் கூடுகிறது. எனவே மிகு உணர்வு நுட்பம் கொண்ட வெப்பக் கதிர் அளவியில் உள்ள உற்றறி உறுப்புகள் நீர்ம ஹீலியம் வெப்பநிலையில் (4K) குளிர் விக்கப்பட்டு இருக்கும். இதில் பயன்படும் பொருள் களில் கரி, பிளாட்டினம் சுருள், உலோக ஆக்சைடுகள். ஜெர்மேனியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. குறை கட த்திகள் ஒளிமின் பகுப்பானின் உணர் உறுப்புகள் ஆகும். இவை தம்மியல்புக் (intrinsic) குறைகடத்தியாகவோ, கலப்புக் (doped) குறைகடத்தி யாசுவோ இருக்கலாம். எ.கா. ஜெர்மேனியம், காரீய சல்ஃபைடு, காரீய டெலுரைடு, இண்டியம் ஆன்ட்டிமொனைடு. இடைவெளி ஆற்றல் அளவு (band gap energy) குவாண்ட்டக் கதிரை (quantum of radiation) இக்குறை கடத்திகள் அகச்சிவப்புக் கதிர்கள். படம் 4. குளிர்விக்கப்பட்ட கம்பி முனைகள், திரவ ஹீலியம், உற்றறி உறுப்பு சன்னல், உணர்வான் தொகுதியின் அமைப்புப்படம்.