452 கதிர்வீச்சு இயற்பியல்
452 கதிர்வீச்சு இயற்பியல் 2 கின்றன. இவை இடையில் காணப்படும் பொருள் களின் மீது படிந்து பரவும். மின்காந்த அலை களாகப் படியும்போது ஏற்படும் அழுத்தம், கதிர் வீச்சு அழுத்தம் (radiation pressure) எனப்படும். மின்காந்த அலைகளில் இருந்து வெளிப்படும் வெப்பக் கதிர்வீச்சில் ஆற்றலும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஆற்றலில் பயன்படு உந்தமும் (momentum) இருப்பதால் இத்தகைய அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு வெப்ப மின்காந்தக் கதிர்கள் படியும் பரப்பில், சராசரி அழுத்தம் E என்னும் சமன் பாட்டில் இருக்கும். இதில் E,என்பது ஏற்படும் மின் புலத்தின் வீச்சு:E என்பது மின் தடையம் அல்லது இருமின் (dielectric) மாறிலி ஆகும். இத் தகைய கதிர்கள் படியும் பரப்பு வெப்பக் கடத்தும் தன்மையதாகவும். முழுமையான அளவில் எதி ரொளிக்கும் தன்மையுடையதாகவும் இருப்பின் நிலை யான வெப்ப அலைகள் தோன்றும். இந்நிலையில் ஏற்படும் வெப்ப அழுத்தம், வெப்பத்தை உள்ளேற் கும் பரப்பில் ஏற்படும் சராசரி அழுத்தத்தைவிட இருமடங்கு இருக்கும். இவ்வழுத்தம் மிகக் . குறை வாகவோ, ஏறத்தாழ 10-9 நியூட்டன்/ சதுர மீட்டர் அளவிலோ இருக்கும். கதிர்வீச்சு இயற்பியல் கே.ஆர்.கோவிந்தன் நோய்களைக் கண்டறியவும், அவற்றை நலப்படுத் தவும் கதிர்வீச்சைப் பயன்படுத்தும் அறிவியல் துறைக்குக் கதிர்வீச்சு இயற்பியல் (radiological physics) என்று பெயர். அயனியாக்கும் தன்மை கொண்ட கதிர்களும் அயனியாக்கும் தன்மை இல்லாத கதிர்களும் எ கா. கேளா ஒலி (ultra sound) இத்துறையில் பயன்படுகின்றன. கதிர்வீச்சுப் பற்றி யும் அதன் தன்மைகள் குறித்தும் ஆராய்ந்து அறிந்த இயற்பியல் அறிவியலாரின் பட்டறிவு மருத்துவத்துறையில் பயன்படுவதால், இத்துறை மருத்துவ இயற்பியல் என்றும் குறிப்பிடப்படும். கதிர்வீச்சு உயிரியல், கேளா ஒலி, அகச்சிவப்புக் கதிர்கள். உருக் கொள்கை (image theory), கணிப் எலெக்ட்ரான் கற்றை தாமிர நேர்மின் வாய் டங்ஸ்டன் தாங்கி கண்ணாடி உறை எலெக்ட்ரான் கற்றை தாக்கி பயனுள்ள எக்ஸ் சதிர்கள் டங்ஸ்டன் எதிர்மின்வாய் சுழலும் நேர் மின்வாய் நேர்மின்வாய் சுழற்சி அச்சு எதிர்மின்வாய் எதிர்மின்வாம் குளிப்புள்ளி சுழலும் நேர்மின்வாய் எலெக்ட்ரான் கற்றை எக்ஸ்கதிர் படம் 1. இ கண்டறி கதிரியக்கவியளில் பயன்படுத்தப்படும் எக்ஸ்கதீர்க் குழாயின் அமைப்பு. (ஆ) நிலையான நேர்மின்வாய் குவிப் புள்ளியைத் தோற்றுவித்தலை விளக்கும் படம். (இ) சுழலும் தேர்மின் வாயைப் பயன்படுத்தும் எசுஸ்-கதிர்க்குழாய். (a)